Category: நவம்பர் 01-15, 2020
சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் : இவர்தான் பெரியார்
நூல்: இவர்தான் பெரியார் ஆசிரியர்:மஞ்சை வசந்தன் முகவரி: பெரியார் புத்தக நிலையம் பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை -600 007. 044-26618163 பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி-620 017 0431-2771815 www.dravidianbookhouse.com பக்கம் : 286 ; விலை: ரூ.180/- துவக்கம் – சுயமரியாதை இயக்கம் காங்கிரசை விட்டு வெளியேறிய ஈ.வெ.ரா. சுயமரியாதை உணர்வை மக்கள் மத்தியில் ஊட்டுவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். மக்களிடையே ஏற்றத்தாழ்வு கூறுவது தவறு. […]
மேலும்....ஆசிரியர் உடையார்பாளையம் வேலாயுதம்
நினைவுநாள் : 13.11.1947 உடையார்பாளையம் வேலாயுதம் அவர்கள் செயங்கொண்ட சோழபுரத்தையடுத்த கரடிகுளத்தில் 1910ஆம்ஆண்டு ஜூலைத்திங்களில் பிறந்தார். எட்டாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை முடித்துவிட நேரிட்ட அவர் ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தேர்ந்து தொடக்கப்பள்ளி ஆசிரியரானார். உடையார்பாளையத்தில் சுயமரியாதைக் கொள்கைகள் காட்டுத்தீயெனப் பரவிக்கொண்டிருந்த காலத்தில் ஆசிரியத்தொண்டுக்கு வந்த இவர் இயக்கத்தில் ஆழமான பற்றுக்கொண்டு அக்கொள்கைகளை மக்களிடத்திலும், வாய்ப்பேற்படும் போது மாணவர்களிடத்திலும் பரப்புவதைத் தம் கடமையாகக்கருதினார். “பெரியமனிதர்களின் கண்ணும் கருத்தும் இயற்கையாய் இவர்மீது விழுந்தன. பிறகு சொல்லவா வேண்டும்? சுயமரியாதையாம், சுயமரியாதை! […]
மேலும்....சுயமரியாதைச் சுடரொளி
ஆட்சிமொழிக் காவலர் கீ.இராமலிங்கனார் (பிறப்பு: 12.11.1899) ‘ஆட்சிமொழிக் காவலர்’ என அன்புடன் அறிஞர்களால் அழைக்கப் பெற்றவர். ஆங்கிலத்திலும் உருதுவிலும் வடமொழிச் சொற்களாலும் புரைமண்டிக் கிடந்த ஆட்சிமொழிச் சொற்களுக்கு தமிழில் சொல்கண்ட பெருந்தகையர். ‘ஆட்சித்துறை தமிழ்’, ‘ஆட்சிமொழி அகராதி’ எனும் நூல்களைத் தொகுத்தவர். தமிழ் ஆர்வலர். தெ.பொ.மீ மற்றும் திரு.வி.க. ஆகியோரின் சீடர். தமிழ் திருமண வழிபாட்டு முறைக்கெனத் தனியே ஒரு நூலை எழுதி தொடர்ந்து பலருக்கும் தமிழில் திருமணம் செய்வித்தவர். சென்னையை அடுத்த திருவள்ளூருக்கு அருகே கீழச்சேரி […]
மேலும்....தமிழறிஞர் கா.சு. பிள்ளை
கா.சு. பிள்ளை என்று அழைக்கப்படும் கா. சுப்பிரமணியபிள்ளையின் பிறந்த நாள் 5.11.1888). சைவத்தில் தோய்ந்தவர் என்றாலும், தந்தை பெரியார் அவர்களின் பார்ப்பனர் எதிர்ப்பு என்னும் கொள்கையில் தம்மை முற்றாக ஒப்படைத்துக் கொண்டவர். சுயமரியாதை இயக்கத்தோடு பின்னிப் பிணைந்து கிடப்பதால் நாயக்கரால் சைவம் அழிந்துவிடும்போல் தெரிகிறதே என்று சைவ மெய்யன்பர்கள் சிலர் கா.சு.பிள்ளை அவர்களிடம் முறையிட்டபோது, “சைவம் அழிந்தாலும் பரவாயில்லை; புதுப்பித்துக் கொள்ளலாம்; ஆனால் பாழும் பார்ப்பனியத்தை அழிக்க இராமசாமி நாயக்கரை விட்டால் வேறு நாதி கிடையாது. அவருடன் […]
மேலும்....