வாழ்வியல் சிந்தனைத் துளி!

*           நூலைப் படித்து, தகவல்களைப் பெற்று, ஆய்வு செய்து அறிவைப் பெருக்கினால் ஆயுள் வளரும். இயங்கினால்தான் மூளை;  இன்றேல் அது வெறும் ஈளை. *           தொண்டால் உயரும் அறிவே உண்மை அறிவு; அது ‘கற்பதால்’ வரும் அறிவு; வெறும் ‘படிப்பால்’ பெறும் அறிவு அல்ல; இரண்டும் வெவ்வேறானவை. காரணம், கற்பது வேறு; படிப்பது வேறு. *           நம்முள்ளே உள்ள ஓர் எதிரிப் பட்டாளத்தில் முன் வரிசையில் உள்ள ஒரு முழு எதிரியின் பெயர்தான் திருவாளர் ‘சுயநலம்!’  –  […]

மேலும்....

தலையங்கம் : தாய்மொழியை ஊக்கப்படுத்துவதாகக் கூறும் பிரதமரின் உறுதிமொழி என்னாயிற்று? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியாயமான கேள்வி!

தமிழ்நாட்டில் மத்திய அரசின் கட்டுப்பாடு, பாடத் திட்டத்தின்கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்குத் தமிழ் கற்கக் கூடிய வாய்ப்பு மறுக்கப்படுவதுபற்றியும், தி.மு.க. _கலைஞர் ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு அரசின் ஆணை (2006)_தமிழ்நாடு கல்விச் சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புவரை தமிழ் கட்டாயப் பாடம் என்று பிறப்பிக்கப்பட்டு, அது நடைமுறையில் இருக்கும்போது மத்திய அரசின் கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் நடைபெறும் (கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கற்க […]

மேலும்....

முகப்புக் கட்டுரை: மனுதர்மத்தை ஒழிக்கவேண்டியது மனித நேயர்களின் கடமை

மஞ்சை வசந்தன்   ஆரியப் பார்ப்பன அகராதியில் எல்லாமே தலைகீழ்தான். மண்ணின் மக்களை அடிமைகள் என்பர். வந்தேறிகளான தங்களைத் தலைமகன்கள் என்று கூறி ஆதிக்கம் செலுத்துவர். பிச்சை எடுத்துப் பிழைத்த தங்களை உயர்வர்ணம் என்பர்; உழைத்து வாழ்வதோடு, பார்ப்பனர்களுக்கே பிச்சையிடும் மக்களை இழிவர்ணம் என்பர். உலகில் ஒப்பில்லா உயர் நூலாம் திருக்குறளை இழித்துப் பேசி, ஒன்றுக்கும் உதவாத வேதங்களை கடவுளுக்கும் மேலானது என்பர். உலகின் மொழிகளுக்கெல்லாம் முதல் மொழியான தமிழை இலக்கண இலக்கிய வளமுடைய தொன்மொழித் தமிழை […]

மேலும்....

மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் திராவிடர் கழக பிரச்சாரகர்கள்

கே.ஆர்.குமார் பக்தியின் பேரால் சாமியார்கள் நடத்தும் மாய மந்திர செய்கைகளை, மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் விதமாக பல்வேறு மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளை திராவிடர் கழகத் தோழர்கள் செய்து காட்டி வருகிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர் சுயமரியாதைச் சுடரொளி  புரபசர் கே.ஆர்.குமார் ஆவார். நீலகிரி மாவட்டம் குன்னூரை பூர்வீகமாக கொண்ட இவர். அங்குள்ள சாமியார் செய்யும் மோசடியாக மந்திரம் என்ற பெயரால் செய்யும் தந்திரங்களைக் கற்று அவர்களுக்குப் பெரும் சவாலாக விளங்கியவர்.  தந்தை பெரியாரிடம் அத்தகைய தந்திர செயல்பாடுகளைச் செய்துக் […]

மேலும்....

ஜேம்ஸ் ராண்டி படத்திறப்பு

பன்னாட்டுப் புகழ்பெற்ற ஜேம்ஸ்ராண்டி நினை வேந்தல் நிகழ்ச்சியில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் அறிவியல் பற்றாளர்கள், பகுத்தறிவாளர்கள் கலந்து கொள்ள, ஜேம்ஸ் ராண்டி படத்தினை திறந்து வைத்து தமிழர் தலைவர் 25 நிமிடங்கள், முழுவதும் ஆங்கிலத்தில் – பங்கேற்றோர் அனைவரும் புரிந்திடும் வகையில் உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன் தலைமை வகித்தார். ஜேம்ஸ் ராண்டி பற்றிய வாழ்நாள் குறிப்பினை எடுத்துக் கூறி அய்யுறவு செயல்பாட்டாளர் டாக்டர் கணேஷ் வேலுசாமி அறிமுக உரை ஆற்றினார். ஜேம்ஸ்  […]

மேலும்....