முகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் !

மஞ்சை வசந்தன்  இலக்கியவாதிகள் எல்லோரும் புரட்சியாளர்களாய் மக்களின் ஏற்றத்தாழ்வுளை எதிர்த்து சமத்துவம் காண முயல்பவர்களாய் இருப்பதில்லை. ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஒரு சிலர் அப்படி சாதனைப் படைத்துள்ளனர். திருவள்ளுவர், கபிலர், சித்தர்கள் போன்றோர் தங்கள் இலக்கிய படைப்புகள் மூலம் மேற்கண்ட சாதனையைச் செய்துள்ளனர். 20ஆம் நூற்றாண்டில் அப்படியொரு சாதனையை நிகழ்த்தியவர் பாவேந்தர் அவர்கள். பாரதிக்குத் தாசன் என்று தன்னை அழைத்துக் கொண்டார்கள். பாரதியை விட புரட்சிச் சிந்தனைகளை, எழுச்சிக் கருத்துகளை இலக்கிய வழி பரப்பியவர் பாவேந்தர் அவர்கள். […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் :மே தினம்

மே தினம், அதாவது பிரதி வருஷத்திய மே மாத முதல் நாள் உலகமெங்கும் உழைப்பவர்-களால் பெருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கடைசியில், அமெரிக்க தேசத்தில், தொழிலாளர், கிருஷிகர் (விவசாயி) அடங்கிய மக்கள் 8-மணி நேரத்திற்கு மேல் தொழிற்சாலைகளிலும் வயல்களிலும், நிலங்களிலும் வேலை செய்வது அநீதி என்றும், அதனை வற்புறுத்துவது அதனினும் அநீதி என்றும், 8-மணி நேர உழைப்பே போதுமானதென்றும் ஒரு கிளர்ச்சி புறப்பட்டது. அக்கிளர்ச்சியை முதலாளிகள் அடக்க முயன்றனர். அவ்வடக்கு முறை, மே மாதம் முதல் […]

மேலும்....

தலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா?

கொரானா-19 (Covid-19) தொற்று நோய் என்ற கொள்ளை நோய் இதுவரை உலகம் முழுவதிலும் பரவி, பல லட்சக்கணக்கில் மனித உயிர்களைப் பலி கொண்டுள்ளது! இதற்கு இன்னமும் மருத்துவ விஞ்ஞானிகள் தடுப்பு – ஒழிப்பு மருந்து ஒன்றைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் முயற்சிகளை பற்பல நாடுகளும் செய்த வண்ணம் உள்ளன. விரைவில் வெற்றி பெறுவர் என்பது நம் நம்பிக்கை. உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் (12.5.2020 கணக்கின்படி) 42,27,245 பலியானவர்கள் – 2,85,260 குணம் அடைந்தவர்கள் – 15,12,700 இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் […]

மேலும்....

கார்ல் மாக்ஸ்

பிறந்தநாள்: 05.05.1818 உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், உங்களுக்காகப் பொன்னான ஓர் உலகம் காத்திருக்கிறது. ஏடறிந்த வரலாறு அனைத்தும் வார்க்கப் போராட்டத்தின் வரலாறே என்ற புகழ் பெற்ற வாக்கியத்தை ‘மார்க்ஸ்’ எழுதியது வரலாற்றின் பல திருப்பங்களுக்குக் காரணமானது.

மேலும்....

உங்களுக்கு தெரியுமா?

நீதிக்கட்சித் தலைவர் சர்பிட்டி தியாகராயர் அவர்கள் சென்னை மாநகர முதல் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கால கட்டத்தில்தான் சென்னை மாநகரில் கட்டாய ஆரம்பக் கல்வியும். பார்வையற்றோர் பள்ளியும், பிச்சைக்கார மறுவாழ்வு இல்லமும் உருவாக்கப்பட்டன என்ற வரலாற்றுச் செய்திகள் உங்களுக்கு தெரியுமா?

மேலும்....