நூல் அறிமுகம்

நூல்: புரட்சிப் பா பகர்வன் திருவள்ளுவர் ஆசிரியர்:  தமிழ்மறையான் வெளியீடு: புத்தர் அறிவுலகம்,                    திருவள்ளுவர் தமிழ் இலக்கிய மன்றம்,                     6,3ஆவது அவென்யூ,                                      அசோக் நகர்,                    சென்னை-83. தந்தை பெரியார் ஏற்று, போற்றிய தமிழரின் அறிவுச் செல்வமாம் திருக்குறளை ஆய்வு செய்து ஆய்வு மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் பயன்பட்டு அவர்களின் சிந்தனைப் போக்கை மாற்றியமைக்கும் வகையில் இந்நூலை எழுதியிருக்கிறார் ஆய்வாளர் தமிழ்மறையான். திருக்குறளில் உள்ள சொற்களுக்கு உரையாசிரியர்களால் திணிக்கப்பட்ட மூடநம்பிக்கை விளக்கங்களை […]

மேலும்....

குறும்படம்

‘பொண்ணு ஒன்னும் கிடைக்கல’ தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆண் எதிர்பார்ப்பது போல, பெண்ணும் எதிபார்ப்பாள் என்பதை சமூகம் இன்னமும் முழுமையாக ஏற்க மறுக்கிறது. மாற்றங்கள் பெருமளவு வந்துவிட்டாலும், கண்ணுக்குப் புலப்படாத ஆண் ஆதிக்கச் சுவர் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. இந்த முக்கியமான பிரச்சனையை ரசிக்கக்கூடிய திரைக்கதையுடன் நல்ல நகைச்சுவையுடனும் கையாண்டு வரதட்சனை, வயது, நிறம் இன்னபிறவற்றையும் பகடி செய்து ஆண் பெண் சமத்துவத்தை நிலைநாட்ட முயல்கிறது ‘பொண்ணு […]

மேலும்....

தைப்பொங்கல் விழா

-மு.கீதா தலைகுனிந்த பயிரால் தலைநிமிர்ந்த தமிழரினம் தன்னிகரில்லா உழவினைப் போற்றி தரணிக்கு உணர்த்தும் பண்பாட்டு விழா!   வெடித்த வயல்களில் நிறைந்த சருகுகள் வற்றிய நீர்நிலைகளைக் கண்டு ஓலமிட கைவிரித்த காவிரியும் அடிவயிற்றில் அடிக்க உழவரின் கண்ணீரில் நனைந்ததே!   காவிகளின் சூழ்ச்சியை முறியடிக்க கருப்புச் சட்டை சூழ எழுந்தது படை… கார்மேகமென திரண்டதே திராவிடம் தைப்பொங்கல் திருநாளை வரவேற்க தகதகவென எழுந்ததே எழுச்சிப்படை!   உழவர்தம் வாழ்வே உலகிலுயர் வாழ்வாய் உயரட்டும். வீரியமாய் விளைந்த விதைகள் […]

மேலும்....

வாசகர் மடல்

‘உண்மை’ ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். ‘உண்மை’ சனவரி 1 – 15 இதழினைப் படித்தேன். அதில் கட்டுரைகள், கதைகள், சில குறிப்புகள் ஆகியவை அனைத்தும் அருமை. திருச்சியில் நடந்த கருஞ்சட்டை பேரணி குறித்த தகவல்கள்  அருமை. இதுபோன்ற கருஞ்சட்டை பேரணிகளை தமிழகத்தின் பல இடங்களில் நடத்த வேண்டும். என்னைப் போன்ற இளைஞர்களிடம் பெரியாரினைக் கொண்டு சேர்க்கும் பணியினை தீவிரப்படுத்துங்கள். குறிப்பாக, கொங்கு நாட்டில் இவற்றையெல்லாம் செய்யுங்கள். ஏனெனில் தற்சமயம் இப்பகுதிகளில் புதிது புதிதாக புதிய பெயர்களில் மதவாத […]

மேலும்....

தமிழில் முதல் சிறுகதை?

தமிழில் முதல் சிறுகதை எது? என்ற தலைப்பில்  முனைவர் ஆர்.எசு.யாக்கோபு (சேக்கபு) ஒரு சிறிய நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இதன் முதல் பதிப்பு 2013இல் வெளியாகியுள்ளது. தமிழ் இலக்கியவரலாற்றில் வ.வே.சு.(ஐயரின்) ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற சிறுகதைதான் முதல் சிறுகதை என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் மகாகவி பாரதிதான் ‘துளசிபாய்’ என்ற முதல் சிறுகதையை எழுதியவர் என ஆய்வாளர்கள் சிலர் ஆதாரம் காட்டி வருகின்றனர். ஆனால், எழுத்தாளர் ஆர்.எசு.யாக்கோபு அவர்களின் தேடுதல் முயற்சிகளில்  சாமுவேல் பவுல் (ஐயர்) எழுதிய […]

மேலும்....