சிறப்புக் கட்டுரை : நோபல் அறிஞர்களின் வரிசையில் தமிழர் தலைவர்

சமா.இளவரசன் விருதுகள் அதன் பெயர்களால் மரியாதை பெறுவதில்லை. எதற்காக, யாரால், யாருக்கு வழங்கப்படுகிறது? அந்த விருதினை இதற்கு முன்பு பெற்றிருப்போரின் சிறப்பு ஆகியவற்றைக் கொண்டுதான் விருதுகளின் சிறப்பு மதிப்பிடப்படுகிறது. விருது பெறுவோரின் சிறப்பு ஒரு புறம் என்றால், விருது வழங்குவோரின் சிறப்புகள், தகுதிகள் போன்றவைதாம் விருதுக்குச் சிறப்புச் சேர்ப்பவை. விமர்சனங்களாலும், கண்டனங்களாலும், எதிர்ப்புகளாலும், அவதூறுகளாலும் அலங்கரிக்கப்படும் ஒருவருக்கு, எப்போதும் இவற்றையே எதிர்கொண்டும், எதிர்பார்த்தும் தன் கடமையில் கண்ணாயிருக்கும் ஒருவருக்கு வியப்புறும் விருதொன்று வழங்கப்பட்டுள்ளது. 2019 செப்டம்பர் 22-ஆம் […]

மேலும்....

நேர்காணல் : ஆசிரியர்க்கு அதிகம் கோபம் வரும் ஆனால், அது எப்போதும் நன்மை தரும்!

சா.முகமது உஸ்மான் அவர்களுடன் நேர்காணல் திரு.சா.முகமது உஸ்மான் அவர்கள் ஓய்வு பெற்ற சென்னை மாநகராட்சி அலுவலர். ஆசிரியரின் கல்லூரிப் பருவத் தோழர் அதே நட்போடு இன்றும் எழுபது ஆண்டுகாலமாக நட்பில் இருவரும் தொடர்கின்றனர். பல்வேறு காலகட்டத்தில் ஆசிரியரோடு நெருங்கிப் பழகி ஆசிரியருக்கு நல்ல தோழராக அன்பும், அக்கறையும் கொண்டவர். பெரியார் பற்றாளர். அண்ணாவின் மீது மதிப்பும் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் பெற்றவர். சென்னை மாநகராட்சியில் கடைநிலை ஊழியராக இருந்து தன் ஆற்றலால் பதவி உயர்வு பெற்று வருவாய்த் […]

மேலும்....

நேர்காணல் : ஆசிரியரை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்!

டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் அவர்களுடன் நேர்காணல் டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் மிகச் சிறிய கிராமத்திலிருந்து மருத்துவம் படித்து தனது கடின உழைப்பால் மருத்துவத் துறையில் உயர் பதவிகள் பலவும் பெற்றவர். 34 ஆண்டுகளாக அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் தேர்வுக் குழு உறுப்பினராகவும், சமூகநலத் துறையில் நாட்டின் பல பகுதிகளில் மருத்துவ அலுவலராகவும் பணியாற்றியுள்ளார். ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, எத்திராஜ் கலைக்கல்லூரி, எம்.பி. —-நீரிழிவு மருத்துவமனை போன்ற நிறுவனங்களில் கவுரவப் பேராசிரியராக செயல்பட்டவர். அவருடனான […]

மேலும்....

நேர்காணல் : ஆசிரியர் காலத்தில் திராவிடர் கழகம் உச்சத்தைத் தொட்டுள்ளது!

 வரியியல் அறிஞர் ச.இராஜரத்தினம் அவர்களுடன் நேர்காணல் ச.இராஜரத்தினம் அவர்கள் இந்திய வருவாய்த் துறையில் (IRS) வருமானவரி அலுவலர். உதவி ஆணையர் மற்றும் ஆணையராகப் பணி புரிந்தவர். வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் உறுப்பினராக இருந்து, 1985ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றவர். தற்போது வழக்கறிஞராகவும், வருமானவரி ஆலோசகராகவும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராகவும் செயல்பட்டு வருகிறார். ஆசிரியரின் நட்புக்கும் அன்புக்கும் உரியவர். ஆசிரியருடன் உங்களின் முதல் சந்திப்பு? ஒரு முக்கியமான காலகட்டத்தில் ஆசிரியருக்கும் எனக்குமான தொடர்பு ஏற்பட்டது. 1976இல் பெரியார் […]

மேலும்....

சிறப்புக் கட்டுரை : உலகப்பன்!

ப.திருமாவேலன் பொருளாதார உலகமயமாக்கலை எதிர்ப்போர் நாம். ஆனால், பெரியாரிய உலகமயமாக்கலை ஆதரிப்போர் நாம்! ஏனென்றால், பெரியாரியம் என்பது ஓர் இனத்துக்கோ, ஒரு மொழிக்கோ, ஒரு மாநிலத்துக்கோ, ஒரு நாட்டுக்கோ உரியதல்ல; இவற்றுக்குள் அடங்கிவிடக் கூடியதும் அல்ல. அது உலகளாவியது. ‘கடவுளை மற; மனிதனை நினை’ என்பது அனைத்துலகுக்கும் பொதுவானது. ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்பது அனைத்துலகுக்கும் பொதுவானது. ‘சுயமரியாதை தேவை’ என்பது அனைத்துலகுக்கும் பொதுவானது. ‘பகுத்தறிவு கொள்’ என்பது அனைத்துலகுக்கும் பொதுவானது. ‘மனிதருக்குள் ரத்தபேதம் இல்லை’ […]

மேலும்....