முகப்புக் கட்டுரை : இந்தியாவே எதிர்நோக்கும் இணையிலா வழிகாட்டி!

ஆர்.எஸ்.எஸ்ஸின் அடித்தளத்தில், ஆரியப் பார்ப்பனர்கள் ஆதிக்க வெறியுடன் சனாதனத்தைச் சட்டமாக்கி, 95% மக்களைச் சூத்திரர்களாக்கி, அவர்களின் உரிமைகளைப் பறிக்கத் துடிக்கும் பா.ஜ.க. ஆளும் சூழலில், அதனை முறியடித்து இந்தியாவின் மதச்சார்பின்மையையும், அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் காக்க இந்தியாவிற்கே வழிகாட்டும் திறன் பெற்றவராய் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திகழ்கிறார்கள். அதை நாம் மட்டும் சொல்லவில்லை. வடஇந்தியத் தலைவர்களே அதைப் பலமுறை கூறியுள்ளனர். மேனாள் பிரதமர் வி.பி.சிங்: “இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழகத்தின் தலைவராக இருந்தாலும், இவரது […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : முரண்பட்ட மூடநம்பிக்கைப் பண்டிகை “கார்த்திகைத் தீபம்”

தந்தை பெரியார்  மதத்தின் பெயரால் ஏற்பட்ட பண்டிகைகளின் மூலமாகவே நமது நாட்டுச் செல்வங்களும், மக்களின் உழைப்பும் பெரிதும் வீணாகிக்கொண்டு வருகின்றன என்பதை நாம் பலதடவை எடுத்துக்காட்டிப்பேசியும், எழுதியும் வருகிறோம். எவ்வளவு பேசினாலும், எவ்வளவு எழுதினாலும் நமது மக்களுக்கு இன்னும் அப்பண்டிகைகளில் உள்ள அபிமானமும், மூடநம்பிக்கையும் ஒழிந்த பாடில்லை. அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் என்பதைப்போல, அடிக்கடி அவற்றின் புரட்டுகளை வெளிப்படுத்தி வருவதனால் நமது மக்களுக்கு அவைகளின் உண்மை விளங்கக்கூடும் என்று கருதியே நாமும் இடைவிடாமல் எழுதிக்கொண்டு வருகிறோம். […]

மேலும்....

தலையங்கம் : ஒத்த கருத்துள்ளோர் ஒன்றுசேர்ந்து ஈழத்தமிழர் உரிமை காக்க வேண்டும்!

இலங்கை அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்தே ராஜபக்சேவின் தம்பியான கோத்தபய ராஜபக்சே தேர்வாகியுள்ளார்;  அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சஜிதா பிரேமதாசா தோல்வி அடைந்துள்ளார். வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே முந்தைய ராஜபக்சே அரசு ஆட்சியிலிருந்தபோது, இன அழிப்பு வேலையில் ஈடுபட்டவரே! இந்த தமிழர் இன ஒடுக்கல் – இன அழிப்பு வேலையை வரலாறு ஒருபோதும் மறைத்துவிட முடியாது. அவருடைய அண்ணன், முன்னாள் அதிபர் ராஜபக்சேவையே மிஞ்சும் அளவுக்கு – இந்தப் புதிய அதிபர் – இராணுவத் […]

மேலும்....

பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர்

நினைவு நாள் : 06.12.1956 ஜாதி ஒழிப்பு என்ற விஷயத்தில் மாத்திரமே நாங்கள் ஒத்த கருத்துடையவர்கள் என்பது அல்ல. இந்து மதம், இந்து சாஸ்திரங்கள், இந்துக் கடவுள்கள், தேவர்கள் என்பவர்கள் பற்றிய இந்து மதப் புராணங்கள் இவைகளைக் குறித்தும்கூட எங்கள் இரண்டு பேர்களின் கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்குச் சமமாக இந்தியாவில் யாரையும் சொல்ல முடியாது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே இதை நான் கூறியிருக்கிறேன்.” – தந்தை பெரியார் (விடுதலை 20.6.1972)

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

தாழ்த்தப்பட்ட சகோதரர்களை “பறையன்’’ என்றே அரசு ரிக்கார்டுகளில் குறித்து வந்ததை எதிர்த்து “ஆதிதிராவிடர்’’ என்று குறிக்க வேண்டும் என்ற சென்னை மாநகராட்சியில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி, பிறகு அதை அரசே ஏற்கச் செய்தவர் நீதிக்கட்சித் தலைவரான டாக்டர் சி.நடேசனார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....