இயக்க வரலாறான தன் வரலாறு(240) : குயில்தாசன் – அற்புதம்மாள் மகளின் திருமணத்தை நடத்திவைத்தேன்!

அய்யாவின் அடிச்சுவட்டில் ….. கி.வீரமணி பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் திருச்சியில் இயங்கிவரும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் கைக்குழந்தைகள் முதல் வளர்க்கப்பட்டு, பி.ஏ., பி.எட்., பட்டம் பெறும் அளவில் கல்வி போதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளனர். அப்படி உருவாக்கப்பட்டவர்களுள் ஈ.வி.ஆர்.எம்.குணவதியும் ஒருவர். அவரின் இணை ஏற்பு விழா 24.7.1991 அன்று சென்னை பெரியார் திடலில் சிறப்புடன் நடைபெற்றது. மணமக்களை உறுதிமொழி கூறச்செய்து வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்தை நடத்தி வைத்தேன்.    ஈ.வி.ஆர்.எம்.குணவதி – பெ.குமாரசாமி ஆகியோர் இணையேற்பு விழாவில் […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (58) : மனிதன் மானாக மாற முடியுமா?

– சிகரம் “வாசு மன்னன் தன்னரசைத் தன் மகன் விவாசனனுக்கு அளித்து, புஷ்கர தீர்த்தம் அடைந்து, அங்கு புண்டரீகாக்ஷனை முன்னிட்டு ஒரு யாகம் செய்ய, யாகத் தீயிலிருந்து ஓர் உருவம் தோன்றி வாசுவின் முன் நின்று, “உங்கள் ஆணை என்ன?’’ எனக் கேட்டது. வாசு அந்த உருவத்தைப் பார்த்து, “நீ யார்? எங்கிருந்து வந்தாய்?’’ என வினவினான்.  அதற்கு அவ்வுருவம் கூறிய வரலாறு கீழே தரப்பட்டுள்ளது: முற்பிறவியில் வாசு, காசுமீர மன்னனாக இருந்தான். அவன் ஒரு சமயம் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (50) : இருபது கேள்விகளும் எமது பதில்களும்

– நேயன் கேள்வி 13: பிராமணர்களால் உருவாக்கி சிறப்பாக உலகளவில் செயலாற்றி வரும் டி.சி.எஸ், இன்போசிஸ், காக்னிசென்ட் போன்ற கம்பெனிகளில் தமிழன், வேண்டாம் வேண்டாம், திராவிடன் வேலை செய்யக் கூடாது என்று உங்களால் அறிக்கை விட முடியுமா? உங்கள் குடும்ப உறுப்பினரை அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க முடியுமா? பதில் 13: பிச்சையெடுத்துப் பிழைக்க இந்த நாட்டுக்கு வந்து, தமிழன் கட்டிய கோயிலுக்குள் புகுந்து, ஆட்சியில் புகுந்து பிழைப்பு நடத்தும் பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாத நிறுவனங்களில் […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்![3]

– மரு.இரா.கவுதமன் ‘குழந்தையின்மை’ (Sterile) சமூகத்தில் பெரிய இழிவாகக் கருதப்படுகிறது. ‘கடவுளின் சாப’மே இந்நிலைக்குக் காரணமாகக் கூறப்பட்டது. இந்நிலைக்குக் காரணமாக ‘பெண்கள்’ முழுமையாக பழி தூற்றப்பட்டனர். ‘மலடி’ என்று ஆணாதிக்க சமூகம் அவர்களை குற்றம் சாட்டியது. இக்கொடுமைக்கு புகுந்த வீட்டுப் பெண்களும் உடந்தையாக இருந்தனர். பல பெண்கள் ‘வாழா வெட்டி’கள் என்கிற பட்டத்துடன் பிறந்த வீட்டிற்கு துரத்தப்பட்டனர். இதை சாக்காக வைத்து, ஆண்கள் மறுமணம் செய்து கொண்டனர். ‘மலடி’ என்று பெண்களை இழிவுபடுத்திய சமூகம் ‘மலடன்’ என்று […]

மேலும்....