வடலூரார்

வடலூர் இராமலிங்க அடிகளாரின் பிறந்த நாள் (5.10.1823). இராமலிங்க அடிகள், பார்ப்பனீயத்தின் சூதுகளை, புனை சுருட்டுகளை, மோசடிகளைக் கண்டு – அவற்றினின்று முற்றாக விலகினார். தொடக்கத்தில் உருவ வழிபாட்டை மெச்சிப் பாடிய அடிகள் காலத்தால் முதிர்ச்சி அடைந்த பருவத்தில் உருவ வழிபாட்டை வெறுத்து, தன்னால் வடலூரில் உருவாக்கப்பட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் வெறும் ஜோதியை ஏற்றி வைத்தார். தன்னால் உருவாக்கப்பட்ட அமைப்புகளின் பெயரில் இடம் பெற்றிருந்த வேத என்ற சொல்லைத் தூக்கி எறிந்தார். 1873 […]

மேலும்....

காமராசர் நினைவுநாள் அக்டோபர் 2 : பச்சைத் தமிழ்ர் காமராசர் பேசுகிறார்

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று பேசவும் ஆரம்பித்திருக்கிறார்கள்; யார் பேசுகிறார்கள் என்று தெரியுமா? இதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு ஏழை மக்களை மேலும் ஏழையாக்குபவர்களே இதைக் கூறுகிறார்கள். நீ ஏழையாய் இருப்பது, ஏழையாய் இருக்க வேண்டும் என்பது உன் தலை எழுத்து (கடவுள் கட்டளை) என்று கூறி ஏமாற்றுகிறார்கள். தங்களின் நிலையை உயர்த்திக் கொண்டே இருக்கும் சூழ்ச்சியே அது. தலை எழுத்தை அழித்து எழுதுவோம். உழைக்கவேண்டியதே – ஏழையாய் இருப்பதே […]

மேலும்....

திராவிடர் கழகத்தின் பொருளாளர் பழையகோட்டை என்.அர்ச்சுனன்

பெரியார் மாவட்டம் பழையகோட்டையில் 14.10.1923இல் பெருநிலக்கிழார் குடும்பத்தில் தோன்றிய அர்ச்சுனன் அவர்கள் தமது இருபதாம் வயதுக்குள்ளாகவே இயக்கப்பற்று மேவி, திராவிடர் கழக அமைப்பு தோன்றும்போது அய்யா அவர்களின் தொண்டராகி, மூன்றாண்டுகளில் பெரியதலைவர்களோடு வைத்து எண்ணப்படும் நிலையைத் தம் வெறிகொண்ட தொண்டால் எய்தி, திடீரென்று மறைந்து இயக்கத்தவர் உள்ளத்தில் நிலையான இடம் தேடிக்கொண்ட இளைஞர்! மூன்று ஆண்டுகளில் திராவிடச் செல்வர்கட்கு வெட்கமும் சங்கடமும் பொறாமையும் ஏற்படும்படியான அளவுக்கு நாட்டின் குடும்பங்களில் இவர் புகழ்பரவியது. இலட்சம் ஏக்கர் நிலமும், ஆயிரக்கணக்கான […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: பெண் குல விளக்கு நீலாவதியார்

நூல்:   பெண் குல விளக்கு நீலாவதியார் வெளியீடு:கங்கை புத்தக நிலையம், No.23 தீனதயாளு சாலை, தியாகராயர் நகர், சென்னை – 17 தொலைபேசி:  044 – 243428101 கடத்தல் கல்யாணம் நீலாவதி அம்மையாரின் கணவர் இராமசுப்பிரமணியம் அவர்களை சமீபத்தில் சந்தித்துப் பேசும் போது அவர் சொன்ன சில பழைய நாள் நினைவுகள் சுவையாக இருந்தன. அதில் அவருடைய திருமண நாள் அன்று நிகழ்ந்த சம்பவம் ஒன்று: தன வணிக சமூகத்தைச் சேர்ந்த இராமசுப்பிரமணியத்திற்கு இன்னொரு சமூகத்தை […]

மேலும்....