ஒருவருக்கு நாத்திகன் – மதச்சாராதவன் என சான்றளிக்கக் கூடாதது ஏன்? என குஜராத் உயர்நீதிமன்றம் கேள்வி?

குஜராத் மாநில உயர்நீதி மன்றத்தில் ராஜீவ் உபாத்யா (வயது 35) ஆட்டோ ரித்சா ஓட்டுநர், ஓர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தொடர்பாக குஜராத் மாநில அரசை, குஜராத் உயர்நீதிமன்றம், ஓர் இந்திய பிரஜைக்கு ‘நாத்திகன் – மதம் சாராதவன்’ என சான்றிதழ் வழங்கக் கூடாதது, ஏன்? என மாநில அரசை, உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மனுதாரர் உபாத்யாயா, இரண்டு வருடங்களுக்கு மேலாக, மாவட்ட ஆட்சியருக்கு, தன்னை இந்து மதத்திலிருந்து, மதமாற்ற சட்டத்தின்படி தன்னை ஓர் நாத்திகன் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கே:       ஜாதியின் பேரால் வன்முறையைத் தூண்டும் ஜாதிச் சங்கம் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அடங்க வழி என்ன?                 – மகேஷ், சிவகாசி ப:           1. அவர்களை அம்பலப்படுத்தி, பொதுமக்களைத் திரளச் செய்யும் விழிப்புணர்வுப் பிரச்சாரம்.                 2. அரசுகள் அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை, அழுத்தம் பலவகையிலும் தருவது. கே:       தி.மு.க. ஆட்சிக் காலங்களில் மட்டுமே அரசு ஊழியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதும் அ.தி.மு.க. அரசு அதைத் தகர்ப்பதும் ஏன்?                 – ச.அபிநவ், தூத்துக்குடி […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் தலித்துகளும் இதுவரை வெளிவராத சில தகவல்கள்

    நூல்             : பெரியார் தலித்துகள் முஸ்லீம்கள் தமிழ்த் தேசியர்கள் ஆசிரியர்      : அ. மார்க்ஸ் வெளியீடு     : அடையாளம் பதிப்பகம்.   விலை: 160. பக்கங்கள்: 175     (“திராவிடர் கழகத் தலைவர் மதிப்பிற்குரிய ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு’’ எனக்கூறி, நூலாசிரியரால் அர்ப்பணிக்கப்பட்டது இந்நூல்). பெரியாரையும் திராவிடர் இயக்கத்தையும் தலித்துகளுக்கு எதிராக நிறுத்தும் போக்கொன்றைச் சில ஆண்டுகளாக ஒரு சிலர் மேற்கொண்டுவருவதை நாம் அறிவோம். யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. தலித் பிரச்சினையில் […]

மேலும்....

மருத்துவம் : முள்ளங்கியென்னும் முக்கிய உணவு

உணவில் சிறந்தது முள்ளங்கி. வெள்ளை, சிவப்பு ஆகிய இரு நிறங்களில் விளைச்சலாகின்றது. இதில் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதால் பல நோய்களுக்கு மருந்தாகிறது. முள்ளங்கியில் ஒரு வித காரத்தன்மையும் நெடியும் இருக்கும். இத்தன்மை கந்தகச்சத்தால் உண்டாகிறது. இந்த கந்தக்க கூறுகளே அதன் மருத்துவத் தன்மைக்கு காரணமாகின்றன. முள்ளங்கியில் உள்ள நார் சத்து மலச்சிக்கலை நீக்கவல்லது. குடலில் தங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. மூலம், பவுத்திரம் போன்ற நோய்களுக்கும் முள்ளங்கி சிறந்த மருந்தாகும். இதில் வைட்டமின் ஈ சத்து அதிகமுள்ளதால் நோய் […]

மேலும்....

இயக்க வரலாறான தன் வரலாறு(225) : தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல் மறியல் போராட்டம்!

 அய்யாவின் அடிச்சுவட்டில்… கி.வீரமணி மன்னார் மாவட்டம் அடம்பனில் 28 சிங்கள இராணுவத்தினரை நேரடிச் சமரில் சுட்டு வீழ்த்தி விட்டு மார்பில் குண்டு ஏந்தி வீர மரணமடைந்த மன்னார் மாவட்ட விடுதலைப் புலிகளின் ராணுவ தளபதி விக்டருக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் சென்னை பெரியார் திடலில் 05.11.1986 அன்று நடைபெற்றது. இந்த வீரவணக்கம் பொதுக்கூட்டத்தில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்நாடு காமராசர் காங்கிரஸ் கட்சித் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டு இளைஞர்கள் விடுதலைப் புலிகளின் […]

மேலும்....