இயக்க வரலாறான தன் வரலாறு(235) : திருப்பத்தை ஏற்படுத்திய ‘திராவிடர் மாநாடு’

அய்யாவின் அடிச்சுவட்டில்… கி.வீரமணி 1.10.1989 அன்று மயிலாடுதுறையில் மா.கந்தசாமி_க.தனம் ஆகியோரின் மகள் தமிழ்ச்செல்வி, திருச்சி கே.ஏ.இராமு_பட்டு ஆகியோரின் மகன் கோவிந்தன் ஆகியோருக்கும், மயிலாடுதுறை க.நாகராசன்_பட்டுரோசா ஆகியோரின் மகள் புகழேந்தி, தஞ்சாவூர் ஆர்.நடேசன்_சொர்ணம்மாள் ஆகியோரின் மகன் சந்திரன் ஆகியோருக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா என் தலைமையில் நடைபெற்றது. மணமக்களை வாழ்த்தி உரையாற்றும்போது, நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்றார் புரட்சிக்கவிஞர். இது நல்ல குடும்பம் மட்டுமல்ல; இது கொள்கைக் குடும்பமும்கூட! எனவே, இங்கே பல்வேறு கோணங்களிலே கட்சிகளை […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : மனிதநேய வாழ்நாள் சாதனை விருது

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அமெரிக்க மனிதநேயர் சங்கம் வழங்கியது! மஞ்சை வசந்தன் அமெரிக்காவில் 75 ஆண்டுகளாக மனிதநேயத்திற்கு குரல் கொடுக்கிற, அறிவியல் மனப்பான்மை கொண்ட, அறம் சார்ந்த சுயநலமற்ற, பொதுநல நோக்குடைய அமைப்பு அமெரிக்க மனிதநேயர் சங்கம் (American Humanist Association). இந்த அமைப்பின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது’  (Humanist Lifetime Achievement Award) வழங்கப்பட்டது. அவரது சமூகநீதி மற்றும் சுயமரியாதை குறித்து மக்களிடம் […]

மேலும்....

தலையங்கம் : அண்ணா பல்கலைக்கழகத்தில் வன்முறையைத் தூண்டும் கொலை நூல் பகவத் கீதை பாடநூலா?

பெரியார் மண்ணில், அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘பகவத் கீதை’ விருப்பப் பாடமாக வைக்கப்படும் என்று துணைவேந்தர் சொல்வதா? ஒரு மாதத்திற்குள் இந்த  அறிவிப்பைப் பின்வாங்காவிடில், தமிழ்நாடு முழுவதும் அறப்போர் கிளர்ச்சி – தொடர் போராட்டம் நடைபெறுவது உறுதி! உறுதி!! என்று திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அண்ணா பல்கலைக் கழகம் தனியார் பல்கலைக் கழகமல்ல! அண்ணா பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக்கழகம் அல்ல. முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகம். மத்திய அரசின் […]

மேலும்....

வரலாற்று நாயகர்கள் : வள்ளலார், காமராசர்

வள்ளலார் பிறப்பு: 5.10.1823 வள்ளலார் பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பிலும், மூடநம்பிக்கை ஒழிப்பிலும், சடங்குகள் எதிர்ப்பிலும் முனைப்புக் காட்டியவர். மனித நேயத்தையும் தாண்டி உயிர் நேயம் வளர்த்தவர். ஏழைகளின் பசிப்பிணி போக்கிய சமதர்மவாதி. காமராசர்  நினைவு நாள் : 2/10/1975 காமராசர் தமிழ் இன மக்களுக்குப் ‘பச்சைத் தமிழர்’; காமராசர் தமிழின மக்களுக்குக் கண்ணொளியானவர். தமிழ்நாட்டுக் கல்வி வளர்ச்சிக்குக் காரணம் _ தந்தை பெரியார்; காரியம் – காமராசர் என்று ‘ஆனந்த விகடன்’ ஒருமுறை எழுதியிருந்தது. தமிழர்களின் வாழ்வுக்கு […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

  தந்தை பெரியார் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை தார் கொண்டு அழித்துப் போராட்டம் நடத்தியபோது  அதற்கு எதிராக தார்மீது மண்ணெண்ணெய் ஊற்றி அழித்தவர்தான் ம.பொ.சி. என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....