மடலோசை
அன்புடையீர் வணக்கம் ஜனவரி (1_15) உண்மை இதழில் அருளானந்தரின் ஆன்மீகம் எனும் தலைப்பில் ஈரோடு மே. அ. கிருஷ்ணன் அவர்களின் சிறுகதை படித்துப் பரவசமானோம். பாலியல் கொடுமை புரியும் காவி அணிந்தவர்களையும், புரியாத சமஸ்கிருத மொழியில் சடங்குகள் செய்வதைக் கண்டித்தும், தமிழ்த் திருமணமுறையின் அவசியம்பற்றியும், அவருக்கே உரிய நகைச்சுவை கலந்த நாடகப்பாங்கும், கற்பனைத்திறமும் கொண்டு, படிப்போருக்குத் தொடக்கம் முதல் நிறைவுவரை விறுவிறுப்பாக வியக்கத்தக்க நடையுடன், இன்றைய காலகட்டத்தில் தமிழ்ச் சமுதாயத்திற்குத் தேவையான கருத்துகளைக் கூறியுள்ள பாங்கு போற்றற்குரியது. […]
மேலும்....