வரலாற்றுச் சுவடு: சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்!

நினைவு நாள் : 27.11.2008 விசுவநாத்பிரதாப்சிங் (வி.பி. சிங்) வெறும் 11 மாதகாலமே பிரதமராக இருந்தவர். ஆனாலும், உண்மையான ஜனநாயகவாதியாக ஆட்சிப் பொறுப்பை நடத்திக் காட்டிய மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். அவர் ஒரு சூத்திரத்தை, ஆட்சியின் இலக்கணத்தை உருவாக்கிக் கொடுத்தார். 80 சதவிகித மக்களை ஜாதியின் பெயரால்,  சமூகத்தின் மய்ய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி வைத்திருப்பதைவிட மிகப்பெரிய திறமைக்கு எதிரான ஒரு செயல் இருக்க முடியுமா?  என்ற வினாவை எழுப்பிய பெருமகன் அவர். இடஒதுக்கீடு வேலை வாய்ப்பல்ல; […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில் ….: இயக்க வரலாறான தன் வரலாறு (256) எழுத்தாளர் பிரபஞ்சனின் புகழாரம்!

அமெரிக்க பயணத்தை முடித்து சென்னை திரும்பிய ஆசிரியரை வரவேற்கும் கழகத் தோழர்களிடையே மகிழ்ச்சியாக உரையாற்றும் ஆசிரியர் 4.1.1995 அன்று அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினேன். கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் உணர்ச்சிபூர்வ வரவேற்பை அளித்தனர். தோழர்களின் வரவேற்பு உள்ளத்தை நெகிழ வைப்பதாக இருந்தது. விமான நிலையத்தில் இருந்து பார்வையாளர் பகுதிக்கு வருகையில் தோழர்கள் விமான நிலையமே அதிரும் வண்ணம் வாழ்த்து ஒலி முழக்கங்களை எழுப்பி வரவேற்றனர். பார்வையாளர் பகுதியில் வரிசையாக நின்றிருந்த கழகத் தோழர்களை ஒவ்வொருவராக […]

மேலும்....

முகப்புக் கட்டுரை: புரட்டுகளை முறியடிக்கும் போராளிகள்!

சமா.இளவரசன் பகுத்தறிவைப் பரப்பும் பணி அத்தனை எளிமையானதன்று. எதையொன்றையும் கேள்வி கேள்! ஆராய்ந்துபார்! சிந்தித்துப் பார்! என்று அறிஞர்கள், பகுத்தறிவாளர்கள் சொல்வது கேட்போருக்கு எளிதாகத் தோன்றலாம். ஆனால், அதன்படி மக்களைச் சிந்திக்கச் செய்வது கடினமானது. அப்படிச் சொன்னவர்களெல்லாம் மக்களிடமிருந்தும், ஆளும் கூட்டத்திடமிருந்தும் கடும் எதிர்ப்பையே பரிசாகப் பெற்றிருக்கிறார்கள். வெகு மக்கள், எளிதில் ஏற்றுக் கொள்கிற அல்லது ஏற்றுப் பழகியிருக்கிற ஒன்றை எதிர்த்துக் கேள்வி கேட்டால், அது தங்களையே எதிர்த்துக் கேட்கப்பட்டதாய்த் தோன்றுமளவுக்கு மக்களை மயக்கி வைத்திருப்பவைதான் அவர்தம் […]

மேலும்....

பெரியார் பேசுகிறார்: உண்மையான தர்மம்

 தந்தை பெரியார் இந்தக் கண்ணனூரிலுள்ள பழைமையானதும், மிக்கப் பொது ஜன சேவை செய்து வருவதுமான உங்களுடைய செவ்வாய் தரும சமாஜத்தின் தலைமை வகிக்கும் பெருமையை எனக்குக் கொடுத்ததற்காக முதலில் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சமாஜத்தின் மூலமாக நீங்கள் செய்திருக்கும் பொது நல சேவைக்கு உங்களை மிகவும் பாராட்டுவதோடு, இங்குள்ள பொது ஜனங்களையும் இன்னும் அதிகமாக ஒத்துழைத்து உங்களுக்கு வேண்டிய சகாயம் செய்து, இச்சமாஜத்தால் மக்களுக்கு இன்னும் அதிகமான நன்மை ஏற்படும்படியாய்ச் செய்ய வேண்டுமாகக் கேட்டுக் […]

மேலும்....

தலையங்கம் : உலக மக்களின் வாழ்த்துகளோடு நாமும் இணைகிறோம்!

நமது வாழ்த்துகள்!   அமெரிக்காவில் கடந்த 3ஆம் தேதி (நவம்பர்) நடைபெற்ற அதிபர் தேர்தல் உலகத்தவரால் மிகுந்த எதிர்பார்ப்போடு பார்க்கப்பட்ட ஒன்றாகும். டொனால்ட் டிரம்ப் – சென்ற முறை அதிபர் தேர்தலில் வென்று (குடியரசு கட்சி சார்பில்) மீண்டும் இரண்டாம் முறையாக அப்பதவிக்குப் போட்டியிட்டார். அவருடன் துணை அதிபர் மைக் பென்ஸ் என்பவரும் அக்கட்சியின் சார்பாக அப்பதவிக்குப் போட்டியிட்டார்! டொனால்ட் டிரம்ப் தோல்விக்குக் காரணம் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜோபைடன் ஏற்கெனவே துணைக் குடியரசுத் தலைவராக பாரக் […]

மேலும்....