ஆன்லைன் வர்த்தகத்தின் அதிர்ச்சி தரும் கேடுகள்

– மஞ்சை வசந்தன் மனிதர்களின் சோம்பேறித்தனத்தைப் பயன்படுத்தி நடைபெறும் வணிகச் சுரண்டல்களில் இது மிகப்பெரிய கேடான வணிகச் சுரண்டல். இன்றைய மனிதன் உடல் பருமன், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவற்றால் வாலிப வயதிலேயே பாதிக்கப்படுவதற்குக் காரணம் உடல் உழைப்பைத் தடுக்கும் சோம்பேறித் தனமேயாகும். ஒரு கி.மீட்டர் தூரம் என்றாலும் சைக்கிள் அல்லது கார். அமர்ந்த இடத்திலே எல்லாவற்றையும் இயக்கும் ரிமோட். சமைக்க, துவைக்க, பெருக்க, குளிக்க, களிக்க எல்லாம் கருவிகள். உடற்பயிற்சிக்குக்கூட குனிந்து […]

மேலும்....

இந்தக் கடிகாரத்தை பழுது பார்க்க ரூ.400 கோடி!

உலகின் மிகப் பிரபலமான கடிகாரமான லண்டனில் உள்ள பிக் பென்னைப் பழுது பார்க்க ரூ.400 கோடி செலவாகும் என்று பிரிட்டன் நாடாளுமன்ற நிதிக்குழு அறிக்கை தெரிவிக்கிறது. பிரிட்டன் நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள பிக்பென் கோபுரக் கடிகாரம் 1859_இல் அமைக்கப்பட்டது. அந்தக் கடிகாரத்தின் பாகங்களில் பழுது பார்க்கும் பணி நடைபெறவுள்ளது. இதற்கான செலவு ரூ.50 கோடி என்று அந்த அறிக்கை கூறுகிறது. ஆனால் அந்தக் கடிகாரத்தின் செயல்பாட்டை நீடிக்கச் செய்ய, முழு கோபுரத்திலும் உள்ள விரிசலைச் சரி செய்தல் […]

மேலும்....

IIT – NIT பொது நுழைவுத் தேர்வு

அய்.அய்.டி., என்.அய்.டி., அய்.அய்.அய்.டி. போன்ற மத்திய அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் பிளஸ் டூ படித்த மாணவர்களும், பிளஸ் டூ படித்துவரும் மாணவர்களும் ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வு எழுதவேண்டும். இத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் டிசம்பர் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அய்.அய்.டி.க்களில் சேருவதற்காக நடத்தப்பட்டு வந்த அய்.அய்.டி. நுழைவுத்  தேர்வுக்கும் என்.அய்.டி., அய்.அய்.அய்.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக நடத்தப்பட்டு வந்த அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுக்கும் (ஏ.அய்.இ.இ.இ) பதிலாக […]

மேலும்....

திக்குமுக்காடிய மக்களைக் காத்த திராவிடர் கழக வெள்ள நிவாரணப் பணிகள்!

அரசின் நிர்வாகச் சீர்கேட்டாலும், பொறுப்பற்ற நிலையாலும் சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது. அரசு எந்திரம் செயலற்ற நிலையில், இளைஞர்களும் தொண்டர்களும் உயிரைப் பொருட்படுத்தாது வெள்ளத்தில் இறங்கி மீட்புப் பணி, நிவாரணப் பணியென்று இரவு பகல் பாராது தொண்டாற்றி சென்னை மக்களைக் காத்தனர். மதவாத சக்திகளும், சாதி வெறியர்களும் உணர்வேற்றி உசுப்பேற்றி ஊட்டிய மதவெறியும் சாதி வெறியும் சகதியுள் புதைந்து மடிய, மனிதம் மட்டுமே மேலோங்கி நின்று மக்களைக் காத்தது! பல இடங்களிலிருந்தும் இளைஞர்கள் வெள்ளப் பகுதிக்கு வந்து மக்களைக் […]

மேலும்....

விளம்பரமில்லா வியத்தகு பெரியார் தொண்டர் – 9

சுயமரியாதைச் சுடரொளி வல்லம்படுகை ஆசிரியர் சந்தானகிருஷ்ணன் – கி.வீரமணி பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் சிதம்பரத்திற்குப் பக்கத்தில் உள்ள வல்லம்படுகையில் தங்கி, அளப்பரிய கழக வளர்ச்சிப் பணியை இறுதி மூச்சடங்கும் வரை சலிப்பின்றி செய்து, மறைந்தும் மறையாத என்றென்றும் நம் போற்றுதலுக்குரியவர், ‘வல்லம்படுகை வாத்தியார் –_ சந்தானகிருஷ்ணன் அவர்கள் ஆவார்! திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகத் தேர்ச்சி பெற்று, சிதம்பரம் அருகில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்தவர் சந்தானகிருஷ்ணன் அவர்கள். அவர் தென்னாற்காடு மாவட்ட […]

மேலும்....