வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

பாக்கியம் இது வடசொல் அன்று! வடசொல் அன்று!! பயன் கொழிக்கும் நெய்தனிலத்தூரையும், பயன் கொழிக்கும் மருதநிலத்தூரையும் பாக்கம் என்னும் தமிழ்நூல். பாக்கம் என்பது அங்கு தோன்றும் செல்வத்துக்கு ஆனது இடவாகு பெயர். பாக்கம், பாக்கியம் ஆனது. திரிதல் -_ ஓவம். ஓவியம் என்பதைப் போல. இனிப் பாக்கம் இடையில் இகரச்சாரியை பெற்றது ஆகு பெயர்க்குறி எனவும் ஆம். செல்வம், பேறு முதலியவற்றைக் குறிக்கும் பாக்கியம் என்பது தூய தமிழ்க் காரணப்பெயர் என்று நினைவிற் கொள்க! (குயில்: குரல்: […]

மேலும்....

வானில் பறக்க, கப்பலில் செல்ல ஏழைகளுக்கு எளிய வாய்ப்பு

அரிய செய்தி

வானில் பறக்க, கப்பலில் செல்ல ஏழைகளுக்கு எளிய வாய்ப்பு

ஊரைச் சுற்றிப் பார்ப்பது என்றால் யாருக்குத்தான் பிடிக்காது… அதுவும் வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது விமானப் பயணம் செய்ய விரும்பும் மக்களுக்கு வெறும் 3,750 ரூபாயில் விமானப் பயணம். கப்பல் பயணம், ரயில் பயணம், சொகுசுப் பேருந்தில்  பயணம் என்றால் மகிழ்ச்சிக்கும், நிறைவுக்கும் குறைவேது?

இந்த வான்வழி, கடல்வழி, தரைவழிச் சுற்றுலாவை கேரள அரசு அறிமுகப்படுத்த, சுற்றுலா விரும்பிகளுக்கு பெரும் மகிழ்ச்சி.

மேலும்....

தமிழர் இயக்கிய தமிழ்ப் படத்திற்கு உலக விருது!

அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் வரும் ஏப்ரல் மாதம் 49ஆவது சர்வதேசத் திரைப்பட விழா நடைபெற உள்ளது. அந்த விழாவில் நமது தமிழ்த் திரைப்படம் ஒன்றுக்கு சிறந்த திரைப்படத்துக்கான ‘ரெமி’ விருது வழங்கப்பட உள்ளது.

அதே மாதம் அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் பேர் போன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவும் நடக்க உள்ளது. அந்த விழாவில், அந்தத் தமிழ்ப் படத்தில் இடம் பெற்ற ‘கல்லா மண்ணா’ என்ற திரைப்பாடல் திரையிடப்பட உள்ளது

மேலும்....

காதலுக்குக் கைகொடுத்து, வரதட்சணையை – தடைசெய்த கிராமம்!

வரதட்சணையால் விவாகரத்து, வன்கொடுமை உட்பட பல இன்னல்களுக்கு பெண்கள் ஆளாவது தொடர்பான செய்திகள் நாள்தோறும் வந்துகொண்டிருக்கின்ற நிலையில் வரதட்சணையே வாங்காத, கொடுக்கவும் செய்யாத ஒரு கிராமம் இருக்கிறது என்றால் வியப்பல்லவா? அதைவிட வியப்பு இந்தக் கிராமத்தினர் காதலுக்கு கொடுக்கும் மரியாதை. அந்தக் கிராமம் எங்கு இருக்கிறது? இவற்றிற்கு என்ன காரணம்? சிவகங்கையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலவிழாம்பட்டி கிராமம்தான் அந்த வரதட்சணை வாங்காத, கேட்காத கிராமம். ஊருக்குள் நுழையும்போதே, ‘இங்கு வரதட்சணை வாங்குவதுமில்லை; கொடுப்பதுமில்லை’ என்ற […]

மேலும்....

அம்பேத்கர்

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்தியாவிலேயே தலைசிறந்த அறிவாளிகள் என்று கருதப்படும் சிலரில் ஒருவர் ஆவார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் மக்களை அறிவைப் பயன்படுத்துகிறவர்களாகவும் அறிவுக்கு முழுச் சுதந்திரம் கொடுப்பவர்களாகவும் ஆக்க வேண்டும் என்பதற்காகவே பாடுபட்டவர் ஆவார். மிகவும் வசதியில்லாத நிலையிலிருந்து தன்னுடைய உழைப்பாலும், சுய அறிவினாலும், முயற்சியாலும் உயர்ந்த நிலைக்கு வந்து மக்களுக்கு பயன்படத்தக்க மாதிரியான வகையில் தொண்டாற்றினார். – தந்தை பெரியார்(புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் ஏப்ரல் 14)

மேலும்....