வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

புரட்சிகவிஞர் பாரதிதாசன் பகுதி இஃது பகுரிதி என்ற வடசொல்லின் சிதைவென்று வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரி முதலிய பார்ப்பனர் எழுதியுள்ளார்கள். இது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயலுக்கு ஒப்பாகும். பகு என்ற முதனிலை அல் இறுதிநிலை பெற்றுப் பகல் என்று வரும். அப்பகல் என்பது வேறுபாட்டால் பால் எனவும் வரும். “பால்வரு பனுவலின்” (கம்ப.யுத்த.விபீ.78) என்பதிற்போல, அப் பகு என்பதே அகரச் சாரியையும், வு இறுதிநிலையும் பெற்றுப் பகவு என வரும். அதுவே பு இறுதிநிலை பெற்றும், தல் இறுதி […]

மேலும்....

விதைகளை வீணாக்காதீர் வியக்கதக்க பயன்கள் அவற்றில் உள்ளன!

தர்பூசணி விதை பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் பி, புரதச் சத்து போன்ற பல சத்துக்களை உள்ளடக்கியது. இந்த விதை, உணவு மண்டலத்தின் செயல்திறனை அதிகரிப்பதுடன், நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்தும். இதன் மேல்தோலை நீக்கிவிட்டு, காயவைத்து நெய்யில் வறுத்து, உப்பு, மிளகு சேர்த்து உணவோடு சேர்த்துச் சாப்பிடலாம். முள்ளங்கி விதை ஜீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டும் தன்மை இதற்கு உண்டு. ஒற்றைத் தலைவலி, மூக்கடைப்பு, கால்வீக்கம், மது அருந்துவதால் வரும் தலைச்சுற்றல், தொண்டைப்புண் போன்ற பல உபாதைகளுக்கு […]

மேலும்....

அரை ஏக்கர் நிலத்தில் 3223 கிலோ நெல் விளைவித்து முதுகலைப் பட்டதாரிப் பெண் சாதனை!

சமைக்கவும், துலக்கவும், கோலம் போடவும் பிள்ளை பெறவுமே பெண்கள் என்ற கட்டை அறுத்து பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்துவருகின்றனர். காவல்துறை ஆணுக்கே உரியது; பளு தூக்குதல், மல்யுத்தம், மலையேறுதல் போன்றவை ஆணுக்கே உரியவை என்ற எண்ணத்தைத் தகர்த்து அவற்றில் சாதித்துக் காட்டிவிட்டனர். ஆனால், வேளாண்மை ஆண்களால் மட்டுமே முடியும் என்ற உறுதியான நம்பிக்கை சமுதாயத்தில் இருந்தது. அதைத் தகர்த்து தவிடிபொடியாக்கி, சாதனை படைத்ததோடு, போட்டியிலும் வென்று காட்டியுள்ளார் பிரசன்னா. இவர் மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர். தமிழகத்தில் […]

மேலும்....

எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை! நான் ஒரு பகுத்தறிவுவாதி! மக்கள் நலனுக்கான போராளி

எழுத்தாளர் பொன்னீலன் பேட்டி

அய்யா வைகுண்டசாமி கால் நாட்டிய இல்லத்தில் வாழ்ந்து வருகின்றீர்கள்.. ஆனால் கடவுள் நம்பிக்கை ஏன் எழுத்தாளர் பொன்னீலனுக்கு இல்லை?

‘தாழக்கிடப்பாரைத் தாங்கிப் பிடிப்பதே தருமம்’ என்ற கொள்கை கொண்டவர் அய்யா வைகுண்டர். மனிதர்களை வாழ்விப்பதில் தெய்வம் வளர்த்தவர் அவர். தனிப்பட்ட தெய்வம் ஒன்று நமக்கு வெளியே இருந்து அனைத்தையும் இயக்குகின்றது என்ற கொள்கையில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இன்று நம் மக்கள் வழிபடுகின்ற எல்லோருமே நம் முன்னோர்கள், ஒரு காலத்தில் சமூக முன்னோடிகளாக வாழ்ந்தவர்கள்.

மேலும்....

நம்மிடம் தயாரானவர் ஒழுங்காகதான் தயாராகியிருக்கிறார்!

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் “பெரியார்_மணியம்மை இலவச மருத்துவமனை’’ திறப்பு விழா 30.5.1979 புதன் மாலை சென்னை பெரியார் திடலில் வெகு சிறப்புடன் நடைபெற்றது. விழா நடைபெற்ற பெரியார் திடல் விழாக்கோலம் பூண்டு திளைத்தது. பெரியார் சிலையிலிருந்து இருமருங்கிலும் வண்ண வண்ணக் கொடிகள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மேற்கொள்ளும் அறப்பணிக்கு தன் மகிழ்ச்சியைத் தெரிவிப்பது போல் பறந்தன. மாலை 5 மணியிலிருந்தே பொதுமக்கள் பெரியார் திடலை நோக்கிவர ஆரம்பித்தனர். ஆரம்பிக்கப்பட இருந்த மருத்துவமனையைப் பொதுமக்கள் […]

மேலும்....