சிறுகதை – மனிதனை நினை

ஆறு.கலைச்செல்வன் மார்ச் மாதம் தொடங்கிவிட்டது! இந்த மாதம் தொடங்கிவிட்டாலே பள்ளிப் பிள்ளைகளுக்கு தேர்வுச் சுரம் வந்துவிடும். ஆண்டு முழுவதும் புத்தகத்தைக் கையில் எடுக்காவிட்டாலும் தேர்வு காலம் நெருங்கியவுடன் புத்தகமும் கையுமாகத் திரியும் மாணவ மாணவிகளை நாம் எங்கும் காணலாம். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு ஆண்டு முழுவதும் ஏதாவது வீட்டு வேலைகள் கொடுத்துக் கொண்டிருந்தாலும் தேர்வு வந்தவுடன் விழிப்புணர்வு பெற்று பிள்ளைகளுக்கு வீட்டு வேலைகள் எதுவும் கொடுக்காமல் படிக்கச் சொல்லி வற்புறுத்துவார்கள். இது ஏழை, பணக்காரர் என்கிற வித்தியாசம் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (252)

பிரபஞ்சனின் உணர்ச்சிமிகு கடிதம் கி.வீரமணி   15.5.1994 திருச்சி லால்குடி வட்டத்தில், அய்யா உருவாக்கிய விடுதலைபுரத்தில் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்தேன். விடுதலைபுரத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த தந்தை பெரியார் கடும் மழையின் காரணமாக அவர் வந்த வாகனம்  சேற்றில் நகர முடியாமல் அங்கேயே நின்றுவிட்டதாகவும், கழகத் தோழர்கள் மாட்டு வண்டியில் தந்தை பெரியாரை அழைத்துச் சென்றதாகவும், கடும் மழையின் காரணமாக அன்றிரவு தந்தை பெரியார் விடுதலைபுரத்திலேயே தங்கி விட்டதாகவும் விடுதலைபுரம் திராவிடர் கழகத் […]

மேலும்....

சிறப்புக் கட்டுரை : செயற்கரிய செய்தார் பெரியார்!

கோவி.லெனின் இப்போது போலத்தான் 80 ஆண்டுகளுக்கு முன்பும் அவர்கள் அப்படியேதான் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘திராவிடத்தை ஒழித்துவிட்டோம்’ என்று அவர்களுக்-குள்ளாகவே பேசி கிச்சுகிச்சு மூட்டி சிரித்துக் கொண்டார்கள். பிரிட்டிஷார் ஆட்சியில் 1937இல் நடந்த சென்னை மாகாண (சட்டமன்ற) தேர்தலில் திராவிட அரசியல் அமைப்பான நீதிக் கட்சியைத் தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. “1000 அடி குழி தோண்டி, ஜஸ்டிஸ் பார்ட்டியை (நீதிக்கட்சி) புதைத்துவிட்டோம்’’ என்றார் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி. அவரது எதிர்க்-கோஷ்டித் தலைவரான ராஜாஜி முதலமைச்சர் (பிரிமியர்) ஆனார். […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : உலகச் சுயசிந்தனையாளர் தந்தை பெரியார்

மஞ்சை வசந்தன் தந்தை பெரியார் உலகத் தலைவர் என்பதோடு உலகுக்கு உகந்த உயரிய சிந்தனைகள் வழங்கிய உலகச் சிந்தனையாளரும் ஆவார். அதனால் தான் அவரை உலகம் ஏற்றுப் போற்றுகிறது, அவரும் உலகமயமாகி வருகிறார். திராவிட இனத்தின் மீட்சிக்கும் மேன்மைக்கும் அவர் தொண்டாற்றிய போதிலும், உலக மக்களின் சமத்துவத்திற்காவும், உயர்வுக்காகவும், விழிப்பிற்காகவும் தொடர்ந்து தொண்டாற்றினார். கருத்துகளைக் கூறினார். அவரது உலகளாவிய சிந்தனைகளைப் பகுத்து, தொகுத்து இனி காண்போம். உலக நோக்கில் உயரிய சிந்தனைகள் : மக்கள் உலகம் முழுவதும் […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : பிறந்தநாள் விண்ணப்பம்

தந்தை பெரியார் என் 93-ஆம் ஆண்டு பிறந்த நாள் மலருக்கு ஒரு செய்தி வேண்டும் என்று நண்பர் திரு.வீரமணி அவர்கள் கேட்டார். சற்றேறக்-குறைய 10 ஆண்டுகளாகவே என் பிறந்தநாள் மலருக்குச் சேதி கொடுத்துக் கொண்டுதான் வருகிறேன். முதலாவதாக என் பிறந்த நாள் என்பது என் பிரச்சாரத்திற்கு ஒரு சாதனமாக, ஓர் ஆதாரமாக விளங்குகிறது என்பது ஒரு கல்லுப் போன்ற சேதியாகும். நான் சமுதாயச் சமத்துவத்திற்குப் பாடுபடுகின்ற ஒரு தொண்டனாவேன். அதாவது ஜாதி அமைப்பை அடியோடு ஒழிக்கப் பாடுபடுபவன். […]

மேலும்....