செய்யகூடாதவை

  பிள்ளைகளை அச்சுறுத்தி வளர்க்கக் கூடாது: பிள்ளைகளைக் கண்டிப்புடன் வளர்க்கிறேன் என்று சொல்லி, அச்சுறுத்தி, அடித்து வளர்ப்பது சரியான வளர்ப்பு முறையல்ல. அன்போடும், பாசத்தோடும், அக்கறையோடும், இனிய சொற்களால் எடுத்துக் கூறினால் பிள்ளைகள் பின்பற்றுவர். பிள்ளைகளின் விருப்பத்திற்கு முழுவதும் தடைவிதிக்காது, அவற்றில் சரியானவற்றை நிறைவேற்றி, நம்மீது அவர்கள் அன்புடையவர்களாய், நம்மை விரும்பக் கூடியவர்களாய் நாம் நடந்து கொண்டால், எல்லாப் பிள்ளைகளும் நம் பேச்சைக் கேட்டு நடக்கும். பிள்ளைகள் சொல்வது சரியென்றால் அதையும் பெரியவர்கள் ஏற்று நடக்க வேண்டும். […]

மேலும்....

மனித உரிமைகளை நசுக்குவது அரசாங்கமே

மனித உரிமைப் போராளி “ஹென்றி டிபேன்” மனித உரிமைகளுக்காகக் குரல் எழுப்பி வருபவர் ஹென்றி டிபேன். மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மக்கள் கண்காணிப்பகத்தின் தலைவரான இவரின் பணியைப் பாராட்டி, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (ஜெர்மனி) அமைப்பு விருது கொடுத்துக் கவுரவித்திருக்கிறது. இந்த விருதைப் பெரும் முதல் இந்தியர் இவர்தான். “உலகளாவிய மனித உரிமைச் செயல்பாடுகளில், அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் முக்கியத்துவம் என்ன?” “தூக்குத் தண்டனைக்கு எதிராக வலுவாகக் குரல் எழுப்பி, அது பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்தியது […]

மேலும்....

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா

தமிழில் பேரா.முனைவர்.ப.காளிமுத்து எம்.ஏ.பி.எச்டி புகழ்பெற்ற எழுத்தாளர் ஜான் வில்சன் எழுதிய “India Three Thousand Years Ago”என்னும் ஆங்கில நூல் 1858 அக்டோபரில் மும்பையில் வெளியிடப்பட்டது. அது தற்போது மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவருகிறது. மேலும் அவர்கள் (இந்தியர்கள்) வானியல் பற்றிய கணிப்புகளையும் தெரிந்து வைத்திருந்தனர் என்பது உறுதி. பேராசிரியர் வில்சன் குறிப்பிடுவது போல் அவர்கள் வேத காலத்திலேயே சூரிய ஆண்டையும், நிலா ஆண்டையும் இணைத்துச் சரிப்படுத்திக் கொள்வதற்கு இடைச் சேர்ப்பாக ஒரு மாதத்தையும் வைத்திருந்தார்கள். கிரேக்கர்-களுக்கு முன் […]

மேலும்....

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா

மனிதர் இது மனுஷ்யர் என்பதன் திரிபாம். மனு என்பவரின் வழிவந்த காரணத்தால் அப்பெயர் வந்ததாம் எனப் பலவாறு கூறி இடர்படுவார். மனு தோன்றுவதற்கு முன்னும் மன், மன்னுதல், மனம், மானம் என்று வேரும் வினையும் இருந்தன, என்று தோன்றுகின்றது. ஆரிய மறை தோன்று முன், மனு என்ற சொல் இல்லை என்பதால், தமிழன் மன் என்பதை வைத்தே மனுச்சொல் ஆக்கப்பட்டது எனல் வேண்டும். மனிதன், மனுசன், மானுயன், மானிடன், மனித்தன் அனைத்தும் மன் என்பதன் அடியாகப் பிறந்தனவே […]

மேலும்....

மரபணுவை பாதிக்கும்

உடல் நலத்துக்கும் இரும்பு சத்து மிக அவசியம். உடலில் ஆக்சிஜனை எடுத்துச் செல்வதில் இதன் பங்கு மிகவும் முக்கியமானது. எனவேதான், இரும்பு சத்து மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் உட்கொள்கின்றனர். ஆனால், இவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என அண்மையில் மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் ரத்த சோகை ஏற்பட்டு சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உருவாகிறது. அனைத்துக்கும் மேலாக மிக முக்கியமான மரபணு (டி.என்.ஏ) மூலக்கூறுகள் பாதிப்-படைகின்றன. இத்தகவல் […]

மேலும்....