பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் எமரால்ட் எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி- 2020

விதிமுறைகள்: *  சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். * எழுத்தாளரின் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் ஏற்கப்படமாட்டாது. *  சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் மார்ச் 31, 2020. * வெற்றி பெற்ற சிறுகதைகளுக்கு புரட்சிக்கவிஞர் பிறந்தநாளான 2020 ஏப்ரல் 29 அன்று பரிசு வழங்கப்படும். * யூனிகோட் எழுத்துருவில் டைப் செய்து மின்னஞ்சலில் கதைகளை அனுப்பி வைக்கவேண்டும். * எழுத்தாளரின் உண்மைப் பெயர், முழு முகவரி, தொலைபேசி […]

மேலும்....

தகவல் களஞ்சியம்

“மனது’’ எங்கே இருக்கிறது? “மனது’’ (மனசு), மனசாட்சி, இரக்கம் போன்றவை பற்றி குறிப்பிடும்பொழுது எல்லோரும் இயல்பாக இதயம் இருக்கும் பகுதியைத் தொட்டுக் காண்பிப்பதைப் பார்க்கிறோம். காதலுக்கும், அன்புக்கும் அடையாளமாக இதயம் காண்பிக்கப்படுகிறது. “Oh, my sweet heart” என்றுதான் காதலர்கள் சொல்கிறார்களே ஒழிய, யாரும், “Oh, my sweet kidney” என்றோ, “Oh, my sweet brain” என்றோ யாரும் சொல்வதில்லை. அறிவுக்கு, மூளையைச் சுட்டிக்காட்டினாலும், அன்பு, பாசம், நேசம், இரக்கம், பரிவு, நட்பு, காதல் போன்ற உணர்வுகளுக்கு இதயமே […]

மேலும்....

நாடகம் : புது விசாரணை(5)

(ஒரு நாடகத் தொடர்) சிந்தனைச் சித்ரா மாண்பமை நீதிபதி நெடுஞ்செழியப் பாண்டியனின் விசாரணை நீதிமன்றத்தில் புது விசாரணை கோரியவர்களின் வாதங்களை கடந்த சில அமர்வுகளில் பார்த்தோம். இதோ அதன் தொடர்ச்சி: காட்சி 5 – நீதிமன்றம் மீண்டும் கூடுகிறது நீதிபதி நீதிமன்றத்திற்குள் நுழைந்து அவரது இருக்கையில் அமர்வதற்கு முன் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தனர். நீதிபதி: சென்ற அமர்வில் வாதிட்ட வழக்குரைஞர் புத்தியானந்தா தன் வாதத்தைத் தொடரலாம்; அதன் பின் வழக்குரைஞர் குல்லூகபட்டர் தமது பதில் வாதத்தை முன்வைக்கலாம். […]

மேலும்....

கவிதை : மூச்சுக்காற்றான “தாய்” நீ!

இப்புவியில் மனிதப்பற் றேயன்றி                 இனமொழிபொருட் பற்றென்னும் எப்பற்றும் எமக்கில்லை என்றறைந்த                 ஈடற்ற பெரியாரை முப்பொழுதும் தன்னலத்தைக் கருதாமல்                 முழுத்தொண்டு புரிபவரை முப்பத்து ஆண்டுகாலம் அகவைநீள                 மூச்சுக்காற் றான‘தாய்’நீ!   இருக்குமாஇவ் வியக்கமென எகிறியோர்தம்                 ஏளனத்தைத் துச்சமென்றீர்! இருக்கின்றேன் நானென்றே இயக்கமதை                 உருக்கரணாய்க் காத்து நின்றீர்! செருக்குற்றே அகன்றோரால் தாயுன்றன்                 சிறப்புகளைச் செப்ப வைத்தீர்! அருட்கொடையாய்ப் பெரியாரைச் சேர்ந்தெந்தம்                 அன்னைமணி அம்மையானீர்!   அன்னைக்கோர் இலக்கணமாய் எடுத்துக்காட்டாய் […]

மேலும்....