முகநூல் பேசுகிறது

“பாகிஸ்தான் அணி என்றால் என்ன வேறுபாடு இருக்க்கிறது? பாகிஸ்தான் அணியும் மற்ற கிரிக்கெட் அணிகளை போன்றது தான். மற்ற கிரிக்கெட் அணிகளுடன் விளையாடுவது போலவே பாகிஸ்தான் அணியுடனான விளையாடுவோம்”   _ கௌதம் கம்பிர். உண்மைதான் பாகிஸ்தானை பழிதீர்க்குமா இந்தியா? என்றும் ‘Arch rivals’ என்றும் ஊடகங்கள் விவரிக்கும் நாட்டில் கம்பிரின் இந்தக் கேள்வி நியாயமானதுதானே? நியாயமாகப் பார்த்தால் இங்கிலாந்து இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த நாடு. அதனோடு விளையாடும்போதாவது இப்படிச் சொல்லலாம். இந்தியாவுடன் நேற்றுவரை இணைந்திருந்து பிரிந்து சென்ற […]

மேலும்....

மருத்துவம் 200/200ல் 16க்கு 10

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை தமிழக அரசு மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதில் 200 க்கு 200 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 16 பேர். இவர்களில் 10 பேர் பிற்படுத்தப்பட்டவர்கள். இச்செய்தியை 26.6.2012 தினமலர் வேறுவழியில்லாமல் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இட ஒடுக்கீடு என்றாலோ, சமூக நீதி என்றாலோ கரித்துக்கொட்டி வன்னெஞ்சத்துடன் எழுதும் தினமலர் உள்ளிட்ட பார்ப்பன ஏடுகள் இதற்குக் கூறும் பதில் என்ன? கல்வி வாய்ப்பைக் கொடுத்தால் பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும், பழங்குடியினரும் […]

மேலும்....

சிங்கள மயமாக்கத்தில் சிக்கிய புத்தர்

– மணிமகன் ஈழச்சிக்கல் தற்போது உலகின் கவனத்தைப் பெற்றுள்ளநிலையில் புதிதாக சிலர் புறப்பட்டிருக்கிறார்கள். 1980களில் ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு அகதிகளாக உலகின் பல நாடுகளுக்கும் தப்பி ஓடியபோது கண்ணையும் காதையும் மூடிக்கொண்டிருந்த இந்துத்துவ, அரசியல் வியாபாரிகள். இப்போது, கோவாவில் நடந்த இந்து மாநாட்டில் ஈழச்சிக்கலைப் பற்றிப் படம் காண்பித்திருக்கிறார்கள். இங்கே தமிழன் மாமிசம் கிடைக்கும் என்று சிங்கள இனவெறியர் கள் கொக்கரித்தபோது கோபப்படாதவர்கள் இப்போது கோவாவில் கூடிய மாநாட்டில் பிரபாகரன் வாழ்க என்று கோஷம் போட்டார்களாம். இந்து […]

மேலும்....

முற்றம்

நூல் நூல்    :    சிங்காரவேலர் என்ற மாமனிதர் ஆசிரியர்    :    புலவர் பா.வீரமணி வெளியீடு    :    அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், 96 பெரியார் சாலைபாலவாக்கம், சென்னை 41 பக்கங்கள்    : 16   ரூ.130/-_ 1920களில் பவுத்தம், மார்க்சியம், டார்வினியம் குறித்து எழுதியவர்; மார்க்சின் மூலதனத்தை சுருக்கமான விளக்கமாகத் தமிழில் எழுதியவர்; விண்மீன்களும் அணுக்களும், கடவுளும் பிரபஞ்சமும் உள்ளிட்ட அறிவியல் நூல்களைப் படைத்தவர்; பெரியாரின் நண்பராக விளங்கியவர் சிந்தனைச் சிற்பி எனப் போற்றப்படும் சிங்காரவேலர். சிங்காரவேலர் பற்றி […]

மேலும்....

சோ அவர்களே! சோடி போட்டுக்குவோமா சோடி?

கேலிச் சித்திரத்தை கேலிச் சித்திரமாகப் பார்க்க வேண்டும்; கோலிக் குண்டை கோலிக் குண்டாகப் பார்க்க வேண்டும்! என்றெல்லாம் கருத்துச் சுதந்திர வியாக்யானம் பேசுகிறார்கள் சோ கும்பலும் அறிவு ஜீவிகளும்! அம்பேத்கரை இழிவுபடுத்தியும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை இழிவுபடுத்தியும் ழிசிணிஸிஜி பாட நூலில் வெளிவந்த கார்ட்டூன்களுக்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியிருக்கும் சூழலில்தான் இவர்களுக்கு கருத்துச் சுதந்திரமும், சகிப்புத் தன்மையும் நினைவுக்கு வரும்! கேலிச் சித்திரத்துக்கெல்லாம் கொந்தளித்திருந்தால் துக்ளக், தினமலர் உள்ளிட்ட உள்ளூர் ஏடுகள் முதல் இந்திய தேசிய ஏடுகள் […]

மேலும்....