நிலவாக,கதிராக ஆசிரியர் வீரமணி நீடு வாழ்க!

  அய்யாவின் அடிச்சுவட்டில் பயணிக் கின்ற    ஆற்றல்மிகு பேச்சாளர்; அறிவுத் தோப்பு;மெய்யாக உழைக்கின்ற மேன்மை மிக்கார்;    மிடுக்குடனே பகுத்தறிவைப் பரப்பும் நல்லார்!பொய்யுரைக்கும் வேதங்கள் மனுநூல் கீதை    புராணத்துக் குப்பைகளின் புரட்டைக் கூறிஉய்வுக்கே பாடுபடும் எழுத்து வேந்தர்;    உலகுபுகழ் பெரியாரின் உண்மைத் தொண்டர்! ஆசிரியர் என்றாலே நமது நாட்டில்    அய்யாவின் பிறங்கடையாய் வாழு கின்றமாசில்லா மனமுடையார், இனத்தின் மீட்பர்    மானமிகு வீரமணி அய்யா என்பர்!காசுபணம் குறிக்கோளாய் உடைய நாட்டில்    கலங்காமல், இனப்பகைவர் எதிர்ப்பை யெல்லாம்தூசெனவே எண்ணுகிற துணிவு மிக்கார்!   […]

மேலும்....

மாசுபடும் இந்தியா!

அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி, ஓராண்டு காலம் விண்வெளியில் இருந்து பூமியை ஆராய்ந்தார். அப்போது இந்தியா, சீனா மீதான மேகங்களில் ஏற்படும் மாற்றம், காற்று மாசுபாடு ஆகியவை அவரை அதிர வைத்தன. அதிலும் கடும் அதிர்ச்சி தந்த இரண்டு நாட்கள்: இந்தியாவின் தீபாவளி, சீனாவின் தேசிய தினம் ஆகியவை.‘நான் விண்வெளியில் இருந்தபடி கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி சீனாவின் 200 நகரங்களையும் தெளிவாகப் பார்த்தேன். அன்றைய தினம் சீனாவின் தேசிய நாள். பொது விடுமுறை. […]

மேலும்....

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

சேட்டு இது தூய தமிழ்க் காரணப் பெயர். வடமொழியின் கிளைமொழி என்று எண்ண வேண்டாம். தமிழ்ச் சொற்கள் பண்டு பிறமொழியாளர் பலரால் எடுத்தாளப்பட்டன. அவற்றில் இதுவும் ஒன்று என உணர்தல் வேண்டும். நடுவு நிலைப் பொருட்டாகிய செம்மை என்ற பண்புப் பெயரினின்று தோன்றிய செட்டு என்பது முதல் நீண்டு சேட்டு ஆனது. செட்டி என்பதும் செம்மையிற் தோன்றியதே. இனிச், செட்ட என்பதன் திரிபாகிய சட்ட என்ற சொல் பற்றிச் சிவஞான போத உரையாசிரியர் செம்மைப் பொருட்டாவதோர் அகர […]

மேலும்....

நீதித்துறைக்கும் ஆட்சித்துறைக்கும் ஏற்பட்டுள்ள மோதல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அறைகூவல்

நீதித்துறைக்கும் ஆட்சித்துறைக்கும்  ஏற்பட்டுள்ள மோதல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய  அறைகூவல் இந்திய அரசியல் சட்டம் 1949 நவம்பர் 26ஆம் தேதி *நமக்கு நாமே வழங்கப்பட்டது’ அரசியல் நிர்ணய சபையில். குடியரசாக 1950 ஜனவரி 26 இல் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த நாளை ‘அரசியல் சட்ட நாளாக’ (Constitution Day) என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு அனுசரித்துக் கொண்டு வருகிறது. இந்திய அரசியல் சட்டத்தைப் பொறுத்தவரையிலே, இது எப்படிப்பட்ட ஓர் அரசு என்பதை பீடிகையில் அதாவது Preamble என்ற […]

மேலும்....