இயக்க வரலாறான தன் வரலாறு(247) : சமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்!

அய்யாவின் அடிச்சுவட்டில் … கி.வீரமணி 8.4.1993 அன்று பட்டுக்கோட்டையிலும், 24.3.1993 அன்று ஆம்பூரிலும் நடைபெற்ற கழக வட்டார மாநாடுகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன். “மதவெறியை மாய்ப்போம்! மனிதநேயம் காப்போம்!’’ என்னும் முழக்கத்தோடு தொடங்கிய இம்மாநாடுகளில் தந்தை பெரியாரின் தொண்டைப் பற்றி எடுத்துரைத்தேன்.  நெ.து.சுந்தரவடிவேலு 12.4.1993 அன்று கல்வி நெறிக் காவலர் நெ.து.சுந்தரவடிவேலு மறைவுக்கு இரங்கல் அறிக்கையை ‘விடுதலை’யில் வெளியிட்டிருந்தோம். அதில், ‘‘தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம் வாழும் தமிழ் இளைஞர்களின் கல்விக் கண்ணை திறந்த கல்வி வள்ளல், நிரந்தர மதிப்புக்குரிய […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் – மாட்சிகளும்!

தியாகமே உருவான திராவிடத் தாய் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா.    அவர்களின் 42ஆம் ஆண்டு நினைவு நாளில் சென்னைப் பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் (16.3.2020 மாலை) சுயமரியாதைச் சுடரொளி பெங்களூரு சொர்ணா அரங்கநாதன் நினைவரங்கில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெகு நேர்த்தியாக நடைபெற்றது. பிற்பகல் முதலே தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக வந்து குவிந்தனர். பிற்பகல் 5 மணியளவில் மகளிர் சிறப்புக் கருத்தரங்கம் கொள்கைப் பரப்புச் […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் :ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி-!

தந்தை பெரியார் அம்பேத்கர் உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன? படிப்பு, திறமை, என்று சொல்வதெல்லாம் இரண்டாவதுதான். அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் அம்பேத்கர் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு, திறமை என்பவை மாத்திரமல்ல; அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற தன்மையில் இருப்பதால்தான் அவரை அறிவாளி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் படிப்புத் திறமையெல்லாம் வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகிறது. அம்பேத்கர் […]

மேலும்....

தலையங்கம் : கரோனா வைரசைத் தடுக்க முற்றிலும் தேவை அறிவியல் அணுகுமுறையே!

கரோனா வைரஸ் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனைகளை தமிழக அரசு உடனடியாக அமைப்பது மிக அவசியம் கரோனா வைரஸ் (Covid-19) என்ற தொற்று நோய் உலகமெங்கும் உள்ள நாடுகளில் கொள்ளை நோயாக மாறி உயிர்ப் பலிகள் வாங்கும் நிலையில், நம் நாட்டிலும் அதனைத் தடுப்பதில் ஒவ்வொரு தனி மனிதனின் ஒத்துழைப்பும், சுயக் கட்டுப்பாடும் மிகவும் அவசியம் என்பதை நம் மக்கள் உணர்ந்து போதிய ஒத்துழைப்பை அரசுகளுக்கும், காவல்துறைக்கும் தர வேண்டியது இன்றியமையாத ஒன்று. மூடநம்பிக்கைகளை பரப்பும் சுரண்டல் கூட்டத்தை அரசு தடுக்க வேண்டும் […]

மேலும்....