ஓவியத்துக்குள் ஒளிந்துள்ள ரகசியம்

உலகிலேயே மிக விலையுயர்ந்த ஓவியமாய்க் கருதப்படுவது லியோனார்டோ டாவின்ஸி வரைந்த ‘மோனாலிஸா’ ஓவியம்-தான். 1503ஆம்  ஆண்டு அவர் வரைந்து முடித்தபோதே பெரும் பாராட்டைப் பெற்றது. 1962ஆம் ஆண்டு இன்சூர் செய்வதற்காக அதை மதிப்பிட்டபோது 100 மில்லியன் டாலர் பெருமானமானது என்று நிர்ணயித்தார்கள்! பாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ள இந்த ஓவியத்தில் பிரதிபலிப்பவர் ‘டச்சஸ் ஆஃப் மிலான்’ என்று கூறிகிறார்கள். ஆனால், இதில் காணப்படுபவர் ‘மடோனாலிசா கெரார்டினி’ என்ற பெண்மணியே என்றும், அவளது கணவனான ஃபிரான்சிஸ் கோடெல் […]

மேலும்....

இயக்க வரலாறான தன்வரலாறு(168)

வகுப்புரிமைக்கு வழிகாட்டி தமிழ்நாடு! தந்தை பெரியார் _- அன்னை மணியம்மையார் ஆகியோரால் வளர்க்கப்பட்ட வரும், திருச்சி நாகம்மை குழந்தைகள் இல்லத்தைச் சார்ந்த என் அன்புச் சகோதரிகளில் ஒருவருமான செல்வி, அரசத்தரசி என்கிற அரசம்மை அவர்களுக்கும், உடுமலை நண்பர் செல்வன் அ.ப.நடராசன் அவர்களுக்கும் வாழ்க்கை ஒப்பந்த விழா, திராவிடர் கழகப் பொருளாளர் திரு. கா.மா.குப்புசாமி அவர்களது தலைமையில் 11.11.1979 அன்று திருச்சி பெரியார் மாளிகையில், பெரியார் மணியம்மை மன்றத்தில் நடை-பெற்றது. விழாவில் நான் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றுச் […]

மேலும்....

ஆரிய தர்மத்தை ஆதரித்த அன்னிபெசண்ட்

1847ஆம் ஆண்டில் லண்டனில் பிறந்த அன்னி வூட் தனது 19ஆவது வயதில் ‘ஆண்டில் பிராங்க் பெசண்ட்’ என்ற பாதிரியாரை மணந்து கிறித்துவப் பணியில் ஈடுபட்டார். 1870இல் சார்லஸ் பிராட்லாவோடு இணைந்து ‘நேஷனல் ரிபார்மர்’  என்ற ஆங்கில ஏட்டை நடத்தினார். பெண்ணுரிமை, பெண்கல்வி, பெண்களுக்கான ஓட்டுரிமை, குடும்பக் கட்டுப்பாடு (கர்ப்பத்தடை) போன்ற புரட்சிகரமான திட்டங்களை வகுத்து அதற்கான இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டார். தனது “லிங்க்” பத்திரிக்கையில்  விடுதலைப் பேராட்டங்களுக்கு ஆதரவாக எழுதியதன் மூலம் உலக அளவில் அனைவராலும் அறியப்பட்டார். […]

மேலும்....

மருத்துவத்தைத் தொண்டாய் செய்த மனிதநேய மருத்துவர்!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியிலுள்ள விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு 1978இல் டாக்டர் பணிக்கு வந்திருக்கிறார். நெல்லை, பழனி, உசிலம்பட்டி, சென்னிமலை என்று பல இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்திருக்கிறார். மாற்றலாகி புது இடம் போகுமிடமெல்லாம் அந்த ஊரில் கையோடு ஒரு கிளினிக் ஆரம்பித்து விடுவார். கூடுதல் வருமானத்துக்காக அல்ல. கூடுதல் சேவைக்காக. ஆமாம். ரெண்டு ரூபாய், அய்ந்து ரூபாயைத் தாண்டியதில்லை இவரது கட்டணம். அந்த வகையில்தான் […]

மேலும்....

கடல் கடந்து இளைய தலைமுறையிடம் தந்தை பெரியாரின் தாக்கம்

தொகுப்பு: க.பூபாலன் சிங்கப்பூர் (கடந்த இதழின் தொடர்ச்சி…)சிங்கப்பூர் இலக்கியக் களத்தின் தலைவர் முனைவர் இரத்தின.வேங்கடேசன் அவர்களின் உரை சிங்கப்பூரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 138ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் சிங்கப்பூர் இலக்கியக் களத்தின் தலைவர் முனைவர் இரத்தின.வேங்கடேசன் அவர்கள் உரையாற்றினார். அனைவருக்கும் வணக்கம். நான் புதுச்சேரியில் பிறந்து வளர்ந்த காலக்கட்டத்தில், எனக்கு அப்பொழுது 10 வயது இருக்கும். புதுச்சேரியில் லாசுபேட்டை என்கிற சிற்றூரைச் சேர்ந்தவன். அந்த ஊரில் எல்லா அரசியல் கட்சிகளும், எல்லா விதமான பக்தி […]

மேலும்....