ஜப்பானில் பொங்கல் விழா

ஜப்பான் நாட்டில் வாழும் தமிழர்கள் ஒன்று சேர்ந்து தொடர்ந்து 21 ஆண்டுகளாக பொங்கல் விழாவினைக் கொண்டாடி வருகின்றனர். 2012ஆம் ஆண்டிற்கான விழா டோக்கியோ நகரில் கசாய் சமூக கூடத்தில் ஜனவரி  21 அன்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்ட விழாவில் தமிழக நகைச்சுவைப் பேச்சாளர் மதுரை முத்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றதுடன் மாலையில் நகைச்சுவை விருந்தும் கொடுத்தார். சென்னை அஜய் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், பல்வேறு […]

மேலும்....

குட்டுமேல் குட்டு வாங்கும் மோடி

குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத் தொடர்ந்து நடைபெற்ற மதக் கலவரத்தைத் தடுக்க அரசு தவறிவிட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளது குஜராத் உயர் நீதிமன்றம். கலவரம் நடைபெற்றபோது அதனைத் தடுக்கத் தேவையான நடிவடிக்கைகளை எடுப்பதில் அலட்சியமாகச் செயல்பட்டதால், மாநிலம் முழுவதும் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. சேதமடைந்தவற்றைப் பழுதுபார்ப்பதற்குத் தேவையான இழப்பீடு வழங்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். கலவரத்தின்போது சேதமான வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல வழிபாட்டுத் தலங்களுக்கும் இழப்பீடு வழங்க […]

மேலும்....

புதுப்பாக்கள்

அறியாமை உண்ண உணவில்லை!எட்டாத இடத்தில் காக்கைக்கு உணவு! பக்தியுடன் ஏழை ரசிகன் கடவுள் வேடத்தில் நடிகை! சாலையில் பகுத்தறிவுப் பகலவன் சிலை! அங்கே ஆட்டுமந்தைகளாய் பக்தர்கள் ஊர்வலம்! சித்தர்களின் மூச்சுப் பயிற்சியும், தியானமுமாக வேடதாரிகளாய் பித்தர்கள்! தன்னம்பிக்கை இல்லாமல் தும்பிக்கை மேல் நம்பிக்கை வைத்தான் பக்தன்! அறியாமை நிறைந்தே இருந்தது! பக்தனின் மனம் கோவில் உண்டியல் போல! கல்லடி பட்டான் தோழன்! அது கடவுள் இல்லை! கல் என்று சொன்னதற்காக! வீதி இருளகல மின் கம்ப வெளிச்சம்! […]

மேலும்....

உலகப் பகுத்தறிவாளர் – ஆப்ரகாம் கோவூர் – 3

– சு.அறிவுக்கரசு ஆவியுடன் பேசமுடியுமா? ஆப்ரகாம் கோவூர் தம் வாழ்நாளில் பல்வேறு மூடநம்பிக்கைகளில் வாழ்ந்தவர்களைத் (வாழ்வா, அது?) திருத்தி நேர்வழிப்படுத்தியிருக்கிறார். பலநூறு கட்டுரைகளை எழுதுவதையும்விட, பல ஆயிரம் பொதுக்கூட்டங்களில் உரை நிகழ்த்தி விளக்குவதைவிட, மிகவும் பலன் உள்ளதும் மனதை மாற்றக் கூடியதுமான பிரச்சாரம் செயல் விளக்கங்களே! அந்த வகையில் அவர் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தை மிகச் சிறப்பாகச் செய்தார். இலங்கைத் தலைநகர் கொழும்பின் பிரபல அரசியல்வாதியின் உறவினர் ஒருவர் தன் 62ஆம் வயதில் இரண்டாம் திருமணம் செய்து […]

மேலும்....

இதயம் இதயமாய் இயங்க…- 2

பேராசிரியர். மருத்துவர் வெ.குழந்தைவேலுMD.phD.DLitt.DHSc-Echocardio.FCCP மாரடைப்பு எப்படி ஏற்படுகிறது? மாரடைப்பு ஏற்படுவதற்கு ஏதுவாக இருக்கிற காரண காரணிகளான இதயத்தசைகளுக்கான கொரோனரித்தமனி நாளங்களில் ஏற்படக்கூடிய கொழுப்புத் திவலைகளின் படிமங்கள் – படிமப் பெயர்ச்சி (displacement of atheromatous plaque); அதன் காரணமாக, கொரோனரித்தமனி நாள உட்சுவர்களில் சிராய்ப்பினால் ஏற்படும் இரத்தக் கசிவு மற்றும் இரத்த உறைவுகள் அடைத்துக்கொள்ளுதல் (coronary wall bleed / and coronary thrombosis); கொரோனரித்தமனி நாளத் திடீர்ச் சுருக்கம் (coronary arterial spasm)  போன்றவற்றால் இதயத்தசைகளுக்கான […]

மேலும்....