முகநூல் பேசுகிறது

ஜூலை 01-15

“பாகிஸ்தான் அணி என்றால் என்ன வேறுபாடு இருக்க்கிறது? பாகிஸ்தான் அணியும் மற்ற கிரிக்கெட் அணிகளை போன்றது தான். மற்ற கிரிக்கெட் அணிகளுடன் விளையாடுவது போலவே பாகிஸ்தான் அணியுடனான விளையாடுவோம்”   _ கௌதம் கம்பிர்.

உண்மைதான் பாகிஸ்தானை பழிதீர்க்குமா இந்தியா? என்றும் ‘Arch rivals’ என்றும் ஊடகங்கள் விவரிக்கும் நாட்டில் கம்பிரின் இந்தக் கேள்வி நியாயமானதுதானே? நியாயமாகப் பார்த்தால் இங்கிலாந்து இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த நாடு. அதனோடு விளையாடும்போதாவது இப்படிச் சொல்லலாம். இந்தியாவுடன் நேற்றுவரை இணைந்திருந்து பிரிந்து சென்ற சகோதர நாட்டைப் பற்றி நம் ஊடகங்கள் பழிதீர்ப்பது போன்ற சொல்லை பய்னபடுத்துவதற்கு இந்துத்துவ இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலையல்லாமல் வேறு என்ன?

– கவின் மலர் 9 ஜூன் 2012 பகல் 3:30 மணி

திராவிட இயக்கத்தால் கல்வி பெற்று, சுயமரியாதை பெற்றுவிட்டு, சில பல காரணங்களால் திராவிட இயக்கங்கள் வேண்டாமென்று நீங்கள் சொன்னால்,
போலீஸ் ஸ்டேசன்கள் இத்தனை வருடங்களாக இருந்தும், நீதிமன்றங்கள் இவ்வளவு நாட்களாக இயங்கியும், இன்னமும் கொலை கொள்ளைகள் நடந்து கொண்டிருப்பதால் காவல்நிலையங்களைக் கலைத்து விடலாம் என நான் சொல்கிறேன்.

– கோகுல் காங்கேயம் 18 ஜூன் 2012 பகல் 12:29 மணி

கொலையுண்ட சங்கர ராமனின் மனைவி, கொலைக் குற்றம் சாட்டப்பட்ட
சங்கராச்சாரிக்கு அரசு விழாக்களில் /நிறுவனங்களில் எல்லா சகல மரியாதையும் கிடைப்பதை சுட்டிக்காட்டி தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய செய்தி குறுக்குநூல் ஊடகங்களுக்கு ஏன் தெரியவில்லை ?

பிணையில் வந்துள்ள ராசா மட்டும் முதன்மை பக்கத்தில் செய்தியாகியுள்ளாரே?

– மணிவர்மா 9 ஜூன் 2012 பகல் 2:12 மணி

“நீங்க ஏன் சினிமால நடிக்ககூடாது” என்று உசுப்பேத்துவதற்கு ஒப்பானது தான்
“நீங்க ஏன் ஜனாதிபதி தேர்தல்ல நிற்க கூடாது என்பதும்”!
சங்(கு)மா

– ஸ்வரா வைத்தி 20 ஜூன் 2012 இரவு 7:15 மணி

தமிழர் ஒருவரே மீண்டும் இந்திய ஒன்றியத்தின் குடியரசுத் தலைவராக வர வேண்டும்.  _ பொன்.இராதாகிருஷ்ணன் பா.ஜ.க

மகிழ்ச்சிதான்… அது இருக்கட்டும்….

தமிழ்நாட்டு கோயில்களில் முதலில் “தமிழரைதான் அர்ச்சகராக நியமிக்க வேண்டும்” என இதே பொன்.இராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுப்பாரா?

– பனங்காட்டு நரி  18 ஜூன் 2012 மாலை 4:50 மணி

என் தலைவர்கள் எவரும் தமிழரல்ல… பெரியார்- கன்னடர், அண்ணல் அம்பேத்கர்- மராட்டியர், மார்க்ஸ் -ஜெர்மானியர்…

ஆனால், மேற்சொன்ன அடையாளங்கள் எதுவும் அவர்களுக்கு பொருந்தாது…. ஏனென்றால்.. அவர்களின் ஒற்றை அடையாளம் மானுடம் மட்டுமே…

மானுடம் மீறும் எந்த தத்துவமும், அடையாளமும் எனக்கு உவப்பானதில்லை…
என் எல்லை எல்லை கடப்பதில்தான் இருக்கிறது..

– மகிழ்நன் பா.ம. 9 ஜூன் 2012 இரவு 7:21 மணி

மாட்டிறைச்சி சாப்பிடுபவன் மிலேச்சன், பஞ்சமன், இழிகுலத்தவன், தீண்டத்தகாதவன் என்றால் மாட்டிறைச்சியையே பிராதான உணவாகக்கொண்ட அமெரிக்கன், ஐரோப்பியன் எல்லோரும் மிலேச்சர்கள்தானே!

தீண்டத்தகாதவர்கள்தானே? அப்படிப்பட்ட தீண்டத்தகாதவர்கள் வாழும் நாடுகளிலே, ஒபாமா, புடின், கார்டன் பிரவுன் போன்ற மிலேச்சர்கள் ஆட்சி செய்யும் நாடுகளிலே ஏதாவது ஒரு வேலை கிடைத்து செட்டிலாகி விட மாட்டோமா என்ற பரிதவிப்புடன் அவர்கள் நாட்டு தூதரக வாசலிலே வரிசையில் நின்று தவம் கிடக்கிறார்களே, இங்கே வர்ணாசிரமத்தை உருவாக்கியவர்களின் வாரிசுகள், இது என்ன முரண்பாடு?

மிலேச்சர்களிடம் வேலை செய்யப்போகிறோம் என்ற எண்ணம் இங்கு மட்டும் ஏன் அவர்கள் மனதில் உருவாகவில்லை?

– ராஜேஷ் தீனா 16 ஜூன் 2012 இரவு 11:02 மணி

மூன்று வருடங்களுக்கு முன் என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்..

நான் ஒன்றியக் குழு தலைவராக இருந்தபொழுது, கான்க்ரிட் ரோடு வசதி வேண்டும் என்று ஊர் மக்கள் சுமார் அய்ம்பதுபேர் ஒற்றுமையாக எங்களிடம் மனு கொண்டு வந்தார்கள். நானும் மனுவைப் பெற்று , மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுத்து, வேலை நடக்கும் தருவாயில் தண்ணீர் வாட்டம் சம்மந்தமாக பிரச்சினை ஏற்பட்டு அய்ம்பது பேர் இரண்டாகப் பிரிந்து மறுபடியும் மனு கொண்டுவந்தார்கள். சிலர் வடக்கு வாட்டம் வேண்டும் என்றார்கள், சிலர் தெற்கு வாட்டம் வேண்டும் என்றார்கள். அவர்களை சமாதானப்படுத்தி, மீண்டும் சிறப்பு நிதி ஒதுக்கி மூடுநிலை வாய்க்காலாகப் பணியைத் தொடர உத்தரவிட்டேன். ஆனால் மூணு மீட்டர் அகலம் இருக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆடங்கல்லை எடுக்கமாட்டேன், பந்தக்காலை புடுங்கமாட்டேன், ஒரு படிக்கட்டு கூட விடமாட்டேன் என்ற தன் அரை அடி நிலத்தை அதற்கு விட்டுக் கொடுக்க மக்கள் தயராக இல்லை. முன்று வருடமாக இப்பணி நிறைவு பெறாமல் இருக்கிறது. மக்கள் சிந்திக்கவேண்டும். இந்த சூழ்நிலையில் நல்ல அதிகாரிகளும் அரசியல்வாதிகள்களும் மனம் வெறுத்து மாறுகின்ற தருணம். நீங்கள் கேட்கலாம்… எல்லாம் இப்படித்தானா என்று… ஒரு புரிதல் இல்லாமல் சுமார் 10-க்கு 7 பணிகள் மக்களின் முரண்பாடுகளாலேயே தடைப்படுகிறது. இதற்குக் காரணம் ஒன்று இரண்டு அல்ல… மதம், சாதி, முன்விரோதம், சுயநலம், பக்தி, ஆசை, இவ்வளவு ஏன் ஜிமிவிணி றிகிஷிஷி க்கு கூட ஏதோவொரு பிரச்சனையை செய்கிறார்கள். இதற்கு ஒரே காரணம் தொலைநோக்குப் பார்வையும் பகுத்தறிவும் இல்லாததுதான். என்னத்த சொல்ல?

– சாந்தி பாபு (முன்னாள் ஒன்றியக்குழு தலைவர், அவினாசி பஞ்சாயத்து, திருப்பூர் மாவட்டம்) 9 ஜூன் 2012 மதியம் 2:05 மணி

-சூர்யா பார்ன் டு வின்
18 ஜூன் 2012 மதியம் 1:20 மணி

 

ஜாதியை ஒழிக்க முடியாது என்று சொல்லும் பேர்வழிகள்…அந்த ஜாதி பேரைச் சொல்லி எங்களுக்குக் காலம்  காலமாக மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளாகிய கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பெற்றுத் தர வழிசெய்த “இடஒதுக்கீடு ஏன்?” என்று கேட்டுக்கொண்டு இந்த பக்கம் வரக்கூடாது… ஜாதி ஒழியும் வரை அது நீடிக்கும்!

– பரணீதரன் கலியபெருமாள் 12 ஜூன் 2012 இரவு 10:05 மணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *