வடபுலத்தில் பகுத்தறிவாளர்களின் சங்கமம்! – வீ.குமரேசன்

பகுத்தறிவாளர்  என ஒருவர் தன்னைச் சொல்லிக் கொள்ளுகின்ற பொழுது, மற்றவர்களுக்குப் பகுத்தறிவு இல்லையா? எனும் கேள்வி பெரும்பாலானவர்களின் மனதில் எழுவது இயல்பு. கேள்வியில் நியாயம் இருப்பது போலவும் தோன்றும். உயிரினங்கள் பலவற்றிலிருந்து மனித இனத்தைப் பிரித்துக்காட்டுவது பகுத்தறிவு இயல்பே. மனிதஇனம் முழுமைக்கும் பகுத்தறிவு உரியது. பகுத்தறிவு இயல்பைப் பெற்றிருப்பது என்பது ஒரு நிலை; பெற்றுள்ள பகுத்தறிவைத் தக்க தருணங்களில் பயன்படுத்தி, வாழ்வின் நடைமுறையில் பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் செயல்படுவது என்பது மற்றொரு நிலை. இந்த மற்றொரு நிலையில் பயணப்படும் […]

மேலும்....

வஞ்சகம் வாழ்கிறது – 7

புரட்சிக் கவிஞர் பாவேந்தரின் இரணியன் இணையற்ற வீரன் என்ற கதையை அடிப்படையாக கொண்ட நாடகம் காட்சி 16 அரண்மனையின் ஒரு பகுதிஉறுப்பினர்கள்: இரணியன், வெற்றிவீரன், அமைச்சர். சூழ்நிலை: மூவரும் உரையாடல். இரணியன்: நம்பமாட்டேன்! நான் நம்பவே மாட்டேன். தளபதியாரே! ஒளி வந்ததை நீர் பார்த்தீர்? வெற்றி: ஆம் அரசே! இரணி: இல்லை! ஆரியர் சூழ்ச்சி! நம்பிக்கைக்குரிய தளபதி நீர்! நீரே எனக்குத் துரோகம் செய்கிறீரா? வெற்றி: இல்லை அரசே! என்னை வீணாகச் சந்தேகிக்காதீர்கள். ஒளி தோன்றியது உண்மை. […]

மேலும்....

செய்திக்கீற்று

ஒடிசா மாநிலம் பலசூர் ஏவுதளத்திலிருந்து எதிரி ஏவுகணைகளை நடுவானில் தடுத்து நிறுத்தும் இடைமறிப்பு ஏவுகணையான பிருத்வி வெற்றிகரமாகச் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்தியர்களின் கருப்புப் பணம் சுமார் 25 லட்சம் கோடி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சி.பி.அய். இயக்குநர் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்புப் புகார் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. மேனாள் கர்நாடக […]

மேலும்....

நிழலில் வாழ்தல்

தொடர் என்றுதான் சொல்கிறார்கள்,அது இடர் என அறியாமல்.ஒளியால் இருள் பரப்பப்படுகிறது.எல்லோருக்கும்போதுமான கவலைகள் இருக்கையில்தம் கவலைகளை அவைகூடுதலாகக் கொட்டுகின்றன.காற்றும் உணவும் அவசியம்.கவலையுமா?கவலை நம் இரண்டாவது ஆடையோ?ஒன்பது சுவைகளும்டின்னில் அடைத்ததயாரிப்புகளாய்நம் சிரிப்பில்கடவுளைக் காண்கிறார்கள்இரசாயனத்தால்ஏற்படுத்தப்படும் சிரிப்புகள்உடலுக்கு நல்லவையா?அழும்போதுதான் பெண்கள்அழகாயிருக்கிறார்களா?முதுகுகள் பின்புறம் இருப்பதுபிறர் குற்றம்பேசவேண்டும் என்பதற்காகவா?இந்தப் பெட்டியில்எல்லாவற்றுக்கும்நியாயங்கள் சொல்லப்படுகின்றனஎங்கள் நீதிமன்றங்கள்போலஇவை மெல்லவே நகர்கின்றனதொடர்கள் முடிந்துதூங்கும்போதுநாம் ஒருநாள் இழந்ததுஅறியப்படவில்லை. – நீலமணி

மேலும்....