எட்டாம் வகுப்பு மாணவன் சாதனை!

சூரிய ஆற்றலால் விதைக்கும் கருவி! நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் விருது! புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே, பழந்தினாபட்டி கிராமத்தில் உள்ள  செயின்ட் செபஸ்தியார் மெட்ரிக் பள்ளியில் 8ஆ-ம் வகுப்பு படிக்கும் சுபாஷ், சோலார் மூலம் விதை விதைக்கும் கருவி உருவாக்கி யுள்ளார். நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா வழங்கும் சிறந்த கண்டுபிடிப்பு விருதை இவர் பெற்றுள்ளார். சிறு வயது முதலே, பள்ளிகளுக்கு இடையே நடக்கும் பல்வேறு அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளார் சுபாஷ். “விவசாயம் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… 149 – கி.வீரமணி

நெஞ்சுரத்தின் உருவகம் என்.ஆர்.சாமி! நஞ்சையா மறைவு நீதிமன்றம் பெரியார் நிறுவனங்களை நிர்வகிக்கும் உரிமை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கே என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் 2.5.1979 அன்று தருமபுரி மாவட்டத் தலைவராக இருந்த பெரியார் பெருந்தொண்டர் பென்னாகரம் எம்.என்.நஞ்சையா மறைந்தார் எனும் தகவல் கிடைத்தது. இவர் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கத்தின் தளபதியாக விளங்கியவர். தருமபுரி தந்தை பெரியார் சிலை அமைப்புக் குழுவின் தலைவராக இருந்தவர். தருமபுரி ஜில்லா போர்டு துணைத் தலைவராகவும் விளங்கினார். நெருக்கடி […]

மேலும்....

ஆர்.எஸ்.எஸ். சதிவலையுள் உயர்கல்வி! ஆர்த்தெழுந்து போராடும் மாணவர்கள்!

– மஞ்சை வசந்தன்

கல்விதான் உரிமை வேட்கைக்கான உயிரோட்டம் என்ற உண்மையை நன்கு புரிந்துவைத்துள்ள ஆர்.எஸ்.எஸ். ஆரிய பார்ப்பனக் கூட்டம், அக்கல்வியை தனக்கு மட்டுமே உரியதாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வைத்துக் கொண்டிருந்த நிலையை, ஆங்கில ஆட்சியும், ஜோதிராவ் பூலே, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்றோரின் போராட்டங்களும் மாற்றி, அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்தன.

மேலும்....

சிவகங்கை ‘வக்கீல் குமாஸ்தா’ ஜெயராமன்

விளம்பரமில்லா வியத்தகு பெரியார் தொண்டர் – 13 சிவகங்கை ‘வக்கீல் குமாஸ்தா’ ஜெயராமன் சிவகங்கையில் வழக்குரைஞர் சண்முகநாதன் அவர்களுக்கு உதவியாளராக தனது 14ஆவது வயதில் சேர்ந்தவர் _ வக்கீல் குமாஸ்தாவாக இறுதிவரை பணியாற்றியவர், கறுப்புச் சட்டை அணிந்து கழகச் செயல்பாடுகளை அங்கு கவனித்துவந்த பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தோழர் ஜெயராமன் அவர்கள் ஆவார்கள்! கழகத்தின் அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை செல்லவும் தயங்காதவர். ஜாதி ஒழிப்பிற்கான இந்திய அரசியல் சட்டத்தைக் கொளுத்திய போராட்டத்திலும் சிறைக்குச் சென்று திரும்பியவர். […]

மேலும்....

அம்மையாரின் அரும்மொழிகள்

பெண்களே! அடுப்பூதும் அணங்குகளாக அடைபட்டுக் கிடக்கும் பெண்டிராகவே காலங்கழிக்கக் கூடாது. தந்தை பெரியார் தமிழர்களின் பொதுச்சொத்து. கூட்டங்களுக்குப் பேசக் கூப்பிட்டால் வந்து விடுவார். சாப்பாடு கொடுத்தால் சாப்பிட்டு விடுவார். இந்த இரண்டிலும் அவர் குழந்தையே! வீட்டிற்குள் சிறைப் பறவையாய்  இருந்த பெண்களை, வெளி உலகிற்கு சுதந்திரப் பறவைகளாய்க் கொண்டு வந்தவர்தான் தந்தை பெரியார்.  அர்ச்சகர் ஆவதற்கு அறிவு தேவையில்லை; பிறவிதான் தகுதி. பார்ப்பனத்தி  வயிற்றில் பிறந்தவன் எவனாயிருந்தாலும் அர்ச்சகர் ஆகலாம் என்கிறது பார்ப்பன ஆதிக்கம். மேல் ஜாதிக்காரர்களான  […]

மேலும்....