ஏடாகூடம் ஏதுசாமி

ஆட்சி பறிபோயிடக்கூடாதுன்னு, டின்டின்னா நெய்யை ஊத்தி, பட்டுத்துணிகளை எரிச்சி பெரிய பெரிய யாகம்…. அளவுக்கு அதிகமா சேர்த்தா சொத்தை கோயில்களுக்குக்  காணிக்கை…. இந்த 21ஆம் நூற்றாண்டில நிர்வாண பூஜையெல்லாம் நடத்திய ஏடியூரப்பாவுக்கு சிக்கல் தீர்ந்தபாடில்லையே… இப்பவாவது அவருக்கு ஆன்மீகப் பித்தம் தெளியுமா….? கிறிஸ்துவ ஆலயத்தில் விளக்குமார் காணிக்கை: பக்தர்கள் நூதன வழிபாடு! – செய்தி இது என்ன மெத்தடுனே தெரியல சார்…. பக்தர்கள், தான் வேண்டிக்கிட்ட காரியம் நிறைவேறிட்டா விளக்குமாரை காணிக்கையாக செலுத்துவாங்க…. காரியம் நிறைவேற லைன்னா, […]

மேலும்....

செய்திக்கூடை

மும்பையில் சர்ச்சைக்குரிய ஆதர்ஷ் கட்டிடம் உள்ள இடம் அரசுக்குச் சொந்தமானது என்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். கவுரவ கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்று நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. லிபியா நாட்டிலிருந்து இத்தாலிக்குச் சென்ற கப்பல் உடைந்ததால் அதிலிருந்த 600 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொலை தொடர்பாக அய்க்கிய நாடுகள் விசாரணை நடத்த வேண்டும் என அவரது மகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். […]

மேலும்....

கொதிக்கும் ரத்தம்

மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா உயிரினங்களுக்கும் ரத்தவோட்டம் இருக்கிறது. தாவரங்களுக்கு ரத்தம் என்பது தண்ணீர்தான். எல்லா விலங்குகளுக்கும் ரத்தம் சிவப்பாக இருப்பதில்லை. சில உயிரினங்களுக்கு வெள்ளையாகக்கூட இருக்கிறது. பதினாறாம்  நூற்றாண்டு வரை உடலில் ரத்தம் இருக்கிறது என்று தெரியுமே தவிர அது சுற்றோட்டம் (circulation)ஆகிக் கொண்டிருக்கிறது என்பது மருத்துவர்களுக்குக் கூடத் தெரியாமல்தான் இருந்தது. இங்கிலாந்தில் வாழ்ந்த வில்லியம் ஹார்வி ( ஏப்ரல் 1, 1578 –  ஜூன் 3, 1657 )என்பவர்தான் இதயம் ஒவ்வொரு முறையும் துடிக்கும்போது இரண்டு […]

மேலும்....

பெரியார் என்னை ஈர்த்தார் – நம்பூதிரிபாத்

எங்களுடைய சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட நான், என்னுடைய இளம்வயதில் ஒரு பக்தி உணர்ச்சியுடைய இந்துவாக இருந்தேன்.  நான் பங்கெடுத்திருந்த சமூக சீர்திருத்த இயக்கம்கூட இந்துமத வாதத்தின் வடிவமைப்பிற்குள்ளேயே சமூகத்தைச் சீர்திருத்த வேண்டுமென்று கருதி வந்ததாகும்.  சுவாமி விவேகானந்தரைக் குறித்தும் நான் ஏராளமாகப் படித்தேன்.  நான் பள்ளிக்குச் செல்லும் முன்பு எனக்குக் கல்வி புகட்டிய ஆசிரியர், விவேகானந்தரின் தீவிரமான அனுதாபியாவார்.  எனவே, இந்துமகாசபை மீது எனக்கு சிறிது பற்றுதல் இருந்தது.  அதனுடைய தலைவர்களான பண்டிட் மாளவியா, டாக்டர் மூஞ்சே ஆகியோர் […]

மேலும்....

மூக்கு மற்றும் காது குத்திக்கொள்வது ஏன் என உங்களுக்குத் தெரியுமா?

ஆண்களின் மூச்சுக்காற்றைவிட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி, அதாவது பவர் அதிகம். இதனால் பெண்கள் மத்தியில் நிற்பவர்களுக்கு அசௌகரியமாக இருக்கும். இதனால், மூக்குக் குத்திக் கொள்ளும் வழக்கம் உருவானது.  மூக்குக் குத்துவதினாலும், காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது.  மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்தத் துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்தத் தங்கம் உடலில் உள்ள வெப்பத்தைக் கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து […]

மேலும்....