வாசகர் மடல்

‘உண்மை’ நவம்பர் 1 -15 இதழில் வெளிவந்த கட்டுரைகள் அனைத்தும் அருமை. ‘தீபாவளி’ பற்றிய மஞ்சை வசந்தன் அவர்களின் கட்டுரை பயனுள்ளதாக இருந்தது. ஆரியர்கள் எப்படி தன்னுடைய பண்டிகைகளை நம்முடைய பண்டிகைகளாக மாற்றி அதன் மூலம் வணிகம் செய்கிறார்கள் என்பதை மக்கள் யோசிக்க வேண்டும். உளவியல் ஆலோசகர் வே.எழில் அவர்களின் ‘ஆண் குழந்தை வளர்ப்பு’ கட்டுரை இன்றைய சூழலில் மிக முக்கியமான ஒன்று. பெற்றோர்கள் தங்களின் ஆண் பிள்ளைகளுக்கு பெண்களின் உடல் போக்குகளையும், அவர்களுடைய குணம் சார்ந்த […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (66): வைத்தியநாத அய்யரின் யோக்கியதை!

நேயன் சுசீந்திரம் ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் பிரவேச உரிமையை நிலைநாட்ட தீண்டாதாரும் அவர்களிடம் அனுதாபம் உடையவர்களும் ஆரம்பம் செய்திருக்கும் சமதர்மப் போர் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. தினந்தோறும் மாலை 4:00 மணிக்கு ஆலயத்துக்குச் செல்லும் சந்நிதித் தெருவில் 4 தொண்டர்கள் சத்தியாக்கிரகம் செய்கிறார்கள். இதுவரை தலைவர் ராமன் பிள்ளை உள்பட 21 பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். அவர்களில் 4 பேருக்கு திருவிதாங்கூர் பீனல்கோடு 90ஆவது செக்ஷன்படி 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட […]

மேலும்....

சிந்தனை : இனிவரும் காலத்தில் பிரபஞசம்

முனைவர் வா.நேரு   “இன்றைய உலகமானது பழங்கால உலகம் என்பதிலிருந்து நாளுக்கு நாள் எப்படி மாறுதலடைந்து வந்திருக்கிறது? இனிச் சில நூற்றாண்டுகளில் எப்படிப்பட்ட மாறுதலை அடையும்? என்பனவாகிய விஷயங்கள் பகுத்தறிவாதிகளுக்குத்தான் ஏதாவது தெரியக் கூடுமே தவிர, புராண இதிகாசப் பண்டிதர்கள் என்பவர்களுக்கு, அதுவும் நம் “கலை, காவியப் பண்டிதர்களுக்குத் தெரிவது சுலபமான காரியமல்ல” என்றார் தந்தை பெரியார். (இனிவரும் உலகம்… முன்னுரை). அறிவியல் பற்றி எல்லாம் கவலைப்படாமல், புராண இதிகாசப் பண்டிதர்கள் கதை அளந்து கொண்டிருந்த காலத்தில் […]

மேலும்....

பெண்ணால் முடியும் : நோபல் பரிசு பெறும் பெண்கள்

2020ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில் நான்கு பெண்கள் வெவ்வேறு பிரிவுகளில் நோபலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இருவரும் அறிவியல் பிரிவில் நோபல் பரிசைப் பெறும் முதல் பெண்கள் குழு என்கிற பெருமையைப் பெற்றிருக்கின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் க்ளக், இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார். ஆண்ட்ரியா கெஸ் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1965இல் பிறந்த ஆண்ட்ரியா கெஸ், வானியற்பியலாளர், வானியல் – இயற்பியல் பேராசிரியர். பால்வீதியின் நடுவில் நாற்பது லட்சம் சூரியன்களின் எடைகொண்ட கருந்துளை இருப்பதற்கான ஆதாரங்களைக் […]

மேலும்....

சிறுகதை : ஈரோட்டுப் பாதை!

துறையூர் க.முருகேசன்   டேய் குபேரா! குபேரா! வேலைக்காரனைக் கூப்பிடும் தோரணையா இது? – பிச்சைக்காரனுக்கு! விஜயா கோபக்காரி! அவள் முன்தானா அப்படிக் கூப்பிட வேண்டும்? சிவனாருக்குப் போல் நெற்றிக்கண் இருந்தால் எரித்திடுவாளே! பிச்சைக்காரன் அவர் பெயர் _ பெரிய கோடீஸ்வரர். குபேரன் அவன் பெயர் _ பிச்சைக்காரனின் பண்ணை வேலை ஆள்! என்ன கொடுமை! நீங்கள் அவனை குபேரா! குபேரா! என்று கூப்பிடுறீங்க, உங்கள் நண்பர்கள், சொந்தக்காரரெல்லாம் உங்களை பிச்சைக்காரா பிச்சைக்காரா என்கிறார்கள்? தூக்கில் அல்லவா […]

மேலும்....