ஆசிரியர் பதில்கள் : உச்சநீதிமன்றமே சுட்டும் அவலம்!

கேள்வி: தி.மு.க பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து தங்கள் கருத்து என்ன?  – முத்து, ஈரோடு பதில்: தி.மு.க. பொதுக்குழு – இந்த கரோனா தொற்று அச்சுறுத்தும் சூழலில் அருமையாக காணொலி மூலம் உலகத்தையே கவர்ந்த, ஒழுங்குமுறை மிளிர்ந்த எடுத்துக்காட்டான ஏற்பாடு. அதில் நிறைவேற்றப்பட்ட அத்துணை தீர்மானங்களிலும் மக்களின் இதய ஒலியைச் சுட்டும் அருமையான திட்டங்களை வலியுறுத்தி, ஆட்சியயாளர்களைக் கண்விழிக்கச் செய்யும் முரசொலியாகும்! கேள்வி: ‘நீட்’ தேர்வு மாணவர் தற்கொலை தொடராமலிருக்க தாங்கள் மாணவர்களுக்கு கூறும் அறிவுரை என்ன? […]

மேலும்....

கட்டுரை: பெரியார் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

  பெரியோர் என்று பல மாமனிதர்களைச் சொல்வதுண்டு. ஆனால் பெரியார் என்றால், மூடப் பழக்கவழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து சமுதாய சமத்துவம் காணப் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களை மட்டுமே அடையாளம் காட்டி நிற்கும் சொல்லாகத் திகழ்கிறது.. அத்தகு பெருமைபெற்ற நம் அய்யா அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சுவையான நிகழ்ச்சிகளுள் சில: அய்யாவின் அறிவாற்றல் கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் அய்யா சொற்பொழிவாற்றினார். மொழிபெயர்ப்புப் பணிக்காக நமது “உண்மை’’ ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் உடன் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (62): பாரதி தமிழ் இலக்கணம் கற்றவரா?

நேயன் கால்டுவெல் அவர்களின் ஆய்வு நூலான ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலின் முதல் பதிப்பு 1856ஆம் ஆண்டிலேயே வெளிவந்தது. அதன் இரண்டாம் பதிப்பும் பாரதியின் காலத்திலேயே 1915ஆம் ஆண்டில் வெளிவந்தது. அப்படி இருந்தும், பாரதி கால்டுவெல் அவர்களின் நூலைப் பற்றி எங்குமே குறிப்பிடாதது மோசடியாகும். பாரதி போன்ற சமஸ்கிருதப் பற்றுக் கொண்ட பார்ப்பனப் பண்டிதர்களைக் பற்றி கால்டுவெல் கூறியதாவது. “திராவிட மொழிகள் வடஇந்திய மொழிகளி-லிருந்து பற்பல இயல்புகளில் வேறுபடுகின்றன. அவ்வாறிருந்தும் அத்திராவிட மொழிகள், வடஇந்திய மொழிகளைப் […]

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள் : அந்த தைரியம்

அறிஞர் அண்ணா கல்லூரி காணாத கிழவர்! காளைப்பருவம் முதல் கட்டுக்கடங்காத முரடர்! அரசியல் நோக்கத்துக்கான முறையிலே கட்சி அமைப்பு இருக்க வேண்டுமென்று அறியாத கிளர்ச்சிக்காரர்! பொதுமக்கள் மனம் புண்படுமே, புண்பட்ட மக்கள் கோபத்தால் தாறுமாறாக பேசுவரே; ஏன் வீணாக அவர்களின் ஆத்திரத்தைக் கிளப்ப வேண்டும் என்று யூகமாக நடந்துகொள்ள மறுப்பவர்! யார் யாரைத் தூக்கி விடுகிறாரோ, அவர்களாலேயே தாக்கப்படுபவர்! கவர்னரைக் காண வேண்டுமே, அதற்கேற்ற கோலம் வேண்டாமோ என்ற யோசனை அல்லவ! தமிழ், ஆங்கில தினசரிகளின் ஆதரவு […]

மேலும்....

வாசகர் மடல்

உண்மை சூன் 16- _ சூலை 15, 2020 படித்தேன். அதில் மானமிகு ஆசிரியர் அவர்கள் தலையங்கத்தில், இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையே ஆகும் என்கிறார். மருத்துவப் படிப்புகளில் பிற்படுத்தப்-பட்டோருக்குக் கிடைத்த இடம் “o’’ சட்டப் பிரிவுகள் தெளிவாக இருப்பதை நீதிபதிகள்தாம் ஏனோ தெளிவற்றவை என்கின்றனர். அரசமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்படுவதற்கே பாதுகாப்பில்லையா? இட ஒதுக்கீடு என்பது சமூகநீதி அடிப்படை உரிமை தான். 9ஆம் அட்டவணையில் இருப்பதற்கு… சமூக நீதிக்கு எதிராகவே _ வஞ்சகமாகவே மத்திய அரசு செயல்படுகிறது. […]

மேலும்....