நாடகம்: அதான பார்த்தேன்! (ஒரு குறுநாடக உரையாடல்)

பொன்.இராமச்சந்திரன்,பம்மல்   (சதாசிவ அய்யர், கோபால், சங்கர், காயத்ரி) சதாசிவ அய்யர்: (வராண்டாவில் உட்கார்ந்து கொண்டு காலையில் வந்த செய்தித்தாள்களைப் படித்துக் கொண்டிருக்கிறார். கோபால் வருகிறான்) என்னடா கோபால் உன் முகத்துல ஏதோ பரபரப்பு தெரியர்றது. என்ன விஷயம்? கோபால்: ஒன்னுமில்லே அத்திம்பேர். இன்னிக்கி பெரியார் திடல்ல தாலி அறுப்புப் போராட்டம் நடக்கப் போகுதாம். சிவசேனா, ஆர்.எஸ்.எஸ். எல்லாம் அங்கே போய் எதிர்ப்புத் தெரிவிக்கப் போறாள். நானும் அங்க போறேன். உங்ககிட்ட சொல்லிண்டு போக வந்தேன். சதாசிவ: […]

மேலும்....

கவிதை

பன்முகத்       திறன்மிகக் கொண்ட       தலைவர் பெரியார்      இட்ட  பெரும்பணி               முடிக்க சரியாய்த்     தேர்ந்த            நம்பக               மணியாய், அடுபகை      அழித்திடும் வாளா               யிருந்து தொடுபகை                தடுக்கும்        கேடய               முமாகி அடிமைத்       தளையை      உடைத்து       நொறுக்கிடும் ‘விடுதலை’          ஏட்டின்            ஆசிரி               யராக அய்ம்பத்        தெட்டாண்   டுகளைக்       கடந்தும், பொய்த்திரை           பொய்முகங்               கிழித்தே        அகவை அய்ம்பதைத்              தாண்டி           மெய்ம்மை   உணர்த்திடும் ‘உண்மை’             இதழை            வளர்த்திடும்              உரமாய், நுண்ணிய    நூல்பல           நுழைபுலம்  அடையப் பண்ணிடும்                பதிப்பகப்     பாங்கிலே    செம்மலாய், திண்ணிய    ராகித்               திராவிடர்     […]

மேலும்....

கட்டுரை : ‘ஆசிரியர்’ தினம் – டிசம்பர் 2

  ர(த்)த யாத்திரை தொடங்கியிருந்த காலம் அது. இன்றைய வேல் யாத்திரைக்காரர்களைப்  போலவே வேண்டாத வேலைகளைத் திட்டமிட்டு ஆரம்பித்து, மதவெறி நெருப்பைப் பற்ற வைத்து அரசியல் குளிர்காயும் அதே கூட்டத்தின் முந்தைய ‘வெர்ஷன்’தான் ரத யாத்திரை. இந்திய ஒன்றியத்தின் பிரதமராக சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் இருக்கிறார். அவரது பதவிக்கு வேட்டு வைத்து, சமூக நீதியை சிதறடித்து மனு நீதியைத் தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும் என்பதுதான் யாத்திரைக் கூட்டத்தின் இலக்கு. சமூக நீதியைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களாக […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில் …: இயக்க வரலாறான தன் வரலாறு(257)

உலகில் ஒப்பற்றது சுயமரியாதை இயக்கம்! கி.வீரமணி 4.2.1995 சேலம் மாவட்டம் மேச்சேரியில் ஜாதி ஒழிப்பு மாநாடு எழுச்சியோடு நடைபெற்றது. கழக இளைஞரணித் தோழர்கள் பங்கேற்ற வீதிநாடகம், சத்தியமங்கலம் முத்துவின் ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சியைத் தொடர்ந்து மேடையிலேயே சேலம் அர்த்தனாரி _ ஆராயம்மாள் ஆகியோரின் மகன் இராமுவுக்கும் சங்ககிரி வட்டம் சமுத்திரம் ஆரோக்கியசாமி _ பாக்கியம் ஆகியோரின் மகள் பிரகாசமேரிக்கும், ஜாதி மறுப்புத் திருமணத்தை நடத்த வைத்து வாழ்த்தினேன். 1957இல் சட்ட எரிப்புப் போரில் ஈடுபட்டு சிறையேகிய அம்மாப்பேட்டை […]

மேலும்....

முகப்புக் கட்டுரை: இனத்தைக் காத்து நிற்கும் இணையிலா வழிகாட்டி!

மஞ்சை வசந்தன் இன்றைய இந்தியப் பரப்பில் மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் வடக்கு, கிழக்கு, தென்கிழக்குப் பகுதிகளில் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அவர்களின் மொழியான தமிழும், அவர்களின் நாகரிகமும் உலகின் பல நாடுகளில் பரவி நின்றன. கடல் பயணம், கட்டுமானம், வானியல், மருத்துவம், பண்பட்ட வாழ்க்கையென்று பலவற்றிலும் மேலோங்கி நின்றவர்கள் தமிழர்கள். இந்நிலையில் தமிழர் வாழ் பகுதிகளில் அயல்நாட்டவரான ஆரியர்கள் பிழைக்க நுழைந்தனர். முதலில தமிழர்களிடம் பிச்சைபெற்று வாழ்ந்தவர்கள், பிறகு சிறுசிறு குழுக்ககளாக ஒன்று சேர்ந்து வாழ்ந்தனர். அயல்நாட்டிலிருந்து […]

மேலும்....