கட்டுரை: கீதையின் மறுபக்கம் ஒரு சிந்தாந்த பங்களிப்பு

-”மார்க்சிய அறிஞர்” அருணன் 1998இல் வெளிவந்த வீரமணியினுடைய கீதையின் மறுபக்கம் கீதை பற்றிய மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறிந்தது என்றும் சொல்லலாம், பெரியாரிய நோக்கில் சித்தாந்தத் துறைக்கு அவர் அளித்த பங்களிப்பு என்றும் சொல்லலாம். இது அவர் எழுதிய ஓர் முக்கியமான ஆய்வு நூல்; அதிகம் பேசப்பட்டது. 1999 மார்ச்சில் சென்னையில் இது பற்றி நடந்த ஆய்வரங்கில் அ.தி.மு.க. அவைத் தலைவர் நாவலர் நெடுஞ்செழியனும் கலந்து கொண்டார். கீதையின் சொல்லாட்சியில் மயங்காதவர்கள் அபூர்வம். மகாத்மா காந்தியும் மயங்கினார்; பாரதியும் மயங்கினார். […]

மேலும்....

கட்டுரை : வாழும்போதே கொண்டாடுவோம்!

-நம்.சீனிவாசன் உலகச் சரித்திரம் விரிவானது. மகத்தான சிந்தனையாளர்கள் தோன்றியிருக்கிறார்கள். புரட்சியாளர்கள் பிறந்திருக்கிறார்கள். தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், தியாக சீலர்கள், பண்பாளர்கள் இப்பூவுலகில் எல்லாக் காலங்களிலும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டார்களா என்பது கேள்விக்குறியே. தன்னிகரில்லாச் செம்மல்கள், வாழும்போது வறுமையில் வாடியிருக்கிறார்கள்; சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்; அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்; தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மறைந்த பின்தான் சமூகத்திற்கு அவர்களது மேன்மை புரிகிறது. வாழ்ந்த வீடு நினைவில்லமாக மாறுகிறது. உருவம், சிலையாக வடிவம் பெறுகிறது. பிறந்த நாள் விழா, […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்: இளைஞர்களைத் திரட்டுவோம்!

கே1:     1957ஆம் ஆண்டில் சட்ட எரிப்புப் போராட்டத்தின்போது பெரியார், குருசாமி இருவரும் சிறைசென்ற நிலையில் ‘விடுதலை’ ஆசிரியர் பொறுப்பை ஏற்றது யார்?                – மரகதமணி, வியாசர்பாடி ப1:        அந்தக் காலகட்டத்தில் ‘விடுதலை’யின் நிருவாகப் பொறுப்பில் _ அரசுத் துறையில் வணிகவரி அதிகாரியாக இருந்தவர், நீடாமங்கலம் எஸ்.சரவணன் பி.ஏ., அவர்கள் _ திராவிட மாணவர் கழகத்திலிருந்தே ஈடுபாடு கொண்டவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மதியழகன், இளம்வழுதி ஆகியோர் காலத்தில் படித்தவர். பிறகு அரசு அதிகாரியானவர்; சில மாதங்கள் விடுமுறை […]

மேலும்....

இலக்கியம் : வளம்பெற வழிகாட்டும் “வாழ்வியல் சிந்தனைகள்” ( ஒரு பார்வை )

– ழகரன் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவரால் ‘விடுதலை’ நாளேட்டில் எழுதப்படும் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நூலாகத் தொகுக்கப்பட்டு தொடர்ந்து வெளிவருகிறது. 2002ஆம் ஆண்டு எழுதத் தொடங்கி 2020ஆம்  ஆண்டின் இறுதியில் 15ஆம் தொகுதியை நமக்கு அளித்துள்ளார். நம் அன்றாட வாழ்வின் செயல்பாடுகள், உடல்நலம், உணவு முறை, உளவியல், மருத்துவம், இலக்கியம், அரசியல், சமூகவியல், பெண்ணியம், பொருளாதாரம், நிருவாகம், நேர மேலாண்மை, அறிவியல், வரலாறு, கலைத்துறை, சுற்றுச்சூழல், சட்டம், குழந்தைகள் மனவளம், பகுத்தறிவு, […]

மேலும்....

கட்டுரை : நமக்கு தித்திக்கும் நாள்

முனைவர் வா.நேரு நமது அன்பிற்கும் பெரும் மதிப்பிற்கும் உரிய நமது தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வரும் 2.12.2020 அன்று 88-ஆம்  பிறந்த நாள். தந்தை பெரியாரின் கொள்கையைப் பேசுவதால், எழுதுவதால், அதன்படி நடப்பதால் மரியாதை கிடைக்கிறது எனக்கு. நான் தந்தை பெரியாரை நேரில் பார்த்தவனல்லன். அவரது உரையை நேரிடையாகக் கேட்கும் வாய்ப்புப் பெற்றவனும் அல்லன். ஆனால், “‘எனக்கென்று சொந்தப் புத்தி இல்லை, தந்தை பெரியார் தந்த புத்தியே போதும்“ என்று தனது வாழ்வை, தனது […]

மேலும்....