வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?
குடம் இது தூய தமிழ்ச்சொல். இதையும் வடசொல் என்று ஆக்கிவிட எண்ணினர் வடவர். குடாகாயம் என்ற ஒரு தொடரைக் கட்டித் தத்துவ நூற்களில் விட்டிருந்தார்கள். சிவஞான போதத்திற்கு உரை எழுதவந்த சிவஞான யோகிகள் அங்கு இந்த குடாகாயத்தைக் கண்டாராதலின் அது பற்றிய புனைசுருட்டை விளக்க எண்ணினார். குடம் என்ற தமிழ்ச் சொல்லும், ஆகாயம் என்னும் வடசொல்லும் புணரவேண்டுமானால், குடவாகாயம் என்று புணர வேண்டும். ஆதலால் யோகிகள் குடாகாயம் என்று புணர்ந்துள்ள இது மரூஉ என்று கூறி, குளம் […]
மேலும்....