கலைஞர் பிறந்த நாள் : ஜூன் 3 சொர்க்கத்திற்கு வந்தது எப்படி?

சொர்க்கலோகத்தில்… சோலை, விருந்து! இவை எதையுமே கவனிக்காமல் புல் தரையில் ஒரு கூட்டம் அமர்ந்திருந்தது.  அந்தக் கூட்டத்தினரின் தோள்பட்டையில் ஒரு மஞ்சள் நிறத் துண்டுத் துணி தொங்கிற்று.  அதில் நீல வர்ணத்தில் குடியேறியவர் என்று குறிக்கப்பட்டிருந்தது.  முகங்களைப் பார்க்கும்போது பூலோகவாசிகளே என்பது நன்றாகத் தெரிந்தது.  ஆமாம்…. பூலோகவாசிகள்தான்!  கண்ணப்ப நாயனார், காரைக்கால் அம்மையார், நந்தனார், சிறுத்தொண்டர்… இன்னும் எல்லோரும் இருந்தனர்.  அவர்கள் பேச்சு பெரிய விவாதமாக அமையவில்லை.  ஆளுக்கு ஒரு வார்த்தை பேசினார்கள்.  அது அவர்கள் சொர்க்க […]

மேலும்....

அந்த குண்டு

மே 22 காலை ஒரு பத்திரிகை நண்பரிடம் அந்தத் தகவலைச் சொன்னபோது மிகுந்த துயரப்பட்ட அவர் உடனே சொல்லிய வார்த்தை நாம் யாருக்கு ஆறுதல் சொல்வது? என்றதுதான். நாம் சொன்னோம், ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டதைப் போல நமக்கு நாமே ஆறுதலைச் சொல்லிக் கொள்ளும் நிலையில்தான் விடுதலை குழுமம் தனது வேதனைக் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறது என்று சொன்னோம். 40 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட  இயக்கத்தின் கருத்துகளை பத்திரிகைகளில் எழுதி வந்தவர்; தந்தை பெரியாரைத் […]

மேலும்....

அமெரிக்காவில் ஈழ முழக்கம்

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்குத் தண்டனை கொடுக்கச் சொல்லி மே 18 ஆம் தேதி, நியூயார்க்கில் உள்ள அய்க்கிய நாட்டு சபையின் முன்பாக மாபெரும் போராட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் சார்பில் தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ், பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பில் மருத்துவர் சோம இளங்கோவன் மற்றும் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். கனடா, அமெரிக்க வாழ் ஈழத் தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள், மற்றும் அவர்களுடைய அமெரிக்க நண்பர்கள் என்று ஆயிரக்கணக்கானோர் ராஜபக்சேவுக்கு எதிராக, குற்றவாளி […]

மேலும்....

மருத்துவக்கல்வி : தமிழகமும் இந்தியாவும்

இந்தியாவிலேயே மிகச் சிறந்த கல்வி, சுகாதார வசதிகளும், பிரச்சினை யில்லாத வாழ்வும் இருப்பது தமிழகத்தில்தான். ஒருமுறை வடநாட்டுப் பயணம் சென்று வருவோருக்கே இந்த விவரம் எளிதில் புரிந்துவிடும். ஆனால், ஊடகங்களும், புதிய அறிவு ஜீவிகளும் அங்கே பார், இங்கே பார் என்று போக்குக் காட்டுகிறார்கள். உண்மையில், நம் தமிழ்நாடு வளர்ச்சிப் போக்கில் எப்படி இருக்கிறது என்பதை மருத்துவக் கல்வியை ஒரு கருதுகோளாக எடுத்துக்கொண்டு நாம் பார்ப்போம். இந்தக் கட்டுரை மருத்துவக் கவுன்சலின் தளத்தில் உள்ள விபரங்களின் அடிப்படையில் […]

மேலும்....

பதிவுகள்

கருநாடக சட்டசபையிலிருந்து 11 பாரதிய ஜனதா மற்றும் அய்ந்து சுயேச்சை அமைச்சர்களைத் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று மே 13 அன்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தனது அரசின் மெஜாரிட்டியை குடியரசுத் தலைவரின் முன்பு 114 எம்.எல்.ஏக்களுடன் சென்று எடியூரப்பா மே 17 அன்று நிரூபித்தார். செக்ஸ் புகாரில் சிக்கிய சர்வதேச நிதி நிறுவனத் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்கான் மே 15 அன்று கைது செய்யப்பட்டார். எலக்ட்ரானிக் டேக், வீட்டுக்காவல் உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளுடன் மே […]

மேலும்....