மூடநம்பிக்கை

அம்மன் இருக்க போலீஸ் எதற்கு? குடிநீரில் பெட்ரோல் கலந்து வந்ததால் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த அரசம்பாளையும் ஊராட்சி ஒன்றிய மக்கள் ஊராட்சித் தலைவரிடம் முறையிட்டுள்ளனர்.  அவசரக் கூட்டம் கூட்டிய தலைவர், குடிநீரில் பெட்ரோல் கலந்தவர்கள் தானாக முன்வந்து 2 நாளில் ஒத்துக் கொள்ள வேண்டும்.  இல்லையெனில், ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் குடியிருக்கும் அம்மனிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி உரலில் மிளகாய் அரைத்து முறையிடப்படும் என்று அறிவித்துள்ளார். 2 நாள் முடிந்தும் பெட்ரோல் கலந்ததாக யாரும் […]

மேலும்....

எச்சரிக்கை

செல்பேசியில் அதிக நேரம் பேசுபவர்களுக்கு மூளைப் புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளது என்று பிரான்சின் லியோன் நகரில் இயங்கிவரும் அய்.நா. உலக சுகாதார அமைப்பின் பன்னாட்டுப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (அய்.ஏ.ஆர்.சி) தெரிவித்துள்ளது. செல்பேசிகளிலிருந்து வெளிவரும் ரேடியோ அலைகளின் மின்காந்தப் புலங்களால் ஒரு வகையான புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு உள்ளது; தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் செல்பேசி பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை; செல்பேசி அதிக நேரம் பேசுவதால் இது போன்ற நோய்கள் வரலாம் என்று […]

மேலும்....

இன்றைய அரசியல் இப்படி..

எதிர்க்கட்சிக்குப் புது இலக்கணம் படைக்கிறாரோ? தமிழக சட்டமன்றத்தில் முதன்மையான எதிர்க்கட்சியாக நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க. 29 உறுப்பினர்களுடன் இடம்பெற்றுள்ளது. ஆனால்,எதிர்க்கட்சியாகச் செயல்பட்டதற்கான எந்த அறிகுறியையும் அவர்களிடம் காணோம்.பொதுவாக புதிய ஆட்சி வந்தவுடன் 6 மாதங்களுக்கு யாரும் விமர்சிக்க வேண்டாம் என்றுதான் இருப்பது வழக்கம். ஆனால், அ.தி.மு.க.ஆட்சியோ மறுநாளே தனது புத்தியைக் காட்டிவிட்டது. புதிய தலைமைச் செயலகம் முடக்கம்,சமச்சீர் கல்விக்கு மூடுவிழா என உடனடித் தடைகள் போடப்பட்டுவிட்டன.இதனை அவர்களின் கூட்டணியில் உள்ள இடதுசாரிகளே கண்டித்துவிட்டனர். ஆனால்,முதன்மையான எதிர்க்கட்சி இன்னும் […]

மேலும்....

செய்திக்கூடை

தலிபான் தலைவர் முல்லா முகமது உமர் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சந்திரனில் பூமிக்கு இணையாக அதிக அளவில் தண்ணீர் இருக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்காவின் கேஸ் வெஸ் ரிசர்வ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜேம்ஸ்வான் ஓர்மன் தெரிவித்துள்ளார். இன்ஜினியரிங் ரேங்க் பட்டியல் 24 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தில் பிறந்து துபாயில் வசிக்கும் சுஜன்னெ (வயது 40) என்ற அரபு நாட்டைச் சேர்ந்த பெண் கடல் மட்டத்திலிருந்து […]

மேலும்....

பளீர்

பத்ரகாளியின் முன்னாள் இன்னொரு தேவநாதன்? பத்ரகாளி கோயிலுக்குப் போய் முறையிட்டால் பணம் மட்டுமல்ல, கேட்டவை அனைத்தும் கிடைக்கும் என்று வாணவேடிக்கைகள் தயாரிப்பில் பெயர்பெற்ற ஊரில் வசிக்கும் பெரியோர்கள் தம் இனத்தோருக்கு_ தம்மைச் சார்ந்த மக்களுக்கு அறிவுரை கூறி கோயிலுக்கு அனுப்பி வைப்பர்.  அந்த அளவுக்கு கோயிலில் இருக்கும் அம்மன் மீது அசையாத நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால், கோயிலுள் அண்மையில் நடைபெற்ற ஒரு தவறான செயலால் மனப் புழுக்கத்தில் உள்ளனர் அப்பெரியோர்கள். கோயிலில் பூசை செய்பவர் என்பதால் சட்டப்படி […]

மேலும்....