கவிதை : ” உண்மை” பேசும்! உண்மை இதழ்!

ஒளியினும் வேகம் மின்னலாய்ப் பாய்ச்சல் பொய்மை ஊமையாக ‘உண்மை’ பேசும். ஈரோட்டுப் பெரியாரின் கடவுள் மறுப்பு சமூகநீதி சமத்துவப் பாதை கருஞ்சட்டை வீரர்தம் களப்பணி போற்றி ‘உண்மை’ பேசும் வந்தேறிப் பெண்டிர் சிவப்புத் தோலில் சிந்தை மயங்கி மன்னர்கள் ஆட்டம் செந்தமிழில் வடமொழி கலப்பு. ஆரியன் ஆசைக்கு கோயிலைக் கட்டி கட்டியதில் அவனையே வேலைக்கு அமர்த்தி ஊரையே இனாமாக எழுதியும் கொடுத்து வரிவசூல் செய்யும் உரிமையும் அளித்து ஆரியன் உயர பூர்வக்குடி தவிக்க மன்னர்கள் செய்த மாபெரும் […]

மேலும்....

சிறுகதை : கடவுளால் ஆகாதது!

தத்தவமேதை டி.கே.சீனிவாசன் மணி அடித்தது. கூச்சலும் குழப்பமும் ஒருவாறு அடங்கி அமைதி நிலவ ஆரம்பித்தது. ஆசிரியர் உள்ளே நுழைந்தார். கதாநாயகனை எதிர்பார்த்து கதாநாயகி, எப்போ வருவாரோ? எனக் காத்திருப்பதுபோல, யாருடைய வரவுக்காகவோ எல்லோரும் காத்திருந்தனர். கட்டுப் புத்தகங்களை மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள் அந்தப் பெண்கள். இடத்தில்போய் உட்காரும் வரையில் பார்வையைத் துணைக்கனுப்பி உட்கார்ந்தவுடன் இழுத்துக் கொண்டனர் அத்தனை ஆடவர்களும். பாடம் ஆரம்பித்தது. நான் அன்றுதான் புதிதாக அந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தேன். நான் படித்த  […]

மேலும்....

நாடகம் : புது விசாரணை(3)

(ஒரு நாடகக் தொடர்) இந்த நீதிமன்றம் எத்தனையோ வழக்குகளை சந்தித்திருக்கிறது. ஆனால், இந்த வழக்கு புது விசாரணைக்காக இந்த நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டு குறுக்கு விசாரணை எல்லாம் நடைபெறுகிறது. பழைய புராண பாத்திரங்களின் தன்மை – மனுநீதி அடிப்படையில் அப்போது சாஸ்திர, புராண, இதிகாசங்களில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளுக்கான மறு விசாரணைக்கான மனு, வழக்குரைஞர் புத்தியானந்தாவினால் தாக்கல் செய்யப்பட்டு, மாண்பமை நீதிபதி நெடுஞ்செழிய பாண்டியன் அவர்களால் விசாரிக்கப்படுகிறது. ஏற்கெனவே இந்த நீதிமன்றத்தில் இப்படிப்பட்ட பழைய அநீதிகளுக்குப் புதிய நீதி வழங்க […]

மேலும்....

இயக்க வரலாறான தன் வரலாறு(244) : சி.பி.எஸ்.ஈ மதிப்பெண் ஊழல்!

அய்யாவின் அடிச்சுவட்டில் … கி.வீரமணி  10.7.1992 அன்று திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூரில் நடைபெற்ற அன்னை மணியம்மையார் பெயரிலான மகப்பேறு இல்ல அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் மகப்பேறு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி உரை நிகழ்த்தினேன். அதே நாளில் எரவாஞ்சேரியில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு அய்யா சிலையைத் திறந்துவைத்து உரை நிகழ்த்தினேன். அப்போது, “தந்தை பெரியார் அவர்களுடைய முதல் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறுகின்றது. பல சிலை […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : கல்வியில் கண்ணிவெடியில் எச்சரிக்கை! எச்சரிக்கை!

கவிஞர் கலி.பூங்குன்றன் புதிய கல்விக் கொள்கை: 1991இல் புதிய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின் கல்வி, மருத்துவம் ஆகியவை தனியார்க்கு தாரை வார்க்கப்பட்டன. மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையும் ஏழைகளுக்கு ஒரு கல்வியும், வசதி படைத்தவர்களுக்கு சிபிஎஸ்இ மெட்ரிக் பள்ளிகளையும் உருவாக்கின. 120 கோடிக்கு மேல் உள்ள இந்திய மக்களில் 40 சதவிகிதம் மக்கள் கல்வியற்றவர்களாக இருக்கிறார்கள். கல்வி உரிமைச் சட்டம் 2009இல் கொண்டு வரப்பட்டு 1.4.2010 முதல் அமலுக்கு வந்தது. ஆனால், […]

மேலும்....