அய்யாவின் அடிச்சுவட்டில் … : இயக்க வரலாறான தன் வரலாறு (249) 27% இடஒதுக்கீடு ஆணை பெற்று இமாலயச் சாதனை

கி.வீரமணி  20.8.1993 மதுரையில் இளைஞர் அணி மாநாடும், 21.8.1993இல் சமூக நீதி மாநாடும் சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் இளைஞர் அணி மாநாட்டிற்கு தோழர் கொளத்தூர் மணி தலைமையேற்று உரையாற்றினார். “ஜாதி மறுப்புத் திருமணங்கள் அதிகம் நடைபெற வேண்டும்; வடமொழிக் கலப்பற்ற தமிழில் பயன்படுத்தப்பட வேண்டும்; தொலைக்காட்சி, வானொலி, பார்ப்பன ஏடுகளில் வரும் கண்டனத்திற்குரிய செய்திகளுக்கு உடனுக்குடன் தோழர்கள் கடிதங்கள் அதிக அளவில் எழுத வேண்டும்’’ போன்ற கருத்துகளை வலியுறுத்திப் பேசியிருந்தார். மாநாட்டில் சிறப்புரையாற்றுகையில், “திராவிடர்களை இழிவுபடுத்தும் […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : ஊரடங்கைப் பயன்படுத்தி உரிமைகளைப் பறிப்பதா?

மஞ்சை வசந்தன் ஊரின் கவனம் வேறு நிகழ்வில் இருக்கும்போது கொள்ளைக்காரனும், திருடனும் தன் வேலையை முனைந்து செய்வான். அப்படித்தான், ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டலில் மத்திய பா.ஜ.க. அரசு மக்களின் கவனம் கரோனா பற்றியதாக இருக்கும் போது, தங்களின் திட்டங்களை நிறைவேற்றுவதில் முனைப்புக் காட்டுகிறது. ஆர்.எஸ்.எஸ். தன்னை வளர்த்துக் கொள்ளவும், தன் செயல்திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் எப்போதும் நேர்மையான, சரியான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை சூழ்ச்சி, மோசடி, கபடநாடகம் என்று இப்படிப்பட்ட வழிமுறைகளை பின்பற்றுவதே அவர்களின் வழக்கம். ஆர்.எஸ்.எஸ்-அய் வளர்க்கக் கலவரங்களை […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : புரட்சித் திருமணங்கள்

தந்தை பெரியார் இந்த 5,6 நாள்களில் தமிழ் நாட்டில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. இவைகளில் பெரும்பகுதி பண்டைய முறைப்படியே இருக்கலாம். அதாவது, பெற்றோர்களும் மற்றவர்களும் மாட்டுச் சந்தையில் மாடு வாங்கி ஜோடி சேர்ப்பதுபோல் ஜோடி சேர்க்கப்பட்டவைகளாயிருக்கும். இன்னும் சில பொறுப்பற்ற ஒருவனைக் கொண்டு ‘ஜோதிடம்’ என்ற பெயரால் ஜோடி சேர்க்கப்பட்டதாயிருக்கும். பெரும்பாலான, ஏன் 1000க்கு 999 திருமணங்கள் அவரவர் ஜாதிக்குள்ளாகவே நடைபெற்றிருக்கும். பாதியாவது, பார்ப்பனிய (ஆரிய) முறைகளின்படி நடந்தவைகளாயிருக்கும். கிட்டத்தட்ட எல்லாத் திருமணங்களும் முகூர்த்த நாளில் ‘நல்ல […]

மேலும்....

தலையங்கம் – ‘நீட்’ தேர்வை ஒழிக்க ஓரணியில் திரள்வோம் வாரீர்!

நீட்’ தேர்வு என்பது ஒரு சூழ்ச்சி வலை! ஒடுக்கப்பட்ட மக்கள், கிராமப் புறத்திலிருந்து, முதல் தலைமுறையிலிருந்து படிக்க வரும் அடித்தட்டு ஏழை, எளிய மக்கள் இவர்களைத் தடுத்து, உயர்ஜாதி மனுதர்ம ஆதிக்கத்தை நிலை நிறுத்துவது! நீதிக்கட்சி என்ற திராவிடர் இயக்க ஆட்சி – ஒரு நூற்றாண்டுக்கு முன்னே கொண்டு வந்த சமூகநீதியை ஒழிப்பதே இந்த ‘நீட்’! மாணவர்களுக்குள் ‘தகுதி திறமை’யை நன்கு வளர்க்கவும், ஏற்கெனவே பல தனியார் மருத்துவக் கல்லூரிகள் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு அதிக நன்கொடை […]

மேலும்....