கவிதை : அறிவியக்கப் போர் மறவர்!

(ஆகஸ்ட் 7 கலைஞரின் இரண்டாமாண்டு நினைவுநாள்) முனைவர் கடவூர் மணிமாறன் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்; என்றும் மூப்பில்லா முத்தமிழின் அறிஞர்; அந்நாள் சென்னையினைத் தமிழ்நாடாய் ஆக்கி வைத்த செம்மல்நம் அண்ணாவின் உண்மைத் தம்பி! அன்றாடம் பெரியாரை நினைவில் கொள்ளும் அறிவியக்கப் போர்மறவர்! எதிலும் என்றும் முன்னணியில் நிற்கின்ற முனைப்புக் கொண்ட முத்துவேலர் அஞ்சுகத்தாய் அருமைச் செல்வர்!   நடந்தபல நிகழ்வுகளைக் கணினி போல நாட்டோர்கள் வியந்திடவே நவில்வார் நாளும் மடமையினைச் சாடிடுவார்! எழுத்தில் பேச்சில் மாற்றாரும் பாராட்டக் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில் … : இயக்க வரலாறான தன் வரலாறு (251) வைக்கத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தந்தை பெரியாரின் சிலைத் திறப்பு விழா

கி.வீரமணி   1994 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் ஜனவரி இறுதிக்குள் முதன்மையான கழகத் தொண்டர்கள் சிலரை அடுத்தடுத்து இழக்க நேர்ந்தது. திருக்குறளார் வி.முனுசாமி 4.01.1994 திருக்குறளார் வி.முனுசாமி அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியுற்றேன். “திருக்குறளார் அவர்கள் தமிழ்நாட்டின் சீரிய தமிழறிஞர். குறளை குவலயம் முழுவதும் பரப்புவதில் மிகப்பெரும் தொண்டு புரிந்தத் தமிழறிஞர் ஆவார். அவரது நகைச்சுவைப் பேச்சும், நா நயமும் எவரையும் ஈர்க்கச் செய்யும். எந்நாளும் நினைவில் நிற்கும். குறள் நெறி […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : நூற்றாண்டு காணும் பகுத்தறிவுப் பேரொளி நாவலர் வாழ்க! வாழ்க!

நடமாடும் பல்கலைக்கழகம் என்று பாராட்டப்பட்ட நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள், திராவிட இயக்கத் தூண்களாய் நின்ற முதன்மையானவர்களுள் ஒருவர். தந்தை பெரியாரின் கொள்கைகளை நமது இறுதி மூச்சு வரை பரப்பியவர். பின்பற்றியவர். அரசியல் கட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், பெரியார் வழியிலிருந்து பிறழாதவர். அவருக்கு இப்பொழுது நூற்றாண்டு. திராவிட இயக்கத்தவருக்கு இது திருவிழா! பெருவிழா! நாவலரின் சுயமரியாதைக் குடும்பம்: நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் சுயமரியாதைக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் தந்தையார் இராசகோபால் அவர்கள்  திராவிடர் கழகத்தின்பால் ஈர்க்கப்பட்டவர். பட்டுக்கோட்டை […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : நாம் பண்டிகை நடத்தும் கடவுள்கள்

தந்தை பெரியார் மாரியம்மன் நமது நாட்டில் நம்மால் வணங்கப்படும் கடவுள்கள் அத்தனையும், ஏன் எல்லாமுமே ஆரியக் கடவுள்கள் என்பதைப் பற்றிய உண்மையில் யாருக்குமே மறுப்பு இருக்காது. இந்தக் கடவுள்கள் ஆரிய கடவுள்கள் என்பது மாத்திரமல்லாமல், இக்கடவுள்கள் ஆண், பெண் கடவுள்கள். அதாவது மனைவி மக்கள், அவதாரங்கள், மூர்த்திகரங்கள் யாவுமே ஒழுக்கக் கேடு, நாணயக்கேடு, கற்புக் கேடு ஆகிய இழிவான குற்றங்களுக்கு உட்பட்டவையாகவே இருந்து வருகின்றன. இந்த விஷயங்களில் ஆரியர்களுக்கு மானம், வெட்கம், இழிவு இல்லையானதால், அவர்கள் அந்நடத்தைகளையே […]

மேலும்....

தலையங்கம்: எந்த நிலையிலும் பகுத்தறிவுக் கொள்கையில் மாறாத மாண்பாளர் நூற்றாண்டு காணும் நாவலரின் புகழ் ஓங்குக!

மாணவர் பருவந்தொட்டு திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, கடைசி மூச்சு அடங்கும் வரை பகுத்தறிவுக் கொள்கையில் மாற்றமில்லாத கொள்கை வீரர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டு விழாவில் அவர் புகழ் ஓங்குக!  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்  எழுதியுள்ள வாழ்த்து மடல்! தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் சென்ற ஆண்டிலேயே நாவலரின் நூற்றாண்டு விழாவை மிகவும் சிறப்புடன் நடத்தவேண்டும் என்று அறிக்கை விடுத்திருந்தது. ஆனால், கடந்த பல மாதங்களாகவே கரோனா – தொற்று பரவல் […]

மேலும்....