ஆய்வுக் கட்டுரை: புத்தமதமும் இந்திய சமுதாயமும்(1)

ந.ஆனந்தம் புத்தமதம் பிற மதங்களிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. அம்மதம், தம் உபதேசங்களை ‘கடவுள் இட்ட கட்டளை’ என்று சொல்வதில்லை. எந்தச் சடங்குகளையும் செய்யும்படி கூறவில்லை. புத்தமதம் ஒழுக்கத்தை மட்டுமே வலியுறுத்துகிறது. ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்தால் மக்கள் அமைதியாகவும், விவேகமாகவும் வாழ முடியும் என்கிறது. ஆழ்ந்த சிந்தனையாலும், தொலைநோக்குப் பார்வையாலும், ஞானத்தினாலும், செயல்பாடுகளின் மூலமாகவும் நாம் மனக்கவலைகளையும், துன்பத்தையும் வெற்றி கொள்ளலாம் என்று போதிக்கிறது. புத்தமதத்தின் பிரதான அறிவுரை என்னவென்றால், ஒவ்வொரு மனிதனும் மெய் காண்பதில் மிகுந்த ஆர்வமுடையவராக […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (62)

 சமஸ்கிருத்தை உயர்த்தி தமிழை அழிக்கும் ஆசிய பார்ப்பனர்கள் நேயன் இந்தியாவில் உள்ள 79 பல்கலைக் கழகங்களில் 63இல் சமசுக்கிருதம் பயில வாய்ப்பிருக்கின்றது. தமிழ் மொழியைச் சொல்லித் தர 12 பல்கலைக் கழகங்களே உள்ளன. தமிழைவிடச் சமசுக்கிருதம் பேசுபவர்கள் மிகுதியாக உள்ளனரா? இந்தியாவில் உள்ள நாலரைக் கோடி மக்கள் தமிழ் பேசுகின்றனர். சரியாகக் கணக்கிட்டால் ஏழு கோடிக்குக் குறையாது. (கணக்கெடுப்பவரிலும்? கணக்குப் பார்க்கும் அதிகாரிகளிலும் பெரும்பாலோர் தமிழர்க்கு மாறானவர்களாக இருப்பதால் இத்தகைய புள்ளி விளக்கங்கள் சரியாகவே இருப்பதில்லை). சமசுக்கிருதம் […]

மேலும்....

எதிர்வினை: திராவிடர் என்றால் ‘தீ’யாய் சுடுவது ஏன்?

(போலித் தமிழ் தேசியர்களுக்கு பதிலடு) கி.தளபதிராஜ் விடுதலை’ ஞாயிறு மலர் 21.6.2020 இதழில் பேராசிரியர் அருணன் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் பதிலளித்திருந்தார். “பெரியாரைச் சில தமிழ்த் தேசியர்கள் எதிர்ப்பது ஏன்? அவர்களை எதிர்கொள்வது எப்படி’’ என்பது தான் தோழர் அருணன் அவர்களுடைய வினா. “பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் வாழ்வு நீடிப்பதற்காக! இதற்கு முன் பெரியாரை எதிர்த்து எவ்வளவோ பேர் காணாமற் போய் உள்ளனர். இவர்கள் […]

மேலும்....

பெண்ணால் முடியும்: பணிப் புரிந்துக் கொண்டே சாதித்தப் பெண்!

கரோனா இந்தியா உட்பட உலகையே  உலுக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், குடகு மாவட்டம் கரோனா பரவலை அற்புதமாகக் கட்டுப்படுத்தியிருப்பதில் வெற்றிப் பெற்றிருப்பது அகில இந்திய அளவில் பேசப்படுகிறது. அதற்குக் காரணம் குடகு மாவட்டத்தின் துணை ஆட்சியராக இருக்கும் அய்.ஏ.எஸ் அதிகாரியான ஆனிஸ் கண்மணி ஜோய், மத்திய, மாநில அரசுகளும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் கண்மணியின் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டியுள்ளது. அடிப்படையில் கண்மணி ஒரு செவிலியர். கேரளாவில் மிகவும் ஏழ்மையான விவசாயிக்கு மகளாகப் பிறந்தவர். வறுமையில் வாடி வளர்ந்த அவரால் பள்ளி […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (12)

 இதயத்தமனி (அடைப்பு) நோய் (Coronary Artery Disease) மரு.இரா.கவுதமன் மாரடைப்பு காரணிகள்: (1) பரம்பரை நோயாக வரலாம். (2) அதிக மன அழுத்தம் (stress) (3) நீரிழிவு நோய் (diabetes) (4) அதிக அளவு கொழுப்பு சேர்தல் (Triglycerides) (5) அதிக குளிர்ச்சியில் தாக்கப்படும் நிலை (உயரமான இடங்களுக்கு செல்லும் நிலையில் – High attitude) (6) கடுமையான அலைச்சல் (7) அதிகமான உடல் உழைப்பு (அ) உடற்பயிற்சி போன்ற காரணங்களால் திடீரென்று மாரடைப்பு ஏற்படும். யாருக்கு […]

மேலும்....