போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லும் பாசறை மாநாடுகள்! அனைவருக்கும் நன்றி! நன்றி!!

கழகக் கொள்கைக் குடும்ப உறவுகளே! திராவிட இன உணர்வாளர்களே! பகுத்தறிவாளர் கழகத் தோழர்களே! எம்அரும் தாய்மார்களே, நல்லிளம் சிங்கங்காள்! உங்களை மார்ச் 19, 20 இல் சிறுகனூர் பெரியார் உலகத் திடலில் நடைபெறும் மாநாடுகளுக்கு அன்போடு அழைத்தோம். குடும்பம் குடும்பமாக, முதியவர்கள்முதல் பெரியார் பிஞ்சுகள் வரை அனைவருடன் வருகை தந்தீர்கள்! கண்டறியாதன கண்டோம்!கேட்டறியாதன கேட்டோம்! கற்றறியாதவைகளைக் கற்றோம்!செயற்கரிய செயலில் ஜாதி_தீண்டாமை ஒழிப்புப் போரில்நாம் அனைவரும் ஈடுபட்டு சிறையேக சூளுரைத்தோம்!சுயமரியாதைப் பாசறையில் சொக்குண்டோம்!மேடு பள்ளங்கள் நிறைந்த காடாக முன்பு […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : அரசுப் பள்ளி ஆசிரியர்களே தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்காதது அங்கு கற்பிப்பது சரியில்லை யென்று அவர்களே ஒப்புக்கொள்வதாகாதா? இதற்குத் தீர்வு என்ன?-சீத்தாபதி, சென்னை-45 பதில் : நம்முடைய அமைச்சர்கள், தங்கள் உடல்நிலை பற்றி கவனிக்க தனியார் மருத்துவமனைக்குத்தானே செல்லுகிறார்கள், அவர்களைப் பின்பற்றியே அரசுப் பள்ளி ஆசிரியர் பிள்ளைகளை இப்படி தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள் போலும்! அரசு எவ்வழி மக்கள் அவ்வழி! கேள்வி : திருச்சி சிறுகனூர் மாநாடு வெற்றியை ஊடகப் பார்ப்பனர்கள் ஒத்துக் […]

மேலும்....

உற்சாக சுற்றுலாத் தொடர் – 27

ஜூனோவில் நாட்டியம்! – மருத்துவர்கள்  சோம & சரோ இளங்கோவன் அடுத்து கப்பல் நின்ற இடம் அலாஸ்காவின் தலைநகர் ஜூனோ. முன்னிருந்த பெயரை மாற்றி  இங்கு தங்கம் தேடி வந்தவர் பெயரையே வைத்து விட்டனர்! இங்கு வருவதற்குக் கடல் அல்லது விமானம் மூலந்தான், மற்ற நகரங்களை இணைக்கும் சாலைகள் கிடையாது. இருந்தும் அங்குள்ள பல இடங்களைப் பார்ப்பதற்குச் சாலைகளும், கார்களும், பேருந்துகளும் உள்ளன. ஆனால் விசைப்படகுகள் தான் பெரும்பாலும் பேருந்துகள் போலப் பயன்படுத்தப்படுகின்றன. அங்கு பார்ப்பதற்குப் பல […]

மேலும்....

பொது வினியோகத்தை மெதுவாக மூடிவிட்டு, கார்ப்பரேட்களுக்குக் கைகொடுக்கும் மோடி அரசு!

எச்சரிக்கை! எச்சரிக்கை!பொது வினியோகத்தை மெதுவாக மூடிவிட்டு, கார்ப்பரேட்களுக்குக்கைகொடுக்கும் மோடி அரசு! இந்தியாவின் மக்கள் தொகையில் பெரும்பகுதி மக்கள், வறுமை நிலையிலேயே இருந்து வருகின்றனர். என்னதான் மக்கள் கடுமையாக உழைத்தாலும், நாட்டில் வறுமையும், பற்றாக்குறையுமே மிகுந்து நிற்கின்றன. இதற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்துப் பார்க்கும்போது, தொழிலாளரிடம் அதிக உழைப்பைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவதேயாகும். சுருங்கச் சொன்னால், வேலைக்கேற்ற கூலி கொடுப்பதில்லை. இதனால், நடுத்தர மக்களும் கூடப் பாதிக்கப்படும் சூழ்நிலை பெருமளவில் ஏற்பட்டு வறுமை தலைதூக்கிவிடுகிறது. […]

மேலும்....

கல்லறை நோக்கி கடவுள் நம்பிக்கை!

உலகெங்கும் உயர்ந்துவரும்கடவுள் மறுப்பாளர் எண்ணிக்கை! டைம்ஸ் ஆப் இந்தியா ஏடு தரும் ஆய்வுத் தகவல்கள் பல்வேறு நாடுகளிலும் அதிகரித்துவரும் நாத்திகர்களின் எண்ணிக்கை: சீனா மற்றும் ஹாங்காங்: சீனாவில் 90 விழுக்காட்டினரும், ஹாங்காங்கில் 70 விழுகாட்டினரும் தங்களை மதமற்றவர்களாக அல்லது நாத்திகர்களாக குறிப்பிட்டுள்ளனர். செக் குடியரசு: யு.எஸ்.எஸ்.ஆர் எனும் சோவியத் ரஷ்யாவின் அங்கமாக இருந்து பிரிந்துள்ள நாடான செக் குடியரசு அய்ரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் அதிக விழுக்காட்டளவில் நாத்திகர்களைக் கொண்டுள்ளது. 45 விழுக்காட்டினர் தாங்களாகவே நாத்திகர்களாக இருந்துவந்துள்ளதாகவும், 30 […]

மேலும்....