சிறுகதை : கண்ணடக்கம்

கலைஞர் மு.கருணாநிதி   பக்தன் ஒருவன் பதைக்கப் பதைக்க ஓடினான். அவன் கால்கள் தடுமாறின. வியர்வையால் மேனி குளமாயிற்று தலைமுடி அலங்கோலமாய் விரிந்து காற்றில் பறந்தது. நெற்றியிலே பூசியிருந்த திருநீறும், அதன் மேல் வைத்திருந்த அகலமான குங்குமப் பொட்டுங் கூட வியர்வையிலே கரைந்து ரத்தமும் சீழும் போல அவன் கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தன. புரையோடி விட்ட புண்ணிலிருந்து கிளம்பிய துர்நாற்ற அருவிபோல் இருந்தது அந்தப் பக்தனின் முகக்காட்சி. தேவீ, தேவீ! காளிகா தேவீ!! என்று அலறல் வேறு. […]

மேலும்....

ஜுன் 3 கலைஞர் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை : மாநில உரிமைகள் மீட்க கலைஞர் காட்டிய வழிகள்

இதழாளர் கோவி.லெனின் அவர் தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக இருந்தவர். தமிழ்நாட்டை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த முதல்வர் என்ற பெருமையும் அவருக்கே உரியது. இந்தியாவில் ஒரு மாநிலத்தின் முதல்வருக்கான அதிகாரம் என்பது ஒன்றிய (மத்திய) அரசிடம் எல்லாவற்றையும் எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலையில்தான் உள்ளது என்பது அவருக்கும் தெரியும். முதல்வராகப் பொறுப்பேற்றால் மரியாதை நிமித்தமாக ஒன்றிய அரசின் தலைமையமைச்சரான பிரதமரை சந்திக்க வேண்டியதும் மரபு மட்டுமல்ல, நிர்வாகம் சார்ந்த நிர்பந்தமும் கூட.. 17-3-1969இல் முதலமைச்சராக டெல்லிக்கு முதல் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்!

கே:  ப.சிதம்பரம் அவர்கள் கூறும் ஆலோசனைகளை பா.ஜ.க. அரசு ஏற்க மறுப்பது ஏன்? மருதமலை, சிதம்பரம். ப: அவர் ‘காங்கிரஸ்காரர்’ மேலும் சிறந்த அறிவாளி என்ற (கட்சிக்) கண்ணோட்டமும் இவர்களது தன் முனைப்புமே காரணங்கள். கே: பொதுமக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டிய அரசாங்கம் கொடிய தொற்று நோயான கொரோனா வைரசை அழிக்க மக்கள் அனைவரும் ஒன்றுகூடிநின்று கைதட்டச் சொல்லுவதும் மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல்விளக்கு ஏற்றச் சொல்லுவதும் எதைக் காட்டுகிறது? – அறிவுவிழி குருயுவராஜ், திருவள்ளூர் ப: […]

மேலும்....

கவிதை : சாதிக்குச் சாவு மணி

  ஓதிவைத்த அறநெறியை உதறித் தள்ளி  உலகோரைப் பிரிவினையில் வீழ்த்து கின்ற சாதியினைக் கருவியென ஏந்தி யுள்ளோர்  சாதிக்கப் போவதெது? சாற்று வீரா? தீதியற்றிக் குமுகாய நலனை வீணே  திட்டமிட்டுக் குலைக்கின்ற தியோர் தம்மை ஏதிலியாய் ஆக்கிடுவீர்! வெகுண்டே ழுந்தே  இருந்த இடம் தெரியாமல் அழிப்போம் வாரீர்!   அறிவியலும் அணுவியலும் ஏற்றம் நல்கும்  அறிவார்ந்த வாழ்வியலின் போக்கை மாற்ற வெறிபிடித்தே திரிகின்ற கூட்டத் தாரை  வீழ்த்திடுவோம்! வென்றிடுவோம்; காலம் எல்லாம் அறியாமை வறுமைகளின் குழியுள் ஆழ்ந்த […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (10)

இதய நோயும் மருத்துவமும் மரு.இரா.கவுதமன் ஆபத்தான நிலை: இயங்கிக் கொண்டே இருக்கும் இதயத்தில் திடீரென மின்னோட்டம் நின்று விடக்கூடும். இதை “இதயத்துடிப்பு முடக்கம்” (Sudden Cardiac Arrest) என்று கூறுவர். திடீரென ஏற்படும் இந்த நிலையில் இதயம் முழுமையாக நின்றுவிடும். இதனால் இரத்த ஓட்டமும் நின்று, மரணம் நிகழும். தொடர்ச்சியாக 10 நிமிடங்களுக்கு மேல் மூளைக்கு இரத்தம் செய்யாவிட்டால் மூளை செயலிழந்து விடும். (Brain Death). இதயத் துடிப்பு முடக்கம் மிகவும் ஆபத்தானது. எந்த அறிகுறியும் உண்டாகாமல், […]

மேலும்....