கவிதை : சம(ய)க் குறிகள்

நெறிகள் ஒன்றென்று                நிகழ்த்தும் சமயங்கள் குறிகள் வெவ்வேறாய்க்                கோடிட்டுக் காட்டிவிடும்! நெற்றியில் வெளிப்பூசல்;                நித்தமும் உட்பூசல்! உற்ற மதக்குறிகள்                ஒவ்வொன்றும் தினப்பூசல்! சமயக் குறிகளுக்குச்                சமக்குறியே தெரியாதா? சமயத் துறைகளுக்குள்                சச்சரவே தீராதா? காசைத் தந்தால் கடவுளுடன்                கலந்துரை யாடல் நடக்கிறது! ஆசைப் பட்ட பொருள்யாவும்                ஆண்டவன் பெயரில் கிடைக்கிறது! பகல் வேடங்கள் உள்ளவரை                பக்தி விளம்பரப் பொருளாகும்; நகல்கள் அப்பால் நகர்ந்தால்தான்                […]

மேலும்....

வாழ்வியல்: ஆண் குழந்தை வளர்ப்பு

உளவியல் ஆலோசகர் வே.எழில் அதென்ன, குழந்தை வளர்ப்பு என்பது பொதுவானதுதானே? இதிலென்ன ஆண் குழந்தை வளர்ப்பு எனும் பாகுபாடு என யோசிக்கலாம். இப்போது பெண்களுக்கு அதிகமாகிக் கொண்டே வரும் பாலியல் தொந்தரவுகள், பாலியல் சீண்டல்கள்,  பாலியல் வன்கொடுமைகள் இவற்றிற்கு ஆண் குழந்தையின் வளர்ப்பும் காரணமாகிறது.  ஒரு குழந்தை வளர்ந்தவுடன் எல்லாவற்றையும் கற்றுக் கொள்வதில்லை. ஒருவரின் நடத்தை என்பது கருவிலிருந்தே உருவாகிறது. எனவே ஆண் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துவது என்பது  முக்கியமாகிறது. ஆண் குழந்தையை அடித்து வளர்க்கணும். […]

மேலும்....

ஆய்வுக் கட்டுரை : உலகப் பகுத்தறிவு மாமேதைகள் பெரியாரும் இங்கர்சாலும் – ஓர் ஓப்பீடு! (2)

முனைவர் த.ஜெயக்குமார் (சென்ற இதழ் தொடர்ச்சி)   அடிமைத்தனத்தை நிலைநிறுத்திய மதத்தை உடைத்தெறிந்தனர் மதம் குறித்த இங்கர்சாலின் சிந்தனைகளை நோக்குங்கால்: “மதம் என்பது ஒருவித பயமேயாகும்! மதம் சுயமரியாதையையும், சுதந்திரத்தையும், மனிதத் தன்மையையும், வீரத்தையும், பாதுகாப்பையும் போதிப்பதில்லை. மாறாக, கடவுளைத் தலைவனாக்கி மனிதனை ஏவலாளாக ஆக்கி அடிமைத்தனத்தை நிலைநிறுத்துகிறது. போலிக் கொள்கையிலேயே மதங்களெல்லாம் தொங்குகின்றன. கிறித்துவர்கள் பிற மதங்களெல்லாம் பொய் எனக் கூறிக் கொள்கிறார்கள். மதமின்றி மக்கள் முன்னேற்றமடைய முடியாதா? மதத்தால் எவ்வித உபயோகமுமில்லை. மதம் ஒருபோதும் […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [17] – மூச்சிரைப்பு நோய் (ASTHMA)

நாம் அடிக்கடி பார்க்கும் நோயாளிகளில் “மூச்சிரைப்பு’’ நோயாளிகள் அதிக அளவு இருப்பதை அறிவோம். இந்தியாவில் 3.5 கோடிப் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூச்சிரைப்பு நோய் (Asthma) என்பது மூச்சுவிடும் இயல்பான நிலையில் ஏற்படும் பாதிப்பால் ‘இளைப்பு’ (Wheezing) ஏற்படும் தொல்லை தரும் ஒரு நிலையாகும். இந்த மூச்சிரைப்பு பெரும்பாலும் விட்டு விட்டு, மீண்டும் மீண்டும் வரக்கூடிய தொல்லையாகும். ஒரு சிலருக்கு தொடர்ந்து நீண்ட நேரமும் இருக்கக் கூடும். இந்த தொடர் நிகழ்வு, ஆளுக்கு ஆள் வேறுபடும். சிலருக்கு […]

மேலும்....

சிறுகதை : கோயில் திறந்தாச்சு!

ஆறு.கலைச்செல்வன் கடந்த அய்ந்து மாதங்களாக வீட்டிலேயே அடைந்து கிடந்தாள் அல்லது அடைத்து வைக்கப்பட்டாள் அபிநயா. அவள் அய்ந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று ஆறாம் வகுப்பில் சேர இருந்தாள். ஆனால், பள்ளிகள் திறக்கப்படாததால் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. காரணம் கொரோனாதான். அன்னலட்சுமி, மூர்த்தி இணையரின் ஒரே மகள்தான் அபிநயா. ஒரே மகள் என்பதால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டாள். கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அவளை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அவளை மட்டுமல்ல, மூர்த்தியையும் வெளியே செல்ல […]

மேலும்....