அய்யாவின் அடிச்சுவட்டில் …. : இயக்க வரலாறான தன் வரலாறு(255)

 அடுத்து தமிழனாகப் பிறக்கவே விரும்புகிறேன் – வி.பி.சிங் கி.வீரமணி 1.10.1994 திராவிடர் கழகத்தின் பொன்விழா மாநாட்டின் இரண்டாம் நாள் காலை 9:00 மணியளவில் கழகத் தோழர்கள் பெரியார் திடல் நோக்கி வரத் துவங்கினர். முதல் நிகழ்வாக பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நடந்த உரையரங்கில் சிறப்பு அழைப்பாளர்கள் ஏ.கே.ஏ.அப்துல் சமது (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர்), நீதியரசர் ஜஸ்டிஸ் பெ.வேணுகோபால், உயர்திரு கவுது லட்சண்ணா (ஆந்திர மாநில […]

மேலும்....

முகப்புக் கட்டுரை: ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கட்டாயம் ஏன்?

கோ.கருணாநிதி பொதுச் செயலாளர், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு   நமது அரசமைப்புச் சட்டம் குடிமக்களிடையே ‘சமத்துவத்தை’ வலியுறுத்துகிறது. ஜாதிகளால் ஆன நமது சமூகத்தில் அனைத்து ஜாதியினருக்கும் நீதி வழங்குவதுதானே சமத்துவத்திற்கான பாதையாக இருக்க முடியும்? அதனால்தான் சமூகநீதி என்று சங்கநாதம் எழுப்பினார் தந்தை பெரியார். அதை எப்படி அடைய முடியும்? கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம்தானே? அதற்காகப் பல போராட்டங்கள் நடத்தினார் பெரியார். ஒரு கட்டத்தில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்திட நமது அரசமைப்புச் […]

மேலும்....

பெரியார் பேசுகிறார்: தீபாவளி கதை

தந்தை பெரியார் தீபாவளி கதை பற்றி பல ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகிறோம். ஆதலால் விரித்து எழுத வேண்டியதில்லை என்றாலும் குறிப்பு கொடுக்கின்றோம். இது தீபாவளி கதை. மிகவும் அதிசயமானதும், ஆபாசமானதும், இழிவும், ஈனத்தன்மையும் பொருந்தியதுமாகும். விஷ்ணு அவதாரம் மகாவிஷ்ணுக்கு வாயில் காப்பாளராக இருந்த இரு காவலர்கள் உத்தரவின்றி உள்ளேவிட மறுக்கப்பட்ட இரண்டு பிராமணர்கள் சாபத்தால் இரணியன், இரண்யாட்சன் என்று இரண்டு ராட்சதர்களாகப் பிறந்து விஷ்ணுவால் கொல்லப்பட்டு சீக்கிரம் மோட்சமடைய வேண்டுமென்று ஏற்பட்டு விட்டதற்கிணங்க மூத்தவன் தேவர்களுக்கு […]

மேலும்....

தலையங்கம் :அறிவியல் ரீதியாக கருத்துகளைக் கூற முன்வந்த விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு!

பசு மாட்டுச் சாணி, நோய் உருவாக்கும் வெப்பக் கதிர்வீச்சைத் தடுக்கும் சக்தி கொண்டது என்ற மூடநம்பிக்கைக் கருத்துகளை அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான வகையில் மத்திய அரசின் துறைகளே பரப்பலாமா?  இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும்! அறிவியல் ரீதியாகக் கருத்துகளைக் கூற முன்வந்த 100-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுக்கு நமது பாராட்டும், நன்றிகளும். மத்தியில் கடந்த 6 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அரசும், அதனால் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு காவிச் சாயம் ஏறிய பசுமாடு சம்பந்தப்பட்ட […]

மேலும்....