சுயமரியாதைப் போராட்டத் தளபதி சி.டி.நாயகம்

சி.டி.நாயகம் அய்யா அவர்களது அடிநாள்தோழராக, தொண்டராக, நன்னம்பிக்கைக்குரியவராக வாழ்ந்த பெருந்தகையாளர் தெய்வநாயகம் அவர்கள் நெல்லைமாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் 7.10.1878இல் பிறந்து அவ்வூரிலேயே கல்வி கற்றவர். சென்னைக்கு வந்து பிட்டி.தியாகராயர் தாளாளராயிருந்து நடத்தி வந்த ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தென்னிந்திய நலவுரிமைச் சங்கப்பற்று மேவியவராய், அதன்வழி சமுதாய மறுமலர்ச்சி படைக்கப் பாடுபடும் சுயமரியாதை இயக்க ஈடுபாடும் கொண்டார். தம் சொந்த முயற்சியில் சென்னையில் பொருளியற்றி கல்விபெற்று, கூட்டுறவுத்துறை உதவிப்பதிவாளர் பதவியில் அமர்ந்து, தம் நிலையை நன்கு பயன்படுத்தி, […]

மேலும்....

பெண்ணால் முடியும்: அய்.எப்.எஸ். பணியில் அண்ணாவின் பேத்தி

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019ஆம் ஆண்டுக்கான  சிவில் சர்வீஸ் தேர்வுகளைக் கடந்தாண்டு செப்டம்பரில் நடத்தியது. அதன் தேர்வு முடிவுகள் கடந்த மாதத்தில் வெளியானது. தமிழகத்தில் இருந்து 44க்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் தமிழக மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியவர், சென்னையைச் சேர்ந்த பிரித்திகா ராணி. அதற்குக் காரணம், அவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் கொள்ளுப் பேத்தி ஆவார். தன்னுடைய 23 வயதில் முயற்சியிலேயே அய்.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று […]

மேலும்....

இரட்டையர்கள் பிறந்தநாள் 14.10.1887

உலகில் புகழ்பெற்ற இரட்டையர்கள் உண்டு. ஆனால், எவரும் நமது ஆர்க்காடு இரட்டையர்கள் ஏ. இராமசாமி (முதலியார்) ஏ.இலட்சுமணசாமி (முதலியார்) ஆகியோருக்கு ஒப்பிடவோ, இணையாகவோ கூறிட முடியாது. 1887ஆம் ஆண்டு இதே நாளில் (அக்டோபர் 14) பிறந்தவர்கள் இவர்கள் இருவரும். ஒருவர் (ஏ.ஆர். முதலியார்) அரசியல் உலகிலும், தொழில் உலகிலும் கொடிகட்டி ஆண்டவர் என்றால், மருத்துவ உலகிலும், கல்வித் துறையிலும் பட்டொளி வீசிப் பறந்தவர் ஏ.எல். முதலியார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் 25 ஆண்டுகாலம் துணைவேந்தராகவிருந்து வெள்ளி விழா […]

மேலும்....

சிறுகதை: உயிரோடு வாழட்டும்

 தகடூர் தமிழ்செல்வி அடுப்பங்கரை ஜன்னல் வழியாக தெருவில் போய்க் கொண்டிருப்பவர்களைப் பார்த்துக் கொண்டே கருவாட்டை பொரிக்கஞ்சட்டியில் புரட்டிக் கொண்டிருந்தாள் நாகலட்சுமி. சிலர் இருவர் இருவராகப் பேசிக் கொண்டும், சிலர் தலை கவிழ்ந்த வண்ணம் நடந்தும் போய்க் கொண்டிருந்தனர். கோபமாகவும் சத்தமாகப் பேசிக் கொண்டும் செல்பவர்கள் மேட்டுத்தெரு ஆள்கள் என்றும், தலைகவிழ்ந்த வண்ணம் செல்பவர்கள்  எல்லாம் மகர்வாடிப்பட்டி ஆள்கள் என்றும் தனக்குள்ளாக நினைத்துக்கொண்டாள். உள்ளே மச்சு வீட்டுக்குள் புத்தகம் படித்துக் கொண்டிருந்த அவள் கணவன்  ராமசாமி, “ஏ புள்ள […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (253)

தந்தை பெரியாரின் அந்தரங்க செயலாளர் புலவர் இமயவரம்பன் அவர்கள் மறைவு கி.வீரமணி 6.7.1994 பேராசிரியர் மணிசுந்தரம் அவர்களின் மகன் அருமணிக்கும் எம்.எஸ்.முத்துவின் மகள் எழிலிக்கும் சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன். மணமக்களுக்கு தந்தை பெரியாரின் நூல்களையும் வழங்கினேன். 8.7.1994 தஞ்சாவூர் பி.ஆர்.அரங்கில் பெரியார் – மணியம்மை மகளிர் பொறியியற் கல்லூரியின் கணினித் துறை மேலாளர், பொறியாளர் மகாதேவன் — தமிழரசி ஆகியோரின் மணவிழாவினை சிறப்புடன் நடத்தி வைத்தேன். விழாவில் கழகப் […]

மேலும்....