சிறுகதை : கனவில் கீரதர்

(பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் – 15) பேரறிஞர் அண்ணா ஆனந்தத் தாண்டவமாடிக் கொண்டிருந்த, பரமசிவனாரின் செவியில், நாரதரின் தம்பூரும் நந்தியின் மிருதங்கமும் ஒலித்த சப்தமும், பக்தகோடிகள், அரகரா அற்புதம் – என்று பூஜிக்கும் சப்தமும், “ஆனந்த நடனமாடினார்’’ என்று பாடும் தேவமாதரின், கானமும் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் யாரோ விம்மி விம்மி அழும் சப்தமும் கேட்டது – ஐயன், ஆனந்தத் தாண்டவத்தை நிறுத்தி விட்டார் – யார் அழுகிறார்கள் – ஏன் இந்த விம்மும் குரல்? […]

மேலும்....

பெண்ணால் முடியும்: வறுமையை எதிர்த்து சாதனைப் புரிந்த பெண்

பெண்களின் கல்வி வளர்ச்சியால் நாட்டில் பல பெண்கள் சாதனைகளை மேலும் வெளிப்படுத்தி வருகின்றனர். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வரலாற்றில் இடம் பிடிக்கின்றனர். நீலகிரியிலுள்ள ஒரு குக்கிராமம் தேனாடு. அந்த கிராமத்திலிருந்து இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படிக்கக் கூடிய வாய்ப்பு மாணவி அனுப்பிரியாவுக்கு கிடைத்துள்ளது. அதுவும் உதவித் தொகையுடன் கூடியப் படிப்பு என்பது கூடுதல் சிறப்பு. நீலகிரி மாவட்டத்திலிருந்தும், படகர் சமுதாயத்திலிருந்தும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கக் கூடிய வாய்ப்புப் பெற்றுள்ள ‘முதல் மாணவி’ இவரே […]

மேலும்....

இயக்க வரலாறான தன் வரலாறு (251) – தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்

கி.வீரமணி 11.03.1994 தஞ்சை வல்லத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கழக விழா நடந்தது. அங்கு சமூக நீதிக் கொள்கையில் சாதனையை நிகழ்த்திய முதலமைச்சருக்கு பாராட்டு விழாவும், ரூ60 லட்சம் செலவில் தஞ்சை வல்லத்தில் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரிகள் முதல் கட்டமாக கட்டி முடிக்கப்பட்டது. அன்னை நாகம்மையார் பெயரில் அமைந்துள்ள மாணவியர் விடுதி திறப்பு விழாவும் சிறப்புடன் நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்ட தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தந்தை பெரியார் பெயரில் பல்கலைக் கழகமாக உயர […]

மேலும்....

முகப்புக் கட்டுரை: பிள்ளையார் அரசியல் தோற்றது

மஞ்சை வசந்தன் தமிழகத்தில் தினந்தோறும் கரோனா தொற்று 6000 என்னும் நிலையில் பரவி வரும் இந்தக் காலக்கட்டத்தில் உயிரிழப்புகள் தினந்தோறும் நூற்றுக்கு மேல் செல்லும் நிலையிலும் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர், முதலமைச்சரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து விநாயகர் ஊர்வலத்திற்கும், தெருவில் சிலை வைத்து வழிபடவும் அனுமதி கேட்டுச் செல்வது அவருடைய முதலாளிகள் சொல்லுவதைச் செய்யும் வேலை – நன்றிக் கடன். உண்மையில் பா.ஜ.க தலைவருக்கு மக்கள் மீது கவலையில்லை. நாட்டில் உள்ள பல பிரச்சினைகள் இடஒதுக்கீடு, […]

மேலும்....

பெரியார் பேசுகிறார்: பிள்ளையார் பிறப்பு

தந்தை பெரியார்   இந்து மதம் என்பதில் உள்ள கடவுள்களின் எண்ணிக்கை எண்ணித் தொலையாது – ஏட்டிலடங்காது என்பது போல், எண்ணிக்கைக்கு அடங்காத கடவுள்கள் சொல்லப்பட்டிருப்பது அத்தனை கடவுள்களுக்கும், புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை, பாட்டு முதலியன ஏற்படுத்தி இருப்பவை; அவற்றுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்குப் பல கோடிக்கணக்கான ரூபாய்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான நேரங்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான அறிவும் வெகுகாலமாய்ப் பாழாகிக் கொண்டு வருவது எவராலும் […]

மேலும்....