சிந்தனைத்துளிகள் – சிங்காரவேலர்

அழிக்கப்படாத விஞ்ஞான ஆராய்ச்சியால் உண்டான கற்பாங்கின் மேல்தான் நாஸ்திகன் தனது நாஸ்திக மாளிகையைக் கட்டுகின்றான்.  இந்த நாஸ்திகனுடைய மாளிகைக்கு முன் மதங்களின் கற்பனைகள் எம்மாத்திரம்! விநோத திருஷ்டாந்தங்களால் பக்தனைப் போலவே கடவுளும் அமைக்கப்பட்டுள்ளாரே ஒழிய கடவுளும் இல்லை; கடவுளுக்குக் குணமும் இல்லை.  எல்லாம் மனிதனுடைய கற்பனைகள். சிருஷ்டிக் கதைகளைக் கட்டி, அதற்கு வேண்டிய சொற்பொழிவுகளை அமைத்து வேதங்களெனவும், சுருதிகளெனவும், புராணங்களெனவும் பெயரிட்டு, பாமர உலகம் அவைகளை நம்பி நடக்கும்படிச் சூழ்ச்சிகள் செய்துள்ளனர். கற்பித வார்த்தைகளைக் கற்பித்துக் கொண்டு […]

மேலும்....

மடலோசை

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம், உண்மை மாத இதழ் பலமுறை படித்திருக்கிறேன். கடிதத் தொடர்பு இதுவே முதல்முறை. எனது பெயர் கா.சிவஞானம், தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் (வட்டம்) வேப்பத்தூர் பகுதியைச் சார்ந்தவன். தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் M.Phil., வரலாறு பயின்று வருகிறேன்.  நான் தந்தை பெரியாருடைய கருத்தியலை உள்வாங்கி இருக்கிறேன். நான் சோர்ந்து வீழ்ந்தபோதெல்லாம் எனைத் தூக்கி நிமிர்த்தியது அய்யாவின் கருத்துரைகள் அடங்கிய புத்தகமும், உண்மை மாத இதழ் சிந்தனைத் துளிகளும் என் வாழ்வை வளமிக்கதாக்க உதவுகிறது. […]

மேலும்....

பதிவுகள்

ஜப்பானின் வடகிழக்குக் கடலோரப் பகுதியான மியாகி பகுதியில் 7.4 என்ற அளவில் ஏப்ரல் 7, ஏப்ரல் 11(7.1), ஏப் 14 (6.1) இல் பூகம்பம் பதிவாகியுள்ளது. அசாமில் 2 ஆவது மற்றும் கடைசிக் கட்ட சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 11 இல் நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ரூ 2 கோடி பரிசுப் பொருள்கள் பெற்றதற்காகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது என மனுவைத் தள்ளுபடி செய்து சி.பி. அய் நீதிமன்றம் ஏப்ரல் 12 இல் ஆணையிட்டுள்ளது. […]

மேலும்....

பொதுநலம் பேணும் நாத்திகம்

பொதுநலம் பேணுதலுக்கான நல்வழி நாத்திகமே.  உதவிக்கரம் கிடைக்கப்பெறாதவர்களுக்கு உதவி செய்வதே ஒவ்வொரு நாத்திகரின் கடமையாகும்.  கடவுள் நம்பிக்கை ஒவ்வொரு மனிதரின் முயற்சியையும் பலவீனப்படுத்துகிறது. துயரங்கள் மானிடரைத் தொடர்கின்றன.  மனிதரின் தேவை மற்றும் அவசியத்திற்கு அப்பாற்பட்டதுதான் கடவுள்.  அன்றாட வாழ்வியல் ஆதாரங்களைத் தேடுபவர்களுக்கு, தேவைப்படுகின்றவர்களுக்கு நாத்திகர்கள் தங்களது காலம், பணம், உழைப்பு ஆகியவற்றை நல்கிட முன்வரவேண்டும்.  பொதுநலமே ஒவ்வொரு நாத்திகரின் நெஞ்சக் குரலாகும்.  பிறர் நலம் மற்றும் மகிழ்ச்சியில்தான் தம் நலம் மேம்படும். கடவுளை அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட […]

மேலும்....

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சரிதானா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 13 ஆம் நாள் நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் வழக்கத்தைவிட அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கும், வன்முறைகள் இல்லாமல் தேர்தல் நடந்ததற்கும் தேர்தல் ஆணையத்தைப் பாராட்டோ பாராட்டென்று பத்திரிகைகளும் சில அறிவுஜீவிகளும் பாராட்டத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், இந்தப் பாராட்டுக்குத் தேர்தல் ஆணையம் தகுதியானதுதானா என்பதை நடுநிலையோடு எண்ணிப் பார்த்தால் இல்லை என்பதுதான் பதிலாக உள்ளது. மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களோடு சேர்த்து தமிழகத்திற்குத் தேர்தல் நடத்தப்பட்டாலும், எல்லா மாநிலங்களுக்கும். […]

மேலும்....