தலையெழுத்து!

ரயில் சிநேகிதன், பஸ் சிநேகிதன், நாடக மேடைச் சிநேகிதன், சினிமாக் கொட்டகைச் சிநேகிதன் _ இவ்வாறு நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் திடீர் திடீரென்று எத்தனை எத்தனையோ சிநேகிதர்கள் தோன்றி தோன்றி மறைகிறார்களல்லவா? அதே மாதிரிதான் செங்கண்ணனும் என்னுடைய கடற்கரைச் சிநேகிதனாகத் தோன்றினான். ஆனால், மற்றவர்களைப்போல்அவன் மறைந்து விடவில்லை; தினசரி கடற்கரைக்குப் போகும்பொதெல்லாம் என் கண்களுக்குக் காட்சியளித்துக் கொண்டேயிருந்தான். என்மீது அளவில்லாத நம்பிக்கை அவனுக்கு. இதற்குக் காரணம் என்னவென்றே எனக்குப் புரியவில்லை. இத்தனைக்கும் அவன் ஒரு நாளாவது என்னைப் […]

மேலும்....

தலைவருக்கு ஒரு மாநிலம்

அமெரிக்காவின் விடுதலைப் போராட்ட வீரருக்கு பெயரிடப்பட்ட மாநிலம் வாசிங்டன் மாநிலம். தலைநகரை வாசிங்டன் டி. சி. (டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா) (Washingdon D.C.)  என்று அழைப்பார்கள். வாசிங்டன் இங்கிலாந்திடம் தோற்றுப் போகும்படி படைகளை இழந்து பழக்கப் படாத சிறு அளவு வீரர்களைக் கொண்டு முதல் வெற்றியடைந்தார். பின்னர் முழு வெற்றி அடைந்ததும் அவரை மன்னராக்க வேண்டினர். அவர் பதவியே வேண்டாம் என்றார்.கடைசியில் தலைவராக ஒப்புக் கொண்டார்.அப்போது தலைநகரம் பிலடெல்பியா! பின்னர் தான் மூன்று மாநிலங்கள் கொடுத்த இடத்திலே […]

மேலும்....

சாதிப்பாகுபாட்டுடன் கூடிய சுதந்திரம் கேலிக் கூத்தானது

நூல்: தவத்திரு தர்மதீர்த்த அடிகளாரின் ‘இந்துமதக் கொடுங்கோன்மையின் வரலாறு’ஆசிரியர்: மலையாளத்திலிருந்து தமிழில்: வெ.கோ.பாலகிருஷ்ணன்நூல் வெளியீடு: சாளரம்,348 – எ.டி.டி.கே.சாலை,இராயப்பேட்டை, சென்னை-600 014.விலை: ரூ. 120/-   பக்கங்கள்: 272 உலகில் உள்ள எந்த நாட்டையும்விட அதிகமான ஞானிகளையும் சீர்திருத்தவாதி-களையும் ஆசிரியர்களையும் இந்தியா பார்த்துவிட்டது. இந்தியாவுக்கு என்று தனித்த எதிர்பார்ப்புகளும் உன்னத நம்பிக்கைகளும் உள்ளன. இவையெல்லாம் இந்தியாவைக் காப்பாற்றிவிடவில்லை. உள்நாட்டு சுரண்டல்காரர்களாலும் புரோகிதர்களாலும் வழிநடத்திச் செல்லப்பட்ட இந்துக்கள் தேசியத் தற்கொலைக்கே இட்டுச் செல்லப்பட்டனர். புதிய கருத்துகளுக்கு ஏற்றபடி தங்கள் வாழ்க்கையை […]

மேலும்....

புரட்சிக்கவிஞர் கவிதைகள்

புது வாழ்வு புதுவாழ்வு வந்ததுகாண் பொங்கல் நாளில்புன்வாழ்வு தீர்ந்ததுகாண் திராவி டத்தில்!எதுவாழ்வு? மேற்கொள்ளும் நெறிதான் என்ன?என்பவற்றை அழகாக விளக்க மாகஇதுநாளில் எழுதவந்த அறிஞன் தன்னைஎன்நாவால் மனமார வாழ்த்து கின்றேன்.புதுவாழ்வு திராவிடர்கள் கைகள் தோறும்பொலிக; அதுஎன்றென்றும் வாழ்க நன்றே! திராவிடரின் நன்மைக்கே உழைப்போன்; எந்தத்தீமைக்கும் உளம் அசையான்; அறிவு மிக்கான்;ஒருவ(ன்)னால், தைப்பொங்கல் பொங்கும் நாளில்ஊரெல்லாம் மகிழ்ச்சிவிழா எடுக்கும் நாளில்வருகின்ற புதுவாழ்வை நாட்டார் எல்லாம்வருக என வரவேற்க! ஆத ரிக்க!திரு எய்த, அறம் ஓங்க, உரிமை எய்தித்திராவிடர்கள் பல்லாண்டு வாழ்க […]

மேலும்....

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

கவி இது கபி என்பதின் சிதைவானால் குரங்கு என்று பொருள்படும். அப்போது அது வடசொல் என்றால் நாம் ஏற்றுக் கொள்ளத் தடையில்லை. பா என்னும் பொருளைத் தரும் போது அது (கவி) தூய தமிழ்ச் சொல்லே யாகும். கவிதல் என்பது தல் இறுதி நிலை பெற்ற தொழிற்பெயர். கவிகை என்னும் போது, அது கை இறுதிநிலை பெற்ற தொழிற்பெயர். கவிதை என்பதில் அது போல தை இறுதிநிலை என்க, நடத்தை என்பதிற் போலவே. எனவே கவிதல் கவிகை. […]

மேலும்....