சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: ’இந்துவாக நான் இருக்க முடியாது’

நூல்:  ‘இந்துவாக நான் இருக்க முடியாது’ – ஆர்எஸ்எஸ்-ஸில் ஒரு தலித்தின் கதை ஆசிரியர்: பன்வர் மெக்வன்ஷி தமிழில்: செ.நடேசன் முகவரி: எதிர் வெளியீடு,  96, நியூ ஸ்கீம் ரோடு,  பொள்ளாச்சி – 642 002 தொலைபேசி: 04259 226012, 99425 11302  விலை: ரூ.299/- உணவைப் பொட்டலம் கட்டும் நண்பர் அயோத்தி செல்லும் வழியில் இறந்தவர்கள் மற்றும் பில்வாராவில் இறந்த இருவர் ஆகியோர் தியாகிகள் என்று பிரகடனப்படுத்தப்பட்டார்கள். அவர்களது அஸ்தியைக் கொண்ட கலசங்கள் கிராமம் விட்டு […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : பாலின குற்றங்களுக்கு பா.ஜ.க ஆதரவு!

கே:       பா.ஜ.க.வின் “வேல் யாத்திரை’’ எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதற்கான முயற்சியா?  – செ.கோவிந்தன்,பொற்பந்தல் ப:          எதைத் தின்றாலும் பித்தம் தீராது! தமிழ்நாட்டில் பா.ஜ.க. சித்தம் நிறைவேறாது. எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைக்காது! கே:       மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர் குழுவில் பெண்ணுக்கு எதிரே சிறுநீர் கழித்த அநாகரிக ஆளை இடம்பெறச் செய்திருப்பது எதைக் காட்டுகிறது?  – சரவணன், வியாசர்பாடி ப:பா.ஜ.க._ஆர்.எஸ்.எஸ். எந்த அளவு பாலினக் குற்றம் புரிந்தோரைப் பாதுகாத்து மகுடம் சூட்டி மகிழ்கிறது […]

மேலும்....

கவிதை: நமக்கு வேண்டாம்!

நலக்கல்வி புதுக்கல்வி நாட்டு மக்கள்                 நன்மைக்கே உருவான கல்வி என்றே குலக்கல்வி தனைமீண்டும் கொண்டு வந்தே                 குரைக்கிறது குள்ளநரிக் கூட்டம்! மக்கள் பலருக்கும் கேடுதரும் அழிவைச் சேர்க்கும்                 பயன்நல்கா சமற்கிருதம் இந்தி மூலம் சிலருக்கு மூன்றுவிழுக் காட்டி னர்க்கே                 சிறப்பனைத்தும் சேர்த்திடவே துடிக்கின் றார்கள்! புதியகல்விக் கொள்கையினால் தமிழ் நாட்டுக்குப்                 புல்லளவும் பயன்விளையப் போவ தில்லை! ஒதியமரம் உத்திரத்துக் காகா! எந்த                 ஒப்பனையும் சிறுபொழுதில் கலைந்து போகும்! மதியிழந்து […]

மேலும்....

மருத்துவம்: இதய, நுரையீரல் பொறி (ECMO)

(Heart Lung Machine) “எக்மோ’’ கருவியைப் பற்றி இப்பொழுது அடிக்கடி படிக்கின்றோம். முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களுக்கு எக்மோ ((ECMO- Extra Corporal Membrane Oxygenation) மருத்துவம் செய்ததாக பரபரப்பான செய்தியை நாமறிவோம். சமீபத்தில்கூட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இம்மருத்துவம் செய்யப்பட்டதாக நாம் படித்திருக்கிறோம். நுரையீரல் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, முழுதும் செயலிழந்துவிட்டால் “காற்று மாற்றம்’’ செய்ய இயலாத நிலை ஏற்படும். அவ்வேளைகளில் நுரையீரல் செய்யும் வேலையை, வெளியில் உள்ள ஒரு பொறி செய்யும். எப்படி […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (18) நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease)

மரு.இரா.கவுதமன் நுரையீரலில் ஏற்படும் நாள்பட்ட நோய்களால், நுரையீரலில் உள்ள திசுக்கள் சேதமடையும். அதனால் நுரையீரல் முழு அளவு காற்று மாற்றம் செய்ய இயலாத நிலை ஏற்படும். இதையே “நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்’’ (Chronic Obstructive Pulmonary Disease) என்கிறோம். ஒரு முறை இந்நோய் வந்து, நுரையீரல் திசுக்கள் அழிந்துவிட்டால், அத்திசுக்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பாது. மருந்துகளால் நோயின் அறிகுறிகளை மட்டுமே குறைக்க முடியுமே ஒழிய, நோயை முழுமையாகக் குணமாக்க முடியாது. சில நோயாளிகள் இந்நோயோடு, […]

மேலும்....