மூன்றாம் ஆண்டில் பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை

படைப்புலகம் என்பது இன்று காட்சி வடிவிலானதாக மாறியிருக்கிற சூழலில், இளைஞர்களிடமும், முற்போக்குச் சிந்தனையாளர்-களிடமும் அதற்கான ஆர்வமும், முனைப்பும் ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தின் வெகு சாதாரணமான நகரங்களிலும், கிராமங்-களிலும்கூட குறும்படம் மற்றும் ஆவணப்படங்கள் குறித்த விழிப்புணர்வு உருவாகியிருக்கிறது. அவற்றில் முற்போக்குச் சிந்தனை-களையுடைய குறும்படங்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. ஜாதி – மத ஒழிப்பு, பெண்ணுரிமை, பகுத்தறிவு உள்ளிட்ட தலைப்புகளில் எடுக்கப்படும் குறும்படங்களின் படைப்பாளிகள், பிற்காலத்தில் நல்ல பல படைப்புகளைக் கொள்கை உணர்வோடு தரவல்லவர்களாக இருக்கிறார்கள். தங்களின் சொந்த முயற்சியில் படைப்பை […]

மேலும்....

பூஜை

அளவிட முடியாத ஆனந்தத்தில் இருந்தனர் கோவிந்தனும் அவன் மனைவி லெட்சுமியும்.  பதின்மூன்று ஆண்டுகளாய் தன்னுடைய நிலப்பிரச்சினையில் கோர்ட் கேஸ் என அலைந்து திரிந்து அலுத்துப் போனவர்களுக்கு இன்று கேஸ் ஜெயித்து ஒன்றரை இலட்சம் ரூபாயைக் கையில் வாங்கியதால் மனம் மகிழ்ந்து போயிருந்தனர். ஒன்றரை இலட்சத்தையும் மனைவியின் கையில் கொடுத்து இந்தப்பணத்தை வாங்க,  தான் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டேன் எனப் பெருமை பேசிக்கொண்டிருந்தார் கோவிந்தன். நீங்க பட்ட கஷ்டத்துக்குக் கை மேல பலன் கெடச்சிருச்சு என்றாள் லெட்சுமி. அடி இவளே […]

மேலும்....

இவர் பகுத்தறிவாளர் – புரூஸ் வில்லிஸ்

பெயர்: புரூஸ் வில்லிஸ் (Bruce Willis) பிறப்பு: 19 மார்ச் 1955 நாடு: மேற்கு ஜெர்மனியில் பிறந்த அமெரிக்கர் துறை: ஹாலிவுட் திரைப்படத்துறையில் நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் 1980 இல் தொடங்கி இதுவரை 68 படங்களில் நடித்துள்ளார்; 6 படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். சிறப்பு: இவர் முதலில் தொலைக்காட்சி நடிகராக இருந்து பிறகு உலகம் அறிந்த முன்னணி நடிகராக உயர்ந்தவர். ஹாலிவுட்டில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்து அதிக வருவாய் ஈட்டும் பட வரிசையில்  6 ஆவது இடத்தில் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

தமிழர் வரலாற்றில் பதிவு செய்யப்படாமல் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் செய்திகள் பல உண்டு.  தமிழ் ஆளுமைகளின் வாழ்வில் நிகழ்ந்த பல நிகழ்வுகள் இன்னும் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன.  ஆயினும், சிலர் இந்தப் பணியைச் செவ்வனே செய்து வருகின்றனர். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் மைந்தர் மன்னர் மன்னன் புரட்சிக் கவிஞரின் நினைவுகளை இடைவிடாது பதிவுசெய்து வருகிறார்.  அதில் பல நமது உண்மை இதழிலும் வெளி-வந்துள்ளது. இப்படி எழுதிய நினைவுகளைத் தொகுத்து விழிகள் பதிப்பகம் இந்நூலைத் தந்துள்ளது.  அந்நூலிலிருந்து சில பகுதிகள் இங்கே…. […]

மேலும்....

இவர்தான் பெரியார்

தமிழகத்தில் எண்ணற்ற சீர்திருத்தவாதிகள் தோன்றி இருக்கிறார்கள்.  அவர்களில் முக்கியமானவர் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள். அவரது எழுத்துகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப் பட்டிருக்கின்றன.  அவற்றை நான் படித்து மிகவும் உத்வேகம் அடைந்திருக்கிறேன்.  மனிதகுல சமத்துவத்திற்காகவும், பெண்கள் விடுதலைக் காகவும், ஜாதி ஒழிப்புக்காகவும், அவர் ஏராளமான இயக்கங்களை நடத்தி இருக்கிறார்.  இந்தியாவிலேயே சமூகப் புரட்சியை ஆரம்பத்தி லேயே கொண்டு வந்தவர் தந்தை பெரியார் என்பதை நான் நன்கு அறிவேன். – ஷீலா தீட்சித், முதலமைச்சர், புதுடில்லி

மேலும்....