சிறுகதை

பொய்வேலி அப்பப்பா என்னா வெயில் அடிக்குதடி… அடியே, கோகுலம் என்று கூவிக்கொண்டே ஆத்துக்குள் நுழைந்தார் அம்பிப் பட்டர். ஏன்னா, வந்துட்டேளா எனக் கத்திக் கொண்டே அடுப்பங்கரையிலிருந்து எதிரே வந்தாள் கோகுலம் மாமி. ஏண்டீ, அந்த நெல்லைக் காயப்போட்டியோ இல்லையான்னோ என்றார் வேகத்தோடு பட்டர். போட்டு எடுக்கலாமேன்னுதான் நினைச்சுண்டிருந்தேன்… ஆனா… மேகம் வேற கருத்துண்டு பயமுறுத்திண்டே இருக்கிறதப் பார்த்தா மழை பெய்ஞ்சிருமோ… நெல்லெல்லாம் நனைஞ்சி பாழாயிடுமோன்னுதான் காயப்போடலேன்னா என்றாள் கோகுலம். அடியே… நாளைக்கு நெய்வேத்தியம் அதுலதாண்டி பண்ணணும்… வேற […]

மேலும்....

உலகப் பகுத்தறிவாளர்

கிறிஸ்டோஃபர் ஹிட்சென்ஸ் – சு.அறிவுக்கரசு எல்லா மத நம்பிக்கைகளுமே, கெட்டவையாகவும் வளர்ச்சி பெறாத தன்மையிலுமே உள்ளன என்றார் ஹிட்சென்ஸ். நம் ஊர் இந்து முன்னணிக்காரர்கள் போலவே, சிலர் அவரைக் கேட்டார்கள், கத்தோலிக்கர்கள் என்றாலே உங்களுக்கு வெறுப்புபோல என்று!  அதற்குத்தான் அவர் மேற்காணும் பதிலைக் கூறினார்.  நெருப்புத் துண்டங்களில் முன் துண்டம் என்றாலும் பின் துண்டம் என்றாலும் நெருப்புதானே! ஹிட்சென்ஸ், கிறித்துவராகவே வளர்க்கப்பட்டவர்.  கிறித்துவ போர்டிங் பள்ளிகளில் படித்தவர்.  ஆனாலும்கூட, சிறுவயதிலிருந்தே பிரார்த்தனை செய்யாதவராக இருந்தார்.  அவர் பாதி […]

மேலும்....

பளீர்

இன்னொரு புளுகன் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கம்பதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (24). பட்டதாரியான இவர் சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணைக் காதலித்துள்ளார். இதனையறிந்த பெண்ணின் பெற்றோர் ரமேஷை அடித்துத் துரத்தியுள்ளனர். சில நாள்கள் காட்டுப் பகுதிகளில் சுற்றித் திரிந்த ரமேஷ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊருக்குள் வந்து, தானே புட்டபர்த்தி சாய்பாபாவின் அவதாரமாகிய பிரேம்சாய் எனக் கூறி விபூதி வரவழைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.இதனைக் கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாகப் பார்க்க […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி: வை.கோ.வின் எதிர்காலம் என்னாகும்?  – வி. கலையரசி, அரியலூர் பதில்: அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியது அவர்தான். நாமல்லவே! கேள்வி : தந்தை பெரியாரை நீங்கள் முதன்முதலாய் சந்தித்துப் பேசியது எப்போது? – கே. ஆர். இரவீந்திரன், சென்னை -1 பதில்: 1944இல் – கடலூர் திருப்பாதிரிப்புலியூரில். (அய்யாவின் அடிச்சுவட்டில்  நூலில் விவரங்கள் காண்க) கேள்வி : சி.பி.அய். அமைப்பை, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் காங்கிரஸ் கறைபடியாத கட்சியா? – க. பூபாலன், ஈரோடு பதில்: கல்மாடிகளைக் […]

மேலும்....

பெண்ணின் அணிமணி, அலங்காரத்திற்கு வரம்பு தேவை – தந்தை பெரியார்

வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த நிகழ்ச்சியானது இதுவரை நடைபெற்று வந்த நிகழ்ச்சிக்கு மாறுதலாக நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி சமீப காலத்தில் 40, 50 ஆண்டுகளுக்கு முன் மனித சமுதாய முறைகளில் சில மாற்றங்கள் செய்த போது இந்நிகழ்ச்சியும் மாற்றியமைக்கப்பட்டது என்பதோடு பழைய முறையில் பெண்ணடிமையை நிலைநிறுத்தும் படியாகவும் மனிதனின் மூட நம்பிக்கையை வளர்ப்பதாகவும், ஜாதி அமைப்பைக் காப்பாற்றுவதாகவும் இருந்ததால் இவற்றை ஒழித்து புது முறையைக் காண வேண்டியதாயிற்று. தமிழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி இருந்தது கிடையாது. ஆணும் பெண்ணும் கூடி வாழ்கிற இந்த முறையானது ஆரியனுக்குத்தான் உண்டு. தமிழனுக்குக் கிடையாது. பார்ப்பானுக்காக பார்ப்பானால் ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இக்கூட்டு வாழ்க்கை முறையாகும்.

மேலும்....