ஆசிரியர் பதில்கள்

கேள்வி : எங்கள் அய்யாவே! தங்களின் பிறந்த நாள் லட்சியக் கனவு என்ன?– அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி பதில் : பிறந்த நாளுக்கு என தனி லட்சியக் கனவு என்பதைவிட, என்றுமே நம்முன் பணி நிறைவடையாத பணி _ ஜாதி, தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூகநீதி, அறிவியல் பகுத்தறிவுச் சிந்தனை வளர்ப்பு ஆகியவைகளை நிறைவேற்றும் பணிதான். கேள்வி : மனிதம் வாழ மனிதன் எப்படி வாழவேண்டும்?– அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி பதில் : தனக்கென வாழாப் […]

மேலும்....

ஒரு தாயின் மக்களென வாதி!

சாதிகளால் மோதல்கள்வீதிகளில் வருவதினால்வேறுபட்டு நிற்குமடா நாடு – இந்த மேதினியும் மேன்மையுறமேல்சாதி கீழ்சாதிமாறவேண்டும் என்றுநீர் பாடு (சாதி) பாடுபடும் பாட்டாளிபலருக்கும் கூட்டாளிபாருக்குச் சொல்லுங்கடா சேதி – உடம்பில் ஓடும் இரத்தம், உதிரும் வேர்வைஒன்றுயென உணர்வதினால்ஒருதாயின் மக்களென வாதி    (சாதி) ஆடுமாடு விலங்கினங்கள்அவைகள் யாவும் ஓரினமாய்அன்பு காட்டி வாழுதடா காட்டில் – இங்கு காடுகளை மேடுகளைகழனிகளாய் மாற்றித் தந்தஓடப்பனை ஒதுக்கி வைத்தார் நாட்டில் சாதி மத பேதங்கள்சாத்திரத் சண்டைகள்மனித உறவைக் கெடுக்குதடா தம்பி – அந்த போதிமகான் போதித்தபுனிதமானக் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்

நூல்: ஆலயப் பிரவேச உரிமை (முதற்பாகம்)ஆசிரியர்: பி.சிதம்பரம் பிள்ளை B.A., B.L., M.L.A., (நாகர்கோவில்)வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,பெரியார் திடல், 84/1(50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007.பக்கங்கள்: 136நன்கொடை: ரூ. 65/-_ பிரிட்டிஷ் ஸர்க்கார் 1863-இல் இந்துக் கோவில்களின் பரிபாலனத்தை இந்துக்களிடம் ஒப்புவித்தார்களே, அந்த இந்துக்கள் யார்? அவர்கள் பார்ப்பனரா? அல்லது பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரரென்ற ஆரிய வகுப்பினரா? அல்லது திராவிடரா? அல்லது அனாரியரா? அல்லது தென்னிந்தியாவில் தங்களை இந்துக்களென்று […]

மேலும்....

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

பூ பூ என்பது பூமி. உலகத்தைக் குறிக்கும் போது அது வடசொல் அல்லவா என்றார் மேற்படி அன்பர். அன்று, அது தூய தமிழ்ச் சொல்லே. பூமேவு புல்லைப் பொருந்து குமரேசர் என்பதற்கு மலர் மேவிய சோலையுள்ள புல்வயல் என்ற ஊர் என்று ஒரு புலவர் பொருள் கூறியிருந்ததும் நம் நினைவிற்கு வருகின்றது. அது பிழை, பூமேவு-உலகில் அமைந்த என்று தான் பொருள் கூறவேண்டும். பூ எனினும் மலர் எனினும் உலகையே குறிக்கும் என்பது எதனாற் பெறப்படும் என்று […]

மேலும்....

செய்யக் கூடாதவை

பகலில் அரைமணி நேரத்திற்கு மேல் தூங்கக்கூடாது: இரவில் நன்றாகத் தூங்கினாலும், பகலில் அரைமணி நேரம் நன்றாகத் தூங்கி எழுவதினால் மூளை புத்துணர்ச்சி பெறும். இரத்த அழுத்தம் குறையும். இருதயம் வலுப்பெறும். உடல் சுறுசுறுப்படையும். ஆனால், அரைமணி நேரத்திற்கு மேல் அதிகம் தூங்கக் கூடாது. இரவில் தூங்கவில்லையென்றால், அதை ஈடுசெய்ய பகலில் அதிகம் தூங்கலாம். மாறாக, இரவிலும் நன்றாக 7 மணி நேரம் தூங்கிவிட்டு, பகலிலும் மணிக்கணக்கில் தூங்குவது சர்க்கரை நோய்க்கும் வழிவகுக்கும். ஆறிய பாலில் பொறை ஊற்றக்கூடாது: […]

மேலும்....